Nayanthara:விக்னேஷ் சிவனை வைத்து சிம்புவை பழிவாங்கிய நயன்தாரா?

சிம்புவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்தது அனைவருக்கும் தெரியும். அவர்கள் நெருக்கமாக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. சிம்புவுடன் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார் நயன்தாரா . அதன் பிறகு பிரபுதேவாவை காதலித்தார். அந்த காதலும் முறியவே, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்கத் துவங்கினார். விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறக் கூட முடிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் பழைய காதல் பற்றி பேசப்படுகிறது. அதாவது, சிம்புவை பழிவாங்கவே … Read more

இணையத்தில் வைரலாகும் அஜித் மகள் புகைப்படங்கள்

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்த ஷாலினி முதன்முதலில் அமர்க்களம் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தின் மூலம் அஜித்துக்கும், ஷாலினிக்கும் இடையே காதல் ஏற்பட்டது . இதன்பிறகு மாதவனுடன் அலைபாயுதே, பிரசாந்துடன் பிரியாத வரம் வேண்டும் போன்ற படங்களில் நடித்த ஷாலினி, அஜித்தை திருமணம் செய்த பிறகு வேறு எந்த படத்திலும் நடிப்பதை தவிர்த்துவிட்டார் . அஜித் மற்றும் ஷாலினி இருவரும் சமூகவலைத்தளங்களை விரும்பாமலே இருந்து வருகின்றனர். அதனால் அஜித் … Read more

மீண்டும் சர்ச்சைகளில் சிக்கும் சிம்பு..குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகர் சிம்பு தற்போது தான் சற்று சர்ச்சைகளுக்கு ஓய்வு கொடுத்து தன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றார். ஆனால் அவர் சர்ச்சைகளுக்கு ஓய்வு விட்டாலும் சர்ச்சைகள் அவரை விடாது போல. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியினால் சிம்புவின் மார்கெட் மளமளவென உயர்ந்துள்ளது. அதன் காரணமாக தற்போது பல படங்களில் நடிக்க கமிட் ஆகிவருகின்றார். சிம்பு பல பிரச்சனைகளில் சிக்கினாலும் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்தவண்ணம் தான் இருந்தன. அதற்கு காரணம் சிம்புவின் திறமை தான். எப்படிப்பட்ட காட்சியாக … Read more

எதற்கும் துணிந்தவன் விமர்சனம்: சூர்யாவுக்கும், பாண்டிராஜுக்கும் ஹாட்ரிக்… ஆனா பிரச்னை என்னன்னா?!

எல்லோரும் நிம்மதியாக வடநாட்டிலும் தென்னாட்டிலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு பெண்ணின் மரணம் இரு ஊர்களுக்கும் இருக்கும் சுமூக உறவை அசைத்துப் பார்த்துவிடுகிறது. தொடர் தற்கொலைகள், விபத்துகள், காணாமல் போனவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பெண்களின் லிஸ்ட் நீண்டுக்கொண்டே போக, ஊரின் நல்லது கெட்டதில் கலந்துகொள்ளும் வக்கில் கண்ணபிரான் இதற்கான காரணத்தை கண்டறிகிறார். இவற்றைச் செய்யும் கும்பலைத் தடுத்தி நிறுத்த அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’. எதற்கும் துணிந்தவன் கண்ணபிரானாக சூர்யா. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு … Read more

22 ஆண்டுகள் – குஷ்பு மகிழ்ச்சி

நடிகை குஷ்பு கடந்த 2000ல் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர். நேற்று தனது 22வது திருமண நாளை கொண்டாடிய குஷ்பு, ‛‛என் வாழ்நாளில் பாதியை உங்களுடன் கழித்திருக்கிறேன். இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது. உங்களை காதலிக்கிறேன். உங்களுடனான வாழ்க்கை மகிழ்ச்சியானது. திருமண நாள் வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுகள் செல்ல வேண்டும்'' என கணவர், மகள்களுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

சின்னத்திரைக்கு திரும்பும் பிக்பாஸ் ராஜூ

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்று டைட்டில் பட்டம் வென்றார். அதன்பின் சில தினங்கள் கழித்து சில பேட்டிகளில் பேசிய ராஜூ, இனி சீரியல்களில் நடிக்கப் போவதில்லை எனவும், சினிமாவில் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால், ராஜூக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த ஒரு சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ரசிகர்களும் ராஜூவை கத்தி கேரக்டரில் பார்க்க ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் அவர், 'நாம் இருவர் நமக்கு இருவர் … Read more

சிரஞ்சீவி, பாலையா, பிரபாஸ் படங்களின் நாயகி… டோலிவுட்டில் ஸ்ருதி ஹாசன் இப்போ ரொம்ப பிஸி!

நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் தெலுங்கு சினிமாவுக்கு லக்கி சார்ம் என்றே சொல்லலாம். இவர் தெலுங்கில் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். உதாரணத்திற்கு, பவன் கல்யாணுடன் நடித்த ‘கப்பர் சிங்’, ரவிதேஜாவுடன் ‘பலுபு’, ராம் சரணுடன் ‘எவடு’, மகேஷ்பாபுவுடன் ‘ஶ்ரீமந்துடு’, அல்லு அர்ஜுனுடன் ‘ரேஸுகுர்ரம்’ ஆகியவை. சமீபத்தில், கோபிசந்த் இயக்கத்தில் ரவி தேஜாவுடன் இவர் நடித்த ‘க்ராக்’ படமும் நல்ல ஹிட். ஏற்கெனவே, பவன் – ஸ்ருதி ஜோடி ஹிட்டடித்ததால், ‘வக்கீல் சாப்’ படத்தில் … Read more

மீண்டும் வட சென்னை பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – வெளியான தகவல்

மீண்டும் வட சென்னை பெண்ணாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்திற்கான பூஜை போடப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் நடித்து வெளியான ‘காக்கா முட்டை’, ‘கனா’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘டிரைவர் ஜமுனா’, ‘மோகன்தாஸ்’, ‘தீயவர் குலைகள் நடுங்க’ உள்ளிட்ட படங்களில் நடித்து … Read more