சூப்பர் சிங்கரில் இருந்து ப்ரியங்காவை தூக்கியதற்கு காரணம் என்ன தெரியுமா?

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் டிடிக்கு அடுத்தப்படியாக பெண் தொகுப்பாளர்களில் முக்கிய இடத்தில் இருப்பவர் ப்ரியங்கா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை மாகாபா, ப்ரியங்கா காம்போ தான் எப்போதுமே தொகுத்து வழங்கி வருகிறது. பிரியங்கா இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டார். எனவே, இம்முறை ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியி மா கா பா மற்றும் மைனா நந்தினி இணைந்து தொகுத்து வழங்கி வந்தனர். பிக்பாஸ் சீசன் 5 முடிந்ததும், … Read more

'காக்க காக்க' படம் ரிலீஸ் சமயத்தில் பிரியங்கா செய்து கொண்டிருந்த காரியம்: ஷாக்கான சூர்யா..!

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ எதற்கும் துணிந்தவன் ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப்படத்தில் ஹீரோயினாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரியங்கா குறித்து சூர்யா தெரிவித்துள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் … Read more

“கடவுள் நம்பிக்கையில்லாமல் எப்படி கைரேகை நிபுணராக நடித்தீர்கள் என கேட்கிறார்கள்”- சத்யராஜ்

”’ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்ததற்காக “கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள். பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன். நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார் நடிகர் சத்யராஜ். நடிகர் பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ வரும் மார்ச் 11 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, நேற்றிரவு நடந்த படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீட்டு நிகழ்வில் படத்தை வெளியிடும் உதயந்தி ஸ்டாலின், பிரபாஸ், பூஜா … Read more

தாணுவுடன் இணைந்து ரூ.100 கோடியில் படம் தயாரிக்கிறது இயக்குனர்கள் சங்கம்

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் ஆர்.கே.செல்வமணி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்வர்கள் பதவி ஏற்கும் விழா நேற்று நடந்தது. தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார், விக்ரமன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசியதாவது: இயக்குனர்கள் சங்க உறுப்பினர்களுக்காக நான் இயக்குனர் சங்கத்துடன் இணைந்து … Read more

ரசிகர்களுக்கு கவர்ச்சி போதைக்காட்டும் ஜான்விகபூர்…! சும்மா ஜொலிக்கிறாரே….!

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீ தேவி. தமிழகத்தின் விருதுநகரில் பிறந்த இவர், 80 களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தார். இதனால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இவரது நடிப்பை பாராட்டும் விதமாக இவருக்கு பத்மஸ்ரீ, தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.நடிகை ஸ்ரீ தேவி பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி கபூர், குஷி … Read more

HBD Selvaraghavan: ஃபேன்டஸி உலகங்களின் கிரியேட்டர் செல்வராகவன்! | Visual Story

செல்வராகவன் ‘துள்ளுவதோ இளமை’ 2002 இல் வெளியாகிறது. இயக்கம் கஸ்தூரிராஜா என்றிருந்தாலும் படம் அவரது போல இல்லை. திரைக்கதையில் இருந்த மேஜிக் வேறு ஒருவருடையது. அது செல்வராகவனுடையது. செல்வராகவன் 2003 இல் ‘காதல் கொண்டேன்’. தனுஷின் பாத்திரப்படைப்பும் சரி, அவ்வளவு சிக்கலான கதையை இயக்குநராகக் கையாண்ட விதமும் சரி, இவரின் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தன. செல்வராகவன் அதற்கு அடுத்த ஆண்டு ‘7ஜி ரெயின்போ காலனி’ படம். எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருந்தது படம். ‘கண் … Read more

மார்ச் 18-ல் வெளியாகும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘குதிரைவால்’

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். ‘பரியேறும் பெருமாள்’, ‘மூன்றாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ரைட்டர்’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் ‘குதிரைவால்’ படத்தினை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கியுள்ளனர். கலையரசன் – அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். ஏற்கெனவே, இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. பல சர்வதே திரைப்பட விழாக்களிலும் திரையிட தேர்வான … Read more

'ராதேஷ்யாம்' ஓடிடி உரிமை : அதிக விலைக்கு விற்பனை

கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி திடீரென விஸ்வரூபமெடுத்தது. பல புதிய படங்களை நேரடியாக வெளியிடவும், தியேட்டர்களில் வெளியான புதிய படங்களின் ஓடிடி உரிமையை வாங்கவும் சில முன்னணி ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டு வருகின்றன. பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள், பிரம்மாண்டமான படங்கள், பான் இந்தியா படங்கள் ஆகியவற்றிற்குத்தான் அதிக விலை கிடைக்கும். மற்ற படங்களை அந்த நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு திரையுலகத்தில் உள்ளது. பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து அடுத்த வாரம் … Read more

பிரபல நடிகையுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை வரலட்சுமி…!எத்தனை வயசு தெரியுமா…?

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.தன்னுடைய மிரட்டும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவர், தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவின் பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானாலும் போல்டான கதாபாத்திரம்தான் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரத்தை கொடுக்கிறது. சிம்புவின் ‘போடா போடி’ படத்தின் கதாநாயகியாக அறிமுகமான இவர், தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி … Read more

ஜேம்ஸ்பாண்ட் கொஞ்சம், ஷெர்லாக் கொஞ்சம் – இந்த பேட்மேன் எப்படி?

ஊழல்வாதிகளை தேடித்தேடி கொல்லும் சீரியல் கொலைகாரனுக்கும் பேட்மேனுக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் படத்தின் ஒன்லைன். Gotham நகரில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறைக்கு இது பெரும் தலைவலியாக இருக்கிறது. இதனிடையே, அந்நகரின் மேயராக இருக்கும் டான் மிச்செல் ஜூனியர் கொல்லப்பட்டதாக காவல்துறைக்குத் தகவல் கிடைக்கிறது. சம்பவ இடத்திற்கு செல்லும் காவல்துறைக்கு ‘பேட்மேனுக்காக’ எனக் கூறி கடிதம் ஒரு சிக்குகிறது. எதற்காக இந்த கொலை நடந்தது என்பதைக் கண்டறியும் முன்பே, காவல்துறை அதிகாரி ஒருவரும் கொல்லப்படுகிறார். … Read more