ஆர்.ஜே. பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் புதிய படம்

மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘தியான்’ படத்தின் இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கும் தமிழ் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஆர்.ஜேவாக இருந்து நகைச்சுவை நடிகராக உயர்ந்த ஆர்.ஜே. பாலாஜி தற்போது, தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்த ‘எல்.கே.ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றன. இதையடுத்து ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்தப் படத்தின் இறுதிகட்ட … Read more

ஐடி துறையில் வேலை பார்க்கும் சீரியல் நடிகை வினுஷா தேவி

விஜய் டிவியில் நம்பர் ஒன் தொடரான 'பாரதி கண்ணம்மா' தொடரில் தற்போது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரா கண்ணம்மா? என சிலர் கிண்டல் செய்ததை தன் நடிப்பில் வென்று ரசிகர் மனதில் இடம்பிடித்து விட்டார். சீரியலில் நடிப்பதற்கு முன் வினுஷா தேவி ஒரு போட்டோஷூட் மாடல் என்று மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால், அவரது உண்மையான புரொபஷனே வேறு. அதை பற்றிய தகவல் தற்போது தான் வெளிவந்துள்ளது. வினுஷா தேவி ஒரு ஐடி … Read more

கடைசி வரை நினைச்சது நடக்காம போச்சே: கடும் சோகத்தில் எச் வினோத்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் … Read more

‘நீங்க இல்லாம நான் இல்ல’ – சிம்பு உருக்கம்

’மாநாடு’ படத்தின் 100-வது நாளையொட்டி நடிகர் சிம்பு உருக்கமுடன் பதிவிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் ’மாநாடு’ கடந்த ஆண்டு நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது. குறிப்பாக, திரைக்கதைக்காக பலரும் வெங்கட் பிரபுவை கொண்டாடுகிறார்கள். சிம்புவுடன் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்த‘மாநாடு’ வெளியான ஒரே வாரத்தில் உலகளவில் ரூ.50 கோடி ரூபாய் வசூல் சாதனையையும் செய்தது. வெற்றியின் உற்சாகத்தில் ‘மாநாடு 2’ எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார் … Read more

சந்திரலேகா தொடரை விட்டு விலகிய அருண்

'சந்திரலேகா' தொடர், கடந்த 2014 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இதுவரை 2100 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த தொடரில் ஸ்வேதா பந்தேகர், நாகஸ்ரீ மற்றும் அருண் குமார் ஆகியோர் மட்டும் தான் இதுநாள் வரையில் விலகாமல் லீட் ரோலில் நடித்து வந்தனர். இதில் சபரிநாதன் இரண்டாம் நாயகனாக நடித்து வந்தார். இந்நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திரலேகா தொடரை விட்டு விலகுவதாக கடிதத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அவருக்கு … Read more

Dhanush:அந்த பொண்ணு சரிபட்டு வருமா?: சந்தேகப்பட்ட தனுஷ்

ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் , அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்டோர் நடித்த அத்ரங்கி ரே இந்தி படம் கிறிஸ்துமஸ் பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் டிசம்பர் 24ம் தேதி ரிலீஸானது. படத்தை பார்த்த அனைவரும் தனுஷையும், சாரா அலி கானையும் பாராட்டினார்கள். முன்னதாக சாரா பற்றி தனுஷ் பேட்டி ஒன்றில் கூறியது பற்றி தற்போது மீண்டும் பேசப்படுகிறது. அந்த பேட்டியில் தனுஷ் கூறியதாவது, உண்மையை சொல்ல வேண்டுமெனில் எனக்கு கவலையாக இருந்தது. பெரிய … Read more

'மாநாடு' வெற்றியை தமிழ்த் திரையின் வெற்றியாக பார்க்கிறேன் – சிம்பு

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தமிழ்த்திரையின் வெற்றியாக பார்ப்பதாக நடிகர் சிம்பு கூறியுள்ளார். வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகி வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததால் கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மாநாடு மீண்டும் திரையிடப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் மாநாடு திரைப்படம் 100 நாட்களை நிறைவு செய்கிறது. இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தை பார்த்தார். அப்போது … Read more

வலிமை படத்திற்காக சின்னத்திரை நடிகர் பட்ட கஷ்டம்

அஜித் குமார் நடிப்பில் வெளியான 'வலிமை' படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்திருப்பார் சில்மிஷம் சிவா. விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான அவர் தற்போது சினிமாவிலும் அறிமுகமாகிவிட்டார். இந்நிலையில், வலிமை படத்தில் நடித்த போது மொழி தெரியாத காரணத்தால் பிச்சைக்காரன் போல தான் கஷ்டப்பட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், 'கலக்கப்போவது யாரும் 9 பைனல்ஸ் முடிவதற்கு முன்பே எனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துவிட்டது. எனது போர்ஷன்கள் … Read more

விரைவில் மறுமணம் செய்யும் பிரபல இசையமைப்பாளர்: வெளியான பரபரப்பு தகவல்..!

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான டி. இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இமான் மறுமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் டி,இமானுக்கும், மோனிகா ரிச்சர்டு என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில், சில … Read more

கவனம் ஈர்க்கும் அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ’தீயவர் குலைநடுங்க’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ‘திட்டம் இரண்டு’, ‘பூமிகா’ படங்களுக்குப் பிறகு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் அர்ஜுனுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். க்ரைம் த்ரில்லரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. அருள்குமார் தயாரிக்க தினேஷ் லக்‌ஷ்மணன் இப்படத்தை இயக்குகிறார். ”ஒரு க்ரைம் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை. கொடூரமான முறையில் ஒரு கொலை நிகழ்கிறது. … Read more