தொடங்கியது `துருவ நட்சத்திரம்' டப்பிங்… விக்ரம் – கௌதம் மேனன் கூட்டணி திரையில் எப்போது?

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படம் கடந்த 2017ம் ஆண்டு துவங்கியது. இப்படத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், பார்த்திபன், அர்ஜுன் தாஸ், ராதிகா உள்பட பலரும் நடித்துள்ளனர். முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு துருக்கியில் ஆரம்பித்து, சில நாடுகளில் நடந்தது. த்ரில்லர் ஜானரான இந்தக் கதையை ரஜினியிடம்தான் முதலில் சொன்னார் கௌதம். ரஜினிக்கும் இந்தக் கதை பிடித்திருந்தது. ஆனால், ஏனோ டேக் ஆஃப் ஆகவில்லை. அந்தக் கதையில்தான் விக்ரம் கமிட் ஆனார். … Read more

’இது 2K Kid-களின் காதல் கதை’ – கவின் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

நடிகர் கவினின் புதிய பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சூப்பர் ஹிட் அடித்த ‘மனம் கொத்தி பறவை’, ராஜுமுருகனின் கவனம் ஈர்த்த ‘ஜிப்ஸி’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் கவின் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தினை, ’கடாரம் கொண்டான்’, ‘இரை’ வெப் சீரிஸை இயக்கிய இயக்குநர் ராஜேஷ் எம் செல்வாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கணேஷ் கே பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் பொழுதுபோக்குடன் இப்படம் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவின் … Read more

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான் காலமானார்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் மிட்செல் ரியான். லெதர் வெப்பன், லையர் லையர், மேக்னம் போர்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார், இவர் நடித்த டார்க் ஷேடோஸ், தர்மா அண்ட் கிரேக் வெப் தொடர்கள் உலக புகழ் பெற்றவை. 88 வயதான மிட்செல் முதுமை காரணமாக நடிப்பில் இருந்து விலகி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இதயநோயால் பாதிக்கப்பட்ட அவர் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் … Read more

'Request accepted' விரைவில் பணிகள் தொடங்கும்… ஏஆர் ரஹ்மானுக்கு ஓகே சொன்ன இளையராஜா!

‘துபாய் எக்ஸ்போ’நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த இசைக் கச்சேரியுட் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் அனிருத், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரின் இசைக் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கடந்த 5ஆம் தேதி இளையராஜாவின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. இதில் இளையராஜாவும் கலந்துகொண்டு பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை சந்தோஷப்படுத்தினார். நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா திடீரென்று சென்றுள்ளார். அப்போது இளையராஜாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது டிவிட்டர் … Read more

"எப்போதும் வில்லன் வேஷமே தர்றாங்க…"- நம்பியாரின் மனைவி ருக்மணி அம்மாள்! #HBDNambiar

சுருள் முடி, விரிந்த கண்கள், மிரட்டும் மொழி, கைகளைப் பிசைந்தபடி திரையில் வில்லத்தனமாகத் தோன்றும் நம்பியாரின் இன்னொரு முகம் மிக நிதனமானது. சுற்றியிருப்பவர்களை எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பவர். நம்பியாரைப் பற்றி அவரது மனைவி ருக்மணி அம்மாள் அளித்துள்ள பேட்டியில் அறிய கிடைக்கும் நம்பியார் திரைக்கு சிறிதும் தொடர்பில்லாதவராக இருக்கிறார். 27.07.1969 தேதியிட்ட விகடன் இதழில் வெளிவந்திருக்கும் பேட்டியிலிருந்து சில பகுதிகள்… “படப்பிடிப்புக்கு போய்ட்டு வந்ததும் நம்பியார் எப்படி இருப்பார்?” “ரொம்ப ப்ரீயா இருப்பார். படப்பிடிப்பிலே என்னென்ன … Read more

”விரைவில் இசைப் பயணத்தைத் தொடரலாம்” : ரஹ்மானுக்கு பதிலளித்த இளையராஜா

‘துபாய் எக்ஸ்போ 2020’ நிகழ்ச்சிக்காக துபாய் சென்றுள்ள இளையராஜா ஏ.ஆர் ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தபோது ”எங்கள் ஸ்டூடியோவுக்காக ஏதேனும் இசை அமைப்பார் என நம்புகிறேன்” என்று இளையராஜாவிடம் ஏ.ஆர் ரஹ்மான் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கைக்கு இன்று பதிலளித்துள்ளார் இளையராஜா. துபாயில் நடைபெறும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த இசைக்கச்சேரிக்கு பிறகு, துபாயில் உள்ள ஏ.ஆர். … Read more

ஹிந்தி நடிகையுடன் சந்தீப் கிஷன் காதல்?

தமிழில் யாருடா மகேஷ் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்தீப் கிஷன். அதன்பிறகு மாநகரம், மாயவன், கசட தபற போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதியுடன் மைக்கேல் படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், தெலுங்கில் உருவாகிறது. தமிழில் அதிகம் நடிக்காவிட்டாலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். சந்தீப் கிஷனும், நடிகை சோனியா ரதேவும் தீவிரமாக காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோனியா ரதே 'புரோக்கன் பட் பியூட்டிபுல்' என்கிற இந்தி வெப் தொடரிலும், 'டிகப்ளிஸ்ட்' … Read more

Dhanush:மருத்துவமனையில் ஐஸ்வர்யா: தனுஷ் வீட்டில் இருந்து வந்த ஆறுதல்

ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. Aishwarya Rajinikanth:ஐஸ்வர்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, அக்கா உங்கள் முகத்தை பார்த்தாலே பாவமாக இருக்கிறது. மனஅழுத்தத்தில் இருப்பது நன்றாக தெரிகிறது. அதனால் தயவு செய்து ஓய்வு எடுங்கள் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனுஷ் வீட்டில் இருந்து ஆறுதல் வந்திருக்கிறது. செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தான் கமெண்ட் போட்டிருக்கிறார். … Read more

“தற்போது பேசுவது சரியாக இருக்காது!" – 'மாறன்' படத்திலிருந்து விலகியது குறித்து விவேக்

தனுஷின் ‘மாறன்’ படத்தின் திரைக்கதை, டயலாக் ரைட்டராக இருந்த பாடலாசிரியர் விவேக், அதிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘மாறன்’. இப்படத்தில் மாளவிகா மோகனன், சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், ராம்கி உள்பட பலர் நடித்துள்ளனர். ஒடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வரும் 11ம் தேதி இப்படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார்கள். தனுஷிற்கு ‘ஜெகமே தந்திரம்’, ‘அட்ராங்கி ரே’ படங்களை தொடர்ந்து ‘மாறனு’ம் ஒடிடியில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் … Read more

67 வயதாகும் இந்த அனுபம் கெர்ரைப் பார்த்தா… வாவ்!

67 வயதிலும் நடிகர் அனுபம் கெர், ஸ்டைலிஷாகவும், ஃபிட்டாகவும் இருந்து இளம் நடிகர்களுக்கு சவால் விடுகிறார். சிறந்த குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்ற அனுபம் கெர், இந்தியில் 500-க்கும்  மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்புத் திறமையைப் பாராட்டி, அவருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார். அனுபம் கெர் நடித்துள்ள இந்தி திரைப்படமான  ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ … Read more