மறைந்த ரசிகர் முத்துமணி குடும்பத்திற்கு ரஜினி ஆறுதல்

ரஜினிகாந்துக்கு முதன்முதலாக ரசிகர் மன்றத்தை நிறுவிய மதுரை ஏ.பி.முத்துமணி கடந்த 2021 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துமணி உயிரிழந்தார். இந்த செய்தி ரஜினி ரசிகர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தொலைபேசியில் முத்துமணியின் மனைவியை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார். தனக்கு உடல்நிலை சரியில்லாததால் நேரில் வரமுடியவில்லை எனவும் விரைவில் உங்கள் குடும்பத்தை … Read more

சினிமா தொழிலாளர்களுக்கு சம்பளம் உயர்வு : ஒப்பந்தம் கையெழுத்தானது

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதன் அடிப்படையில் நேற்று சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே … Read more

சினிமாவானது கிரிக்கெட் வீரர் பிரவின் தாம்பே வாழ்க்கை

மும்பையை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் பிரவீன் தாம்பே. பொதுவாக கிரிக்கெட் வீரர்கள், 18லிருந்து 25 வயதுக்குள் இந்திய அணிக்காக அறிமுகமாவிடுவார்கள். ஆனால் பிரவீன் தாம்பேவின் அறிமுகம் வித்தியாசமானது. கிரிக்கெட் மீது கொண்ட காதலால் தொடர்ந்து போராடி தனது 41வது வயதில் ஐபிஎல் போட்டியில் நுழைந்து, சுழற்பந்து வீச்சாளராக சாதனை படைத்தார். அவரின் கிரிக்கெட் போராட்டத்தை மையமாக வைத்து 'கெளன் பிரவீன் தாம்பே?' என்ற பெயரில் ஹிந்தியில் சினிமாவாகி உள்ளது. தாம்பேவாக ஸ்ரேயாஸ் தல்படே நடித்திருக்கிறார். இதில் ஆஷிஷ் … Read more

கலையரசனின் குதிரைவால் டிரைலர் வெளியானது!

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கார்த்திக்கின் நண்பராக நடித்தவர் கலையரசன். அதன்பிறகு பல படங்களில் நாயகனாக நடித்தவர் தற்போது பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஷன்ஸ் தயாரித்துள்ள குதிரைவால் என்ற படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். மார்ச் 18ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த உலகம் ஒரு மேத்தமெடிக்ஸை வைத்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற தொடங்கும் இந்த டிரைலரில் நிஜ வாழ்க்கையும் கனவும் கலந்து சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு கலையரசனுக்கு குதிரைவால் முளைத்துவிடுகிறது. இதனால் அவருக்கு ஏற்படும் … Read more

மறுபடியும் வேலையை காட்ட ஆரம்பித்த சிம்பு: அப்செட்டில் பிரபல தயாரிப்பாளர்..!

சிம்புவின் கம்பேக் படமாக வெளியான ‘மாநாடு’ ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்து. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இதனையடுத்து சிம்புவின் அடுத்தடுத்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மிஸ்டர் பர்பெக்ட் என சொல்லும் அளவிற்கு சிம்புவின் செயல்பாடுகள் மாறியுள்ளனர். தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளைஎல்லாம் உடைந்தெறிந்து வருகிறார். ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் உடல் எடைக்காக அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு … Read more

சினிமா கதை திருட்டை மையமாக வைத்து தயாராகி உள்ள படம்

கதை திருட்டு என்பது சினிமாவில் நடந்து வருகிற ஒன்று. அதையே மையமாக வைத்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். படத்தின் தலைப்பு படைப்பாளன். தியான் பிக்சர்ஸ் சார்பில் நட்சத்திரம் செபஸ்தியான் தயாரித்துள்ளார். தியான் பிரபு இயக்கி, நடித்துள்ளார். காக்கா முட்டை ரமேஷ், விக்கி மற்றும் பாடகர் வேல்முருகன், அஸ்மிதா, மனோபாலா, சதுரங்க வேட்டை வளவன், நிலோபர், அருவி பாலா, ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், இயக்குனர் தருண்கோபி, திருச்சி வேலுசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். வேல்முருகன் ஒளிப்பதிவு … Read more

பாலா – முத்துமலரை சேர்த்து வைக்க பாடுபட்ட சிவக்குமார்: கடைசியில் நடந்தேறிய சோகம்..!

இயக்குநர் பாலாவுக்கும், தேனியை சேர்ந்த முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் வைத்து பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பிரார்த்தனா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பாலா , முத்துமலர் இருவரும் தற்போது விவாகரத்து பெற்றுள்ளர். தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்கள் திடீரென தங்கள் விவாகரத்தை அறிவிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகைகள் சமந்தா, அமலாபால், நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இமான் உள்பட ஒருசில … Read more

அண்ணன் செல்வராகவனை கட்டிப்பிடித்து பாசத்தை வெளிப்படுத்திய தனுஷ்!

செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ள தனுஷ், தற்போது நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷ் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். இதுகுறித்த போஸ்டரை ஏற்கனவே வெளியிட்டிருந்தார் செல்வராகவன். மேலும், நேற்றைய தினம் சாணிக்காயிதம் படத்தில் செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தனுஷ் … Read more

வளர்ந்த நடிகர்களே இதெல்லாம் பண்ண மாட்டாங்க: கவினை எச்சரிக்கும் ரசிகர்கள்..!

பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடிப்பில் உருவான ‘லிஃப்ட்’ படம் கடந்தாண்டு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் கவின் . கவின் நெல்சன் திலீப்குமாரின் படங்களில் ஏற்கனவே உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி … Read more

சிக்கலுக்கு பின் வெளியான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம்: தாமதத்துக்கான காரணம் என்ன?

பல்வேறு சட்ட சிக்கல்களை தாண்டி, விவேக் அக்னி ஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்களான அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான பாலிவுட் படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பிரபல இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். காஷ்மீரில் வாழும் பண்டிட்கள் மற்றும் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் … Read more