ஓடிடி-ல் வெளியாகியிருக்கும் ஈஸ்ட்மென் காலத்துப் படம்! – ‘மாறன்’ திரைப்பார்வை

தனுஷ் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் கூட்டணியில் தொடரி, பட்டாஸ் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகியிருக்கும் திரைப்படம் மாறன். இந்த முறை ‘ஹோம் தியேட்டரில்’. டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நேற்று(11 மார்ச்) மாலை 5 மணிக்கு வெளியாகியிருக்கிறது. படத்தை இயக்கியிருப்பவர் துருவங்கள் 16, மாஃபியா படங்களின் இயக்குநரான கார்த்திக் நரேன். மாறனின் கதை டிரெயிலரிலே சொன்னதுதான். ஓர் அரசியல்வாதியின் ஊழலை வெளிக்கொணரும் நேர்மையான ஊடகவியலாளன் ஒருவனின் போராட்டமே படம். என்ன ஊழல், எந்த அரசியல்வாதி என்பதும் அதை மாறன் … Read more

ஒன்றாக இருப்பது கலை – ஏஆர்.ரஹ்மான்

இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருது நாயகன் என அழைக்கப்படும் ரஹ்மான் உலக அளவிலும் புகழ் பெற்றவராக இருக்கிறார். தன்னுடைய குடும்பப் புகைப்படங்களை அவ்வளவாக சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டதில்லை. எப்போதவாது மகனுடன் இருக்கும் புகைப்படங்களையும், மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிடுவார். மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிடுவது அபூர்வம். இன்று தன்னுடைய 27வது திருமண நாளை முன்னிட்டு மனைவி சாய்ரா பானுவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒன்றாக இருப்பது ஒரு கலை…எல்லாப் … Read more

பிரபல நடிகருன் இணையும் வாணிபோஜன்…! என்ன படம் தெரியுமா…?

பிரபுதேவா நடிப்பில் உருவாகவுள்ள ‘ ரேக்ளா ’ படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பிரபல நடன இயக்குனராக இருக்கு பிரபுதேவா, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது ‘ வால்டர் ’ படத்தை இயக்கிய அன்பரசன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதையடுத்து பிரபுதேவா நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷின் … Read more

ஹாட் டாபிக் ஆன சமந்தாவின் 'ஹாட் டிரஸ்'

'பேமிலி மேன் 2' வெப் சீரிஸில் நடித்து பெயர் வாங்கிய பிறகு சமந்தா ஒரு முடிவோடு தான் இருக்கிறார் போலிருக்கிறது. திருமண பிரிவுக்குப் பின் அவர் இன்னும் அதிகமான கிளாமரில் வலம் வர ஆரம்பித்துவிட்டார். சமீப காலங்களில் சமந்தா வெளியிடும் போட்டோ ஷுட் புகைப்படங்களே அதற்கு சாட்சி. 'புஷ்பா' படத்திலும் ஒரு அதிரடி கவர்ச்சி நடனமாடி பலரையும் அதிர்ச்சியடைய வைத்தார். இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார் சமந்தா. … Read more

நான் இருக்கேன்மா… முத்துமணி மனைவிக்கு ஆறுதல் கூறிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்துக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் மதுரையை சேர்ந்த ரஜினிமுத்து என்ற ஏபி முத்துமணி. ரஜினியின் தீவிர ரசிகரான ரஜினிமுத்து, ரஜினிகாந்த் வீட்டின் பூஜை அறையில் தான் திருமணம் செய்து கொண்டார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இதனை அறிந்த ரஜினிகாந்த் அவரை போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்தார். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது மறைவு ரஜினியையும் … Read more

டுவீட் போட்டு டெலிட் செய்த கார்த்திக் நரேன்

தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, அமீர் மற்றும் பலர் நடித்த 'மாறன்' படம் நேற்று மாலை ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த மிக மோசமான படங்களில் இதுவும் ஒன்று என்றுதான் சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். படம் பற்றிய விமர்சனங்கள் வர ஆரம்பித்ததும் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் டுவிட்டரில் “ரைட்டு…உண்மைய அப்றோம் சொல்றேன்” எனப் பதிவிட்டு அதை சிறிது நேரத்தில் டெலிட் செய்துவிட்டார். … Read more

விவாகரத்திற்கு பிறகு மகளுடன் நடந்த பாச போராட்டம்: வைரலாகும் பாலாவின் வீடியோ..!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக சினிமா பிரபலங்கள் அடுத்ததடுத்து விவாகரத்து செய்வது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இமான் உள்பட ஒருசில சமீபத்தில் தங்கள் துணையை விவாகரத்து செய்துள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட்டாக இயக்குனர் பாலா தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக திகழும் பாலா, கடந்த 2004 ஆம் ஆண்டு முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிராத்தனா … Read more

தனுஷின் 'மாறன்' படம் எப்படி இருக்கு.?: ட்விட்டரில் சுட சுட வெளியான விமர்சனம்..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ மாறன் ‘. அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் … Read more

'ஹீரோக்களை தவிர மற்றவர்களை வேறுமாதிரி நடத்தினார்கள்' – நடிகர் மனோஜ் பாஜ்பாய்

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் புகழ் நடிகரான மனோஜ் பாஜ்பாய், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சினிமா துறை கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எப்படி மாற்றம் கண்டுள்ளது என்பதை பகிர்ந்துள்ளார். அதோடு அதற்கு முன்னதான சூழல் எப்படி இருந்தது என்பதையும் பகிர்ந்துள்ளார் அவர்.  “முன்பெல்லாம் கதாநாயகர்களை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமகன் போல நடத்தப்பட்டுள்ளனர். அதோடு அந்த புறக்கணிப்பு ஷூட்டிங் நடைபெறும் செட் தொடங்கி போஸ்டர், ரசிகர்கள் … Read more

மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்: விரைவில் டும் டும் டும்..!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர் கெளதம் கார்த்திக். இவர் நடிப்பில் அண்மையில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் வெளியானது. இந்நிலையில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை, கெளதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். … Read more