இறுதிக்கட்டத்தில் சர்தார்

கார்த்தி தற்போது நடித்து வரும் படம் சர்தார். இதனை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். இதில் கார்த்தி அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். யூகி சேது, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள். கொரோனா பிரச்சினைக்கு பிறகு கொடைக்கானலில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்டமாக மொத்த குழுவும் மைசூருக்கு சென்றுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது மைசூரில் … Read more

மனைவியுடன் பின்லாந்துக்கு ஜாலி டிரிப் அடித்த ராம்சரண்

ராம்சரண் நடித்து வந்த ஆர்ஆர்ஆர் படம் வெளிவர இருக்கிறது. தந்தையுடன் நடித்து வந்த ஆச்சார்யா படம் நிறைவடைந்திருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளும், அது முடிவுக்கு வந்ததும் பிசியாக படப்பிடிப்பிலும் இருந்த ராம் சரண் ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்டு பின்லாந்துக்கு சுற்றுலா சென்று விட்டார். மனைவி உபாசனாவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இருவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் இந்த தம்பதிகள் … Read more

7 மொழியில் உருவாகும் ஸ்ரேயா படம்

மழை, திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, கந்தசாமி, உத்தம புத்திரன், தோழா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா சரண். தெலுங்கு, இந்தியில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆண்ட்ரூ கொசசேப் என்கிற ரஷியரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவ்வப்போது வந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு போகிறார். நரகாசுரன், சண்டக்காரி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் அவர் கப்ஜா என்ற பான் இண்டியா படத்தில் நடித்து வருகிறார். … Read more

நடிப்பில் கவனம் செலுத்தும் வினித் ஸ்ரீனிவாசன்

மலையாள குணசித்ர நடிகர் சீனிவாசின் மகன் வினித் சீனிவாசன். நடிகராக அறிமுகமான வினித் சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் காமெடி வேடத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு இயக்கத்தில் கவனம் செலுத்த தொடங்கினார். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், தட்டயன் மறையத்து, ஒரு வடக்கன் செல்பி, தீரா, ஜாக்கப்பிண்ட சுயராஜ்யம் உள்பட பல படங்களை இயக்கினார். கடைசியாக ஹிருதயம் படத்தை இயக்கினார். இதில் மோகன்லால் மகன் பிரணவ், லிஸி மகள் கல்யாணி நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் நடிப்பின் … Read more

ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்த வரலட்சுமி

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. முறைப்படி மேற்கத்திய நடனம் பயின்ற வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, மிஸ்டர்.சந்திரமவுலி, சண்டக்கோழி 2, சர்கார், நீயா 2, வெல்வெட் நகரம், கன்னிராசி உள்பட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தெனாலி ராமகிருஷ்ணா பிஏபிஎல், நான்தி, படங்களில் நடித்த அவர் தற்போது யசோதா, ஹனுமான், இன்னும் தலைப்பிடப்டாத கோபிநாத் படங்களில் … Read more

சிம்பு வழக்கில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் அபராதம்

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016ம் ஆண்டு வெளியான படம் அன்பானவன் அடங்காதவன் அசராதவன். இந்தப் படத்தில் நடிக்க சிம்புவுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, 1 கோடியே 51 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி 6 கோடியே 48 லட்சம் ரூபாயை பெற்றுத்தரக் கோரி சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் அளித்திருத்திருந்தார். அதேசமயம், இந்த படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் இருந்து வசூலித்து தரக் கோரி … Read more

எனக்கும் பாலியல் டார்ச்சர் இருந்தது: லட்சுமி மஞ்சு பரபரப்பு

சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பதாக பல நடிகைகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். மீ டூ புகார் அளித்து பரபரப்பு ஏற்படுத்தினார்கள். தயாரிப்பாளர் முதல் பாடல் ஆசிரியர் வரை மீ டூ புகாரில் சிக்கினர். சினிமாவில் செல்வாக்கு மிக்க புன்புலத்தில் இருந்து வந்த நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை இருந்தது என்று கூறி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் சினிமாவின் பெரிய ஆளுமையான சரத்குமாரின் மகள் வரட்சுமி ஒரு தொலைக்காட்சியின் உயர் அதிகாரி தன்னை … Read more

இனி கார், பைக் ஓட்ட போவதில்லை : யாஷிகா அதிரடி அறிவிப்பு

வெள்ளித்திரையில் அடல்ட் காமெடி படத்தில் அறிமுகமானாலும் கூட, சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ரசிகர் வட்டத்தையும் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த்.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டிருந்தபோது, யாஷிகா ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளாகி உடன் பயணித்த அவரது தோழி மரணம் அடைந்தார்.. காலில் அடிபட்ட யாஷிகா ஆனந்த் தீவிர சிகிச்சைக்கு பிறகு தற்போது குணமடைந்து வழக்கம்போல தனது … Read more

ராஷ்மிகாவின் முதல் ஹிந்தி படம் ஜூனில் வெளியாகிறது

தென்னிந்திய படங்களில் பிசியாக நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, ஹிந்தியில் மிஷன் மஞ்சு என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார். சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை சாந்தனு இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதை அடுத்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது மிஷன் மஞ்சு படம் வருகிற ஜூன் மாதம் 10-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமிதாப்பச்சனுடன் இணைந்து குட்பை என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படம் அப்பா-மகள் … Read more

பாலாவை பாதித்த அந்த விஷயம்..!விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணமா ?

1999 ஆம் ஆண்டு சேது என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் பாலா . அப்படம் மாபெரும் வெற்றிபெற்றது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் தட்டி சென்றது. ஆனால் அந்த படம் வெளியாவதாற்கு பல போராட்டங்களை சந்தித்தனர் படக்குழுவினர். அதற்கு முன் பல ஆண்டுகளாக நடித்துவந்த விக்ரம் தனது முதல் வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்தார். அதுபோல பாலாவிற்கு இது முதல் படம் என்பதால் இப்படத்தின் மூலம் வெற்றியை பெற்று முத்திரை பதிக்க முயற்சித்துக்கொண்டிருந்தார். இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக … Read more