இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்: ஹே சினாமிகா முதல் ’ஜுண்ட்’ வரை

இந்தவாரம் துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ படம் முதல் அமிதாப் பச்சனின் ‘ஜுண்ட்’ திரைப்படம் வரை வெளியாகின்றன. ‘ஹே சினாமிகா’ துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி (நாளை) தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றிக்குப்பிறகு துல்கர் நடிக்கும் … Read more

வடிவேலு படத்தில் ஷிவானி நாராயணன்

தமிழில் டிவி தொடர்களில் நடித்திருந்தாலும், 'பிக் பாஸ்' சீசன் 4ன் மூலம் அதிகப் பிரபலம் அடைந்தவர் ஷிவானி நாராயணன். பலவிதமான கிளாமர் புகைப்படங்களைப் பதிவிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளவர். இதனால், அவரைத் தேடி தற்போது பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் ஷிவானி. இதற்கடுத்து பொன்ராஜ் இயக்கும் படம், ஆர்ஜே பாலாஜி இயக்கும் … Read more

மாற்றத்திற்கு தயாராக இருங்கள்: ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சூசக அழைப்பு..!

சூரரைப் போற்று படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ எதற்கும் துணிந்தவன் ‘ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா . அண்மையில் ஓடிடியில் வெளியான சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், … Read more

’ஏகே61’ படத்திற்காக 25 கிலோ உடல் எடையைக் குறைக்கும் அஜித்- வெளியானது புதிய அப்டேட்

’அஜித் 61’ படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையைக் குறைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களைத் தொடர்ந்து அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைந்துள்ளனர். வரும் மார்ச் 9 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் படப்பிடிப்புத் துவங்கவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட அரங்கை கடந்த ஒரு மாதமாக ’அஜித் 61’ படக்குழுவினர் அமைத்து வருகிறார்கள். வரும் தீபாவளிக்கு ’அஜித் 61’ படத்தினை திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். நாயகியாக … Read more

விவேக் ஓபராய்க்கு விருந்தளித்த பிரித்விராஜ்

பாலிவுட் ஹீரோவான விவேக் ஓபராய் தமிழில் ரத்த சரித்திரம், விவேகம் ஆகிய படங்களில் நடித்த பிறகு தென்னிந்திய அளவில் அதிகம் தேடப்படும் மோஸ்ட் வான்டட் வில்லன் நடிகராக மாறிவிட்டார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் முதன்முறையாக இயக்குனராக மாறி இயக்கிய லூசிபர் படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடித்தார் விவேக் ஓபராய். அந்த நட்பின் அடிப்படையில் தற்போது ஷாஜி கைலாஷ் டைரக்ஷனில் தான் நடித்து வரும் கடுவா என்கிற படத்திலும் விவேக் ஓபராயை வில்லனாக்கி … Read more

Dhanush:ஐஸ்வர்யா பல வாட்டி, ஆனால் தனுஷ் ஒரு வாட்டி கூட இல்ல

வட சென்னை பட ரிலீஸையொட்டி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார் தனுஷ் . இதையடுத்து தொடர்ந்து தன் படங்கள் குறித்து இன்ஸ்டாகிராமில் ப்ரொமோஷன் செய்து கொண்டிருக்கிறார். தன் பர்சனல் வாழ்க்கையை பர்சனலாக வைக்க விரும்புவர் தனுஷ். அதனால் தானோ என்னவோ, தன் குடும்ப புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அவ்வளவாக வெளியிடவில்லை. தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மகன்களுடன் சேர்ந்து எடுத்த 3 புகைப்படங்கள், தலைவர் ரஜினியுடன் எடுத்த இரண்டு புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். ஐஸ்வர்யாவின் ஒரு புகைப்படத்தை கூட … Read more

‘பொன்னியின் செல்வன்’ மிரட்டலான போஸ்டர்களுடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துள்ளது படக்குழு. இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படமான ’பொன்னியின் செல்வன்’ படத்தில் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதற்கான, படப்பிடிப்பு தாய்லாந்து, புதுச்சேரி, மத்திய பிரதேசம், ஊட்டி என பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், … Read more

மார்ச் மாதம் மிகச் சில படங்களே ரிலீஸ் ?

கொரோனா ஒமிக்ரான் அலையால் சினிமாத் துறை இந்த 2022ம் வருடத் துவக்கத்திலிருந்தே தள்ளாடிக் கொண்டிருந்தது. கடந்த வாரம் வெளிவந்த 'வலிமை' படம் தமிழ் சினிமாத் துறைக்கு மீண்டும் ஒரு சக்தியைக் கொடுத்துள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று மார்ச் மாதம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களைப் போல் அல்லாமல் இந்த மார்ச் மாதத்தில் நிறைய படங்கள், வசூலைத் தரும் படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த மாதத்தில் சில படங்கள் மட்டுமே வெளியாகும் என்று … Read more

நட்ட நடு ஆத்துல… மகா சிவாராத்திரிக்கு பீஸ்ட் நாயகி எங்க போயிருக்காங்க பாருங்க?

நாடு முழுவதும் மகா சிவராத்திரி நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிவன் கோவில்களில் விடிய விடிய கால பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். லதா ரஜினிக்கு செய்ததை… தனுஷுக்கு செய்த ஐஸ்வர்யா… தீயாய் பரவும் தகவல்! குறிப்பாக கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி பூஜையில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். பாலிவுட் டோலிவுட் கோலிவுட் என பல பிரபலங்களும் பங்கேற்று வழிபாடு செய்தனார். நடிகைகள் கங்கனா ரனாவத், … Read more

சினிமா தொழிலாளர் சம்பள விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை

சினிமா தொழிலாளர் சம்பள விவகாரம் தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை 3/2/2022 3:53:54 PM சென்னை: பெப்சி என்ற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், 24 திரைப்பட சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இதில் இடம்பெற்றுள்ள சினிமா தொழிலாளர்களின் புதிய சம்பள விவகாரம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை:தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையிலான தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் பொதுவிதிகளுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து … Read more