Vijay:நாங்க மறக்கல, ஆனால் நீங்க மறுந்துட்டீங்களே விஜய்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . அடுத்ததாக வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தளபதி 66 பட வேலையே இன்னும் துவங்காத நிலையில் தளபதி 67 படம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் தளபதி 67 படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. இது நல்ல விஷயம் தான் என்றாலும், மாஸ்டர் … Read more

இசையில் மிரட்டும் ‛ரீ'; இயக்குனர் சுந்தரவடிவேல்

வெள்ளை திரையில் கலர் காட்சிகளை அள்ளி தெளிக்கும் கனவு தொழிற்சாலையான சினிமாவில் ' நானும் ஒரு நாள் இயக்குனராவேன்' என 8 ஆண்டுகளாக முயற்சி செய்து அறிமுக இயக்குனராகி, மிரட்டும் இசையின் பின்னணியில் ரீ என்ற உளவியல், திரில்லர் படத்தை இயக்கி முதல் வெற்றி படியில் காலடி வைத்துள்ளார் மதுரை சுந்தரவடிவேல். ‛‛சினிமா கனவுகளை நிஜமாக்கும் எண்ணம் எனக்குள் இருந்தாலும் கல்லுாரி முடித்து, பிலிம் மேக்கிங் படித்தும் ஐ.டி., நிறுவனத்தில் வேலை பார்த்தேன். இது நம் லட்சியமல்ல … Read more

வொர்க் அவுட் பன்ற இடத்தில இப்படியா ராஷ்மிகாவுக்கு ஆகனு…!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள புஷ்பா படம் அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே கொடுத்துள்ளது.கீதா கோவிந்தம் படம் ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்த படம்.தமிழிலும் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகையாக மாறியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு இந்தியிலும் படவாய்ப்புகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து மும்பையிலும் வீடு வாங்கி குடியேறியுள்ளார். சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் இவர் ஜோடி சேர்ந்திருந்த … Read more

சொர்க்கம், அமர்க்களம், 2.0 – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – அலெக்ஸ் பாண்டியன்மதியம் 03:00 – பேட்டமாலை 06:30 … Read more

ஐஸ்வர்யாவின் புது காதலுக்கு தனுஷ் வீட்டில் ஃபுல் சப்போர்ட்

காதல் கணவரான தனுஷை பிரிந்த கையோடு காதல் பாடல் வீடியோவான முசாபிரை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். முசாபிர் இந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது. தமிழில் பாடியிருப்பது ஐஸ்வர்யாவின் தம்பி அனிருத். முசாபிர் வீடியோ மார்ச் 8ம் தேதி வெளியிடப்படுகிறது. இது குறித்து வீடியோ மூலம் அறிவிப்பு வெளியிட்டார் ஐஸ்வர்யா. தேதி குறிச்சாச்சு: ‘குட் நியூஸ்’ சொன்ன ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதை பார்த்த கீதாஞ்சலி செல்வராகவன் வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக ஐஸ்வர்யாவுக்கு கொரோனா … Read more

அரபி குத்து பாடலுக்கு ஷிவானி குத்தாட்டம்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில், அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் அரபி குத்து பாடலை இதுவரை 126 மில்லியனுக்கும் அதிகமானோர் க ண்டு ரசித்து உள்ளார்கள். அதோடு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பாடலுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே விஜய்யின் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் உள்ளிட்ட பாடல்களுக்கு பல சினிமா பிரபலங்கள் நடனமாடி வீடியோக்கள் வெளியிட்டு வந்ததை அடுத்து இப்போது அரபி குத்து பாடலுக்கும் வீடியோக்கள் வெளியிட்டு … Read more

விஜய் – வெற்றிமாறன் படம் எப்போது ? வெளியான சூப்பர் தகவல்..!

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் செம வைரலானது. இதைத்தொடர்ந்து வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படம் விஜய்யை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் காட்டும் என்ற தகவல் வந்துள்ளது. தமிழ் மட்டும் தெலுங்கில் உருவாகும் இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களையும் அதற்கு அழைக்கும் பிரபலங்கள்…பயில்வான் ரங்கநாதன் … Read more

நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பின்னணி பாடிய வடிவேலு

நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தில் காமெடியனாக நடிக்கிறார். இது தவிர மேலும் சில படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார். இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு ஒரு பாடல் பாடியிருப்பதாக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். அதோடு இதற்கு முன்பு எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்டு கேட்கும், வாடி பொட்ட … Read more

தனுஷை காப்பாற்ற களத்தில் இறங்கிய பிரபலம் ..நல்லது நடந்தா சரி..!

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். சினிமாவில் அவர் சந்திக்காத தோல்விகளும் இல்லை, பார்க்காத வெற்றியும் இல்லை. இடையில் சில தோல்விகளை தனுஷ் சந்தித்து வந்தாலும் சரியான நேரத்தில் அவருக்கு சில படங்கள் கைகொடுத்து தூக்கிவிட்டுள்ளது. துள்ளுவதோ இளமை படம் என்னதான் வெற்றிப்படமாக இருந்தாலும் அப்படத்தின் மூலம் தனுஷ் கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அந்த நேரத்தில் செல்வராகவனின் முதல் படமான காதல் கொண்டேன் தனுஷை ஒரு சிறந்த நடிகராக தமிழ் சினிமாவிற்கு அடையாளம் … Read more

பட்டாம்பூச்சிகளின் சிறகுகள் | உலக சினிமா #MyVikatan

13வது பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா மார்ச் 3 அன்று கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகச்சிறந்த திரைப்படங்களை மிகச்சிறந்த திரையரங்குகளில் திரையிட்டு காட்டுவதில் பெங்களூரு பன்னாட்டு திரைப்பட விழா கோவா பனாட்டு திரைப்பட விழாவுக்கு இணையானது. திரையிடல் தொடங்கிய முதல்நாள் முதல் காட்சியில் பார்த்த திரைப்படம் ‘லுஅக்கிங் பார் வெரனா. முதல் படமே முதன்மையான படமாக திகழ்ந்தது. புதுமுக பெண் இயக்குநர் நொரிகா சேபா கை தேர்ந்த திரைமேதைகளைப்போல் காட்சிகளையும் சட்டகங்களையும் உருவாக்கி மிரட்டி இருந்தார். … Read more