" `பேட்ட', `மாஸ்டர்'க்கு அப்பறம் தனுஷ் சொல்லிதான் `மாறன்' வாய்ப்பு கிடைச்சது!"- மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன் – குறுகிய காலத்தில் பெரும் இளைஞர் கூட்டத்தை தன் ரசிகர்களாக மாற்றியவர். ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ எனத் தமிழில் தொடக்கமே ரஜினி, விஜய் படங்கள் அமைந்ததைத் தொடர்ந்து தற்போது தனுஷூடன் அவர் நடித்த ‘மாறன்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. ‘மாறன்’ படம் குறித்து மாளவிகா மோகனன் நம்மிடையே குறித்து பகிர்ந்து கொண்டார். மாளவிகா மோகனன் மலையாளத்துலதான் உங்க முதல் என்ட்ரி… அந்த வாய்ப்பு எப்படிக் கிடைச்சது? “என்னோட அப்பா ஒளிப்பதிவாளர். சின்ன … Read more

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் புதிய சாதனை – விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் யூ-டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ‘மாநகரம்’, ‘கைதி’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயுடன் கைகோர்த்து லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா காலத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன், கொரோனாவால் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவிற்கு புது நம்பிக்கையை ‘மாஸ்டர்’ திரைப்படம் அளித்தது. அனிருத் … Read more

டிமான்ட்டி காலனி இரண்டாம் பாகம் உருவாகிறது

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது . அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான முதல் படம் இது. தமிழ் சினிமாவின் வெளியான ஹாரர் படடங்களில் முக்கியமான படம் டிமாண்டி காலனி. இந்நிலையில் தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அருள்நிதியே நாயகனாக தொடரலாம் என்றும், ஆனால் இயக்குனர் மட்டும் மாறலாம் என கூறப்படுகிறது. இது குறித்த … Read more

சிம்புவை பழிவாங்கினாரா நயன்தாரா ? இது என்ன புது கதையா இருக்கு..!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் தோல்வியில் துவண்டிருந்த நேரத்திலும், மூன்று ஆண்டுகள் படமே வெளியாகவிட்டாலும் ரசிகர்கள் இவரை கைவிட்டதில்லை. அந்த அளவிற்கு ரசிகர்கள் இவரின் மேல் அன்புகொண்டிருந்தனர். அந்த அன்பின் வெளிப்பாடுதான் தற்போது சிம்புவை பழைய நிலைக்கு திருப்பியுள்ளது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றி, டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், பிக் பாஸ் தொகுப்பாளர் என அசத்தி வருகிறார் சிம்பு. ஆனால் சிம்புவிற்கு திருமணம் ஆகவில்லை என்பதே தற்போது சிம்புவின் … Read more

'ஆர்ஆர்ஆர்' – அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் சாதனை

ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா, ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் மார்ச் 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் பிரிமீயர் காட்சிகள் அமெரிக்காவில் 24ம் தேதியே நடைபெற உள்ளது. அதற்கான முன்பதிவு ஏற்கெனவே ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஒரு புதிய சாதனையையும் படைத்துள்ளது. பிரிமீயர் காட்சிகளின் வசூலாக முதல் முறையாக ஒரு இந்தியத் திரைப்படம் 8 லட்சம் யுஎஸ் … Read more

பாலா, மனைவி பிரிய என்ன காரணம்?: வெளியான திடுக் தகவல்

இயக்குநர் பாலாவுக்கும், தேனியை சேர்ந்த முத்துமலருக்கும் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி மதுரையில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. சிலை மாதிரி மனைவி கிடைத்திருக்கிறார் என்று பலரும் தெரிவித்தனர். பாலா, முத்துமலர் தம்பதிக்கு பிரார்த்தனா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து விவாகரத்து பெற்றுவிட்டனர். இது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது, பாலாவும், முத்துமலரும் பிரிந்ததில் ஆச்சரியம் இல்லை. இது எதிர்பார்த்தது தான். கடந்த சில ஆண்டுகளாகவே … Read more

தெலுங்கு பிக்பாஸில் பிந்து மாதவி

பொக்கிஷம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி, தொடர்ந்து வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், சவாலே சமாளி, ஜாக்சன் துரை உள்பட பல படங்களில் நடித்தார். தமிழ் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். தற்போது பகைவனுக்கு அருள்வாய், யாருக்கும் அஞ்சேல், மாயன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தமிழைப் போல தெலுங்கு டிஜிட்டலில் 24 மணி … Read more

திடீரென ஹேப்பியாக நன்றி சொன்ன ஐஸ்வர்யா… ஏன் தெரியுமா?

ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்ததில் இருந்து இருவர் குறித்தும் நாள்தோறும் ஏதாவது ஒரு செய்தி வெளியான வண்ணம் உள்ளது. கணவரை பிரிந்து பிறகு வேறு வாழ்க்கையை தேர்வு செய்துள்ளார் ஐஸ்வர்யா . அக்ஷய்குமார் வீட்டில் நிகழ்ந்த மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்! சமந்தா செய்த அந்த காரியம்… அதிர்ச்சியில் வாயடைத்துப்போன மாஜி கணவரின் குடும்பம்! ஆல்பத்தை இயக்கும் பணியில் இறங்கியுள்ளார். இதனிடையே சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தொடர்ந்து வேலையில் கவனம் … Read more

இறுதி கட்டத்தில் வல்லான்

சுந்தர்.சி நாயகனாக நடித்து வரும் படம் வல்லான். விஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர்.மணிகண்டராமன் தயாரிக்கிறார், மணி சேயோன் இயக்குகிறார். சுந்தர்.சியுடன் ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோரும் நடிக்கின்றனர். மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். … Read more