ஆயுர்வேத சிகிச்சை முடிந்து லத்தி படப்பிடிப்புக்கு திரும்பும் விஷால்…!

ஆயுர்வேத சிகிச்சையை முடித்துள்ள நடிகர் விஷால், விரைவில் ‘ லத்தி ’ படப்பிடிப்புக்கு திரும்ப உள்ளார்.’வீரமே வாகை சூடும்’ படத்திற்கு பிறகு ‘லத்தி’ படத்தில் விஷால் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் வினோத்தின் இயக்கத்தில் உருவாகிறது. இப்படத்தில் நடிகர் சுனைனா கதாநாயகியாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் வெளியாகவுள்ளது. சி.முருகானந்தம் என்ற போலீஸ் கதாபாத்திரத்தில் விஷால் நடித்து வருகிறார். வெளியானது ஆதியின் ”கிளாப்” … Read more

நானே வருவேன் படத்தில் நடிக்கும் மும்பை நடிகை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நடிகை இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனை உறுதிசெய்யும் வகையில் நேற்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் மும்பையை சேர்ந்த நடிகை எல்லி … Read more

'வினோதய சித்தம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்…!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர்பவன் கல்யாண்.இவர் நடிகர் என்பது மட்டுமல்லாது இயக்குனர், தயரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமையுடன் விளங்குகிறார். இவருக்கு தெலுங்கு திரையுலகில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் சமுத்திரக்கனியின் வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வினோதய சித்தம். அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோர் … Read more

5 மொழிகளில் தயாராகும் பொல்லாப்பு

5 மொழிகளில் தயாராகும் பொல்லாப்பு 3/6/2022 7:10:29 PM ஜெஹோவா  பிலிம் இண்டர்நேஷனல்  என்ற பட நிறுவனம் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாரித்துள்ள படம் பொல்லாப்பு. தேவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இயக்கி உள்ளார். கதாநாயகியாக ரித்திகா, ஹர்ஷ்தா பட்டேல் இருவரும் நடித்துள்ளனர். மற்றும்  சம்பத்ராம், ஆதேஷ் பாலா, பவர் ஸ்டார், கில்மா கிரி, சில்மிசம் சிவா, ராஜன், கவுண்டமணி தினேஷ், தாவுத், சத்யன், நவீந்தர், அன்பழகன் … Read more

சுந்தர் சி படத்தில் நடனமாடிய யுவன்

இயக்குனர் சுந்தர்.சி தற்போது கலகலப்பு பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், அம்ரிதா அய்யர், ஐஸ்வர்யா தத்தா, மாளவிகா ஷர்மா, டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டியில் நடக்கிறது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட யுவன் சங்கர் … Read more

மீண்டும் ஆரம்பமாகும் சிம்புவின் அதிரடி வேட்டை…! பிரபல தயாரிப்பாளர் கொடுத்த புதிய அப்டேட் …!

வேட்டை மன்னன் திரைப்படம் மீண்டும் உருவாகுமா? இல்லையா? என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் தான் தற்போது கோலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக வலம் வருகிறார். தற்போது இவர் கைவசம் விஜய்யின் பீஸ்ட் மற்றும் ரஜினியின் 169-வது படம் ஆகியவை உள்ளன. இதில் பீஸ்ட் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ரஜினி 169 … Read more

காமெடி நடிகரான நடன இயக்குனர்

காமெடி நடிகரான நடன இயக்குனர் 3/6/2022 7:11:17 PM பல்வேறு  படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’.இப்படத்தை நடன இயக்குநரும் ராபர்ட்டின் சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நான்கு கதாநாயகர்களும் நான்கு கதாநாயகிகளும் நடிக்கிறார்கள்.  அவர்களுடன் நடன இயக்குநர் ராபர்ட் … Read more

ராகவா லாரன்ஸ் பட டைரக்சனில் இருந்து விலகிய இரட்டை இயக்குனர்கள்

கார்த்தி நடித்த மெட்ராஸ் என்ற படத்தின் மூலம் சண்டை பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ். அதனையடுத்து இதுவரை நூறுக்கும் மேற்பட்ட தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் சண்டை பயிற்சி இயக்குநர்களாக பணியாற்றியிருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டு அறிவிப்பாக ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இவர்கள் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்தநிலையில் அந்தப்படத்தை தாங்கள் இயக்கவில்லை என தற்போது அறிவித்துள்ளனர் அன்பறிவ் சகோதரர்கள். இதுகுறித்து … Read more

வெளியானது ஆதியின் ”கிளாப்” படபுதிய அப்டேட்…!

ஆதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ கிளாப் ‘ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.அறிமுக இயக்குனர் பிரித்வி ஆதித்யா இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள திரைப்படம் ‘கிளாப்’. வித்தியாசமான த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஆதி ஒரு தடகள வீரராக நடித்துள்ளார். அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ் ராஜ் , நாசர் , முனிஷ்காந்த் , மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.பிரபல இசையமைப்பாளராக … Read more

‛நானே வருவேன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

'என்ஜிகே' படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கி வரும் படம் 'நானே வருவேன்'. இதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அண்ணன் படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். புவனா சுந்தர் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே ஒரு போஸ்டரை படக்குழு … Read more