பாலா – சூர்யா படம் Exclusive: சூர்யாவின் கதாபாத்திரம் இதுதான்!

அடுத்த அதிரடி பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார் சூர்யா. பாண்டிராஜின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸை நோக்கி பறக்கிறது. இதற்கிடையே பாலாவின் படத்திற்காக சூர்யா தனது ஹோம் ஒர்க்கைத் தொடங்கிவிட்டார். பாலா- சூர்யா கூட்டணியை மீண்டும் தொடங்கி வைத்தவர் சிவகுமார். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மாயாவி’ (தயாரிப்பு) படங்களின் மூலம் சூர்யாவின் நடிப்புத்திறமையை மெருக்கேத்தியதில் பாலாவுக்கு பெரும்பங்கு உண்டு. மீண்டும் பாலாவுடன் படம் என முடிவானதும், ”என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர், ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து … Read more

30 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கூட்டணி

ஹிந்தியில் வெற்றி பெற்ற அந்தாதூன் படம் தமிழில் பிரசாந்த் நடிப்பில் அந்தகன் என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. இவரது அப்பா தியாகராஜன் இயக்கி, தயாரித்துள்ளார். நாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சிம்ரன், சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை தயாரிப்பாளர் தாணு பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரஷாந்த் நடிப்பில் … Read more

சி.எம். ஸ்டாலினை சந்தித்து வாழ்த்திய வில்லாதி வில்லன்: இது நம்ம லிஸ்டுலயே இல்லயே

கமலின் விக்ரம் பட வில்லன் எப்படி முதல்வரை எளிதாக சந்தித்தார் என்று எல்லாம் யோசிக்க வேண்டாம். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு வில்லனே ஃபஹத் ஃபாசில் தான். இந்நிலையில் தான் மாரி செல்வராஜும், ஃபஹத் ஃபாசிலும் முதல்வரின் வீட்டிற்கே சென்று அவரை வாழ்த்தியிருக்கிறார்கள். இதற்கு ஏற்பாடு செய்தது உதயநிதி ஸ்டாலின். முன்னதாக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபோது நடிகர் ஜெயராம் தன் மகன் காளிதாஸுடன் சென்று அவரை சந்தித்து வாழ்த்தினார். இந்த கனெக்ஷன் … Read more

நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அனுஷ்கா?

நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ்சினிமாவில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு வெளியான ‘சிங்கம் 3’ படத்தில் கடைசியாக நடித்திருந்தார் அனுஷ்கா ஷெட்டி. இதைத்தொடர்ந்து அவர் நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. தெலுங்கிலும் கூட 2018-ம் ஆண்டு பாகமதி படத்தில் நடித்தோடு சரி. அதன்பின் சிறு சிறு வேடங்களில் நடித்த அனுஷ்கா பெரிய அளவில் சினிமாவில் தலைக்காட்டாமல் இருந்தார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் ஏ.எல்.விஜயுடன் கைக்கோர்க்க இருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் … Read more

அமெரிக்க ராணுவத்தில் தமிழ் நடிகை

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான போர் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்க ராணுவம் எப்போது வேண்டுமானாலும் குதிக்கலாம் என்கிற சூழ்நிலையில் தமிழ் நடிகை ஒருவர் அமெரிக்க ராணுவத்தில் இணைந்திருக்கும் தகவல் ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது. கடந்த ஆண்டு வெளிவந்த காதம்பரி என்ற படத்தில் அறிமுமானவர் அகிலா நாராணயன். அதன்பிறகு பல படங்களில் பின்னணி பாடிய இருக்கிறார். அடிப்படையில் நடன கலைஞராகவும் இருக்கிறார். இவர் பெற்றோருடன் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார். அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர். அங்கேயே … Read more

விஜய் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா: இதென்ன புது கதையா இருக்கு..!

தமிழ், தெலுங்கில் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள அனுஷ்காவிற்கு, பாகுபலி படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. இந்நிலையில் அனுஷ்கா கதாநாயகியாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.. இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடையை கூட்டிய நடிகை அனுஷ்கா, அதன்பிறகு உடல் எடையை குறைக்க பெரும் அவதிப்பட்டார். இதனால் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக அமையவில்லை. … Read more

கடுக்கன், தாடி… வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9-ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு ’அஜித் 61’ படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். நாயகியாக தபுவும், ‘பிக்பாஸ்’ கவின் முக்கிய … Read more

'ராதேஷ்யாம்' வெளியீட்டு விழா – மும்பையில் ஆரம்பம்

ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் 'ராதேஷ்யாம்' படம் அடுத்த வாரம் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. தெலுங்கு, ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகப் போகிறது. 'பாகுபலி 1, 2, சாஹோ' ஆகிய படங்களுக்குப் பிறகு பான்–இந்தியா நடிகராக மாறியுள்ள பிரபாஸின் அடுத்த படமாக இது வெளியாகிறது. 'சாஹோ' படம் ஹிந்தியில் மட்டும்தான் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படம் வெளிவந்தும் … Read more

ஒரு நல்ல மனிதரை இப்படியா சோதிக்க வேண்டும்: விஜயகாந்த் குறித்து மனம் வருந்திய எஸ்.ஏ.சி

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் கேப்டன் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த் . ரஜினி, கமல் உச்ச நடிகர்களாக திகழ்ந்த சமயத்தில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்து சினிமாவில் கோலோச்சியவர். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பொது வாழ்வில் இருந்து விலகி இருக்கும் விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து அனைவரும் கண் கலங்கினார்கள். தமிழ் சினிமாவில் மூத்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் எஸ் ஏ சந்திரசேகர் விஜயகாந்துடன் இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார். சட்டம் … Read more

பெப்சி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் இழுபறி

தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான 24 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பினருக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நேற்று புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அரசு தரப்பினர் முன் கையெழுத்தாகும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் … Read more