இது சொல்ல மறந்த கதை: இன்று முதல் ஒளிபரப்பு

கலர்ஸ் தமிழ் சேனல் சமீபகாலமாக புத்தம் புதிய தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நீதிக்காக போராடும் ஒரு விதவைத் தாயின் கதையை சித்தரிக்கும் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடரை இன்று (மார்ச் 7) முதல் ஒளிபரப்புகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு இதனை காணலாம். இரு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளம் விதவையான சாதனாவின் வாழ்க்கை சம்பவங்களையும் மற்றும் உயிரிழந்த அவளது கணவனின் நற்பெயரை சீரழித்த ஒரு வழக்கில் … Read more

இனி தனுஷ் சங்காத்தமே வேணாம் சாமி: அலறும் 'அந்த' நடிகைகள்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்துவிட்டார்கள். அவர்களை சேர்த்து வைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இருப்பினும் மீண்டும் சேர்ந்து வாழ தனுஷும், ஐஸ்வர்யாவும் விரும்பவில்லையாம். எவ்வளவோ பேசியும் தனுஷ் முடியாது என்று கூறிவிட்டாராம். இதையடுத்து அவரின் கெரியரை காலி செய்யும் வேலையில் லதா ரஜினிகாந்த் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷுடன் நெருக்கமாக இருந்தால் தங்களின் கெரியர் நன்றாக இருக்கும் என்று நினைத்த நடிகைகளுக்கும் ஆப்பு வைக்கப்பட்டிருக்கிறதாம். இனி தனுஷுடன் சேர்ந்து லூட்டி அடிப்பது, விடிய விடிய பார்ட்டி பண்ணும் … Read more

ஹிருதயம் இசையமைப்பாளரை பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான்

கடந்த ஜனவரி மாதம் மலையாளத்தில் வினித் சீனிவாசன் இயக்கத்தில் ஹிருதயம் என்கிற படம் வெளியானது. மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து நடித்த முக்கோண காதல் கதையாக சென்னை பின்னணியில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற தர்ஷனா மற்றும் ஒணக்க முந்திரி என்கிற இரண்டு பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் பாடலாக மாறின. இந்த படத்திற்கு ஹேஷம் அப்துல் வகாப் என்கிற … Read more

ரஜினியை பின்னுக்கு தள்ளிய தளபதி விஜய்: பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் விஜய் . இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ பீஸ்ட் ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் … Read more

விஜய் 67வது படத்தை தயாரிக்கும் தாணு?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் 125 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை பிடித்துள்ளது. மேலும் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது . இந்நிலையில் விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க … Read more

ச்ச இந்த மனுஷனை கலாய்க்க எப்படித்தான் மனசு வருதோ ? கண் கலங்கும் அஜித் ரசிகர்கள்..!

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சொல்லப்போனால் வசூலில் அடித்து நொறுக்கிவருகிறது வலிமை திரைப்படம். வெளியான முதல் நாளிலேயே இப்படம் தமிழ் நாட்டில் மட்டும் 34 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தற்போது இப்படம் 200 கோடி வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலானது. திருப்பதிக்கு தரிசனத்திற்கு சென்ற … Read more

ஏ.ஆர்.ரஹ்மானின் துபாய் ஸ்டூடியோவுக்கு இளையராஜா 'விசிட்'

துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு, இசைஞானி இளையராஜா சென்றிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என இந்திய மொழிகளில் இதுவரை 1,400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்நிலையில் துபாயில் தற்போது நடந்து வரும் 'துபாய் எக்ஸ்போ 2020' நிகழ்ச்சியில் இளையராஜா இசை கச்சேரி நேற்று முன்தினம் (மார்ச் 5) கோலகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியை … Read more

திருப்பதிக்கு தரிசனத்திற்கு சென்ற ஜான்வி கபூருக்கு காத்திருந்த அதிர்ச்சி..ஷாக்கான ஜான்வி..!

நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான ஜான்வி தற்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 2018 அம ஆண்டு வெளியான தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் ஜான்வி. அதைத்தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமானார். தற்போது தமிழில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார் ஜான்வி. பாலிவுட்டில் வலம் வரும் இளம் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஜான்வி தற்போது ஒரே … Read more

மீண்டும் இயக்குனர் ஆசையில் ராஜு சுந்தரம்

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என எண்ணற்ற படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றியவர் ராஜு சுந்தரம். அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'ஏகன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 2008ல் வெளிவந்த அந்தப் படம் வெற்றிப் படமாக அமையாமல் தோல்விப்படமாக அமைந்தது. அதன்பின் இயக்கத்தில் கவனம் செலுத்தாமல் நடன இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். கடந்த சில வருடங்களாகவே அவர் மீண்டும் இயக்கம் பக்கமும் திரும்பப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது … Read more

சிவகார்த்திகேயனுக்கு பாடம் எடுக்கும் நாட்டாமை டீச்சர்…!வெளியானது புதிய படத்தின் அப்டேட்…!

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் ஆங்கில நடிகையின் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், ‘ டான் ’ படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தைஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.தமன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகும் இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். … Read more