தனுஷின் 'மாறன்' படம் எப்படி இருக்கு.?: ட்விட்டரில் சுட சுட வெளியான விமர்சனம்..!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ மாறன் ‘. அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் குறித்து பலவிதமான எதிர்மறை விமர்சனங்கள் இணையத்தில் குவிந்து வருகிறது. நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் … Read more

'ஹீரோக்களை தவிர மற்றவர்களை வேறுமாதிரி நடத்தினார்கள்' – நடிகர் மனோஜ் பாஜ்பாய்

‘தி பேமிலி மேன்’ வெப் சீரிஸ் புகழ் நடிகரான மனோஜ் பாஜ்பாய், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது சினிமா துறை கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு எப்படி மாற்றம் கண்டுள்ளது என்பதை பகிர்ந்துள்ளார். அதோடு அதற்கு முன்னதான சூழல் எப்படி இருந்தது என்பதையும் பகிர்ந்துள்ளார் அவர்.  “முன்பெல்லாம் கதாநாயகர்களை தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் இரண்டாம் தர குடிமகன் போல நடத்தப்பட்டுள்ளனர். அதோடு அந்த புறக்கணிப்பு ஷூட்டிங் நடைபெறும் செட் தொடங்கி போஸ்டர், ரசிகர்கள் … Read more

மஞ்சிமா மோகனுடனான காதலை உறுதி செய்த வாரிசு நடிகர்: விரைவில் டும் டும் டும்..!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலங்களில் ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து சர்ச்சைகளில் சிக்கியவர் கெளதம் கார்த்திக். இவர் நடிப்பில் அண்மையில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படம் வெளியானது. இந்நிலையில் தன்னுடன் இணைந்து நடித்த மஞ்சிமா மோகனை, கெளதம் கார்த்திக் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களின் வரிசையில் உள்ளார். … Read more

சென்னை காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா- விக்னேஷ் சிவன்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நயன்தாரா தெரிவித்து இருந்தார் . இவர்கள் இருவரும் அடிக்கடி கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம் . இந்நிலையில் இன்று சென்னை காளிகாம்பாள் கோயிலில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி சாமி தரிசனம் செய்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நயன்தாரா தற்போது கனெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் … Read more

கின்னஸில் இடம்பிடித்த சின்னத்திரை குழந்தை நட்சத்திரம்!

அபியும் நானும் என்ற தொடரில் முகிலன் என்ற கதாபாத்திரத்தில் நித்திஷ் என்ற சிறுவன் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார். நடிக்கும் போது க்யூட்டாக சேட்டை செய்து மக்களை கவர்ந்து வரும் நித்தீஷ் தற்போது அதைவிட பெரிதாக சாதித்து கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். 7 வயதான முகிலன் 60 கார்டூன் கதாபாத்திரத்தின் பெயர்களை 60 நொடிகளில் வேகமாக கூறி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கார்டூன் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ள நித்தீஷ் … Read more

சந்தானத்துக்கு ஜோடியாகும் கன்னட நடிகை!

டிக்கிலோனா படத்தையடுத்து ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இப்படம் 2019ம் ஆண்டு ஏஜென்ட் சாய் சீனிவச அத்ரேய என்ற பெயரில் தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தை அடுத்து பிரசாந்த் ராஜ் என்பவர் இயக்கும் ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார் சந்தானம். இந்தப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அருண் விஜய் நடித்த தடம், ஜீவா- சிவா நடித்த கோல்மால் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த கன்னட நடிகை தன்யா ஹோப் சந்தானத்துக்கு … Read more

3ம் ஆண்டு திருமண நாள்; ஜாலியாக போட்டில் சுற்றி திரிந்த ஆர்யா- சாயிஷா!

கஜினிகாந்த் படத்தில் நடித்து வந்தபோது காதல் வயப்பட்ட ஆர்யாவும், சாயிஷாவும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்தில் அரியானா என்ற மகள் பிறந்தாள். இந்நிலையில் நேற்று ஆர்யா- சாயிஷா தம்பதியினர் தங்களது மூன்றாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்து உள்ளார்கள். அதோடு போட்டில் அவர்கள் ஜாலியாக சுற்றித் திரிந்தனர். அது குறித்த புகைப்படங்களை சாயிஷா வெளியிட்டுள்ளார். அதோடு ஆர்யாவுக்கு தனது திருமண நாள் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார். அதில், நான் … Read more

இசை ஆல்பம் மூலம் சினிமாவுக்கு வரும் ஆலியா ஹயாத்

திரைப்படத் துறையில் சாதிக்க விரும்புகிற நடிகர்களுக்கு குறும்படங்கள் விசிட்டிங் கார்டாக இருப்பது போன்று நடிகைகளுக்கு இசை ஆல்பம் விசிட்டிங் கார்டாக இருக்கிறது. அந்த வரிசையில் வருகிறார் மாடல் அழகியும், இசை கலைஞருமான ஆலியா ஹயாத். சரிகம நிறுவனத்திற்காக பி ரெடி பிலிம்ஸ் சார்பில் டோங்லி ஜம்போ தயாரித்திருக்கும் வீடியோ இசை ஆல்பம் 'அமோர்'. இந்த வீடியோ இசை ஆல்பத்தில், சிவகார்த்திகேயனின் 'டான்' படத்தில் அனிரூத்துடன் பாடிய ஆதித்யாவுடன் ஆடியிருக்கிறார் ஆலியா ஹயாத். பாடலை ஆதித்யாவே பாடி இருக்கிறார். … Read more

மறைந்த ரசிகர் முத்துமணி குடும்பத்திற்கு ரஜினி ஆறுதல்

ரஜினிகாந்துக்கு முதன்முதலாக ரசிகர் மன்றத்தை நிறுவிய மதுரை ஏ.பி.முத்துமணி கடந்த 2021 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி உயிரிழந்தார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தொலைபேசியில் முத்துமணியின் மனைவியை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் வரமுடியவில்லை எனவும் விரைவில் உங்கள் குடும்பத்தை … Read more

சினிமா தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு : ஒப்பந்தம் கையெழுத்தானது

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதன் அடிப்படையில் நேற்று சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே … Read more