விஜய் மகன் சஞ்சய் யுவனின் தீவிர ரசிகர் – யுவனே சொன்ன தகவல்

தமிழ்த் திரையுலகில் இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. தற்போது 42 வயதாகும் யுவன், அவருடைய 18வது வயதில் 1997ம் ஆண்டு வெளிவந்த 'அரவிந்தன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமனார். கடந்த 25 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் அறிமுகமாகி நேற்றுடன் 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அதை முன்னிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று இரவு நட்சத்திர ஓட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பொதுவாகவே எந்த ஒரு திரைப்பட விழாவிலும் … Read more

ஜிவி தற்கொலை… ரஜினி, மணிரத்னம் யாருமே உதவவில்லை: கே.டி. குஞ்சுமோன் வருத்தம் !

கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் ஜிவி என்கிற ஜி.வெங்கடேஸ்வரன் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய சினிமா உலகினருக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் அவருக்கு மணிரத்தினம், ரஜினிஉள்பட யாருமே உதவி செய்யவில்லை என்று சில தினங்கள் முன் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பிரபல தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் குற்றம்சாட்டியுள்ளார். ஜி.வெங்கடேஸ்வனின் தந்தை கோபால ரத்தினமும் ஒரு தயாரிப்பாளர். ஜிவியின் தம்பிதான் இயக்குனர் மணிரத்னம் . ஜி.வி. … Read more

உக்ரைன் மக்களுக்காக நிதி உதவி கேட்கிறார் எமி ஜாக்சன்

லண்டனை சேர்ந்த மாடல் அழகி எமி ஜாக்சன். மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினியுடன் 2.0 வரை நடித்தார். தற்போது லண்டனில் வசித்து வரும் அவர் அங்கு சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக பீட்டா அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரின் காரணமாக ஆயிரக் கணக்கான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில பாதாள அறைகளில் உள்ள பச்சிளம் குழந்தைகளின் வீடியோவை வெளியிட்டு எமி ஜாக்சன் உருக்கமான வேண்டுகோள் … Read more

"சமூகநீதிக் காவலரின் வாரிசு"க்கு முதன் முறையாக… இயக்குநர் அமீர் ஸ்டாலினுக்கு வாழ்த்து!

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு சமூக வலைதளங்கள், வாழ்த்து மடல்கள் தொலைபேசி என தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வாய்ப்புக்காக இப்படியா? காஞ்சனா பட நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இயக்குநர் பாரதிராஜா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என பிரபலங்கள் பலரும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் அமீரும் … Read more

டால்பின் உடன் விளையாட்டு : குடும்பத்தினர் உடன் ரம்பா குதூகலம்

90களில் கனவு கன்னியாக இருந்தவர் ரம்பா. தொடை அழகி என்று புகழப்பட்டவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். முன்னணியில் இருக்கும்போதே இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரம்பா, டொராண்டோவில் செட்டிலாகிவிட்டார். அங்கு தனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். தற்போது சினிமாவில் நடிக்கா விட்டாலும் சமூக வலைத்தளம் மூலமாக தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். கொரோனா காலத்தில் சமூக வலைத்தளம் பக்கம் வராத ரம்பா. தற்போது தனது குடும்பத்தினருடன், … Read more

இனிமே அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை: மகள் மீது கடும் கோபத்தில் ரஜினி..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ் , ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் … Read more

”நிஜத்திலும் ஹவுஸ் ஹஸ்பண்டாக இருக்கவே எனக்கு ஆசை ” : துல்கர் சல்மான் பிரத்யேக பேட்டி

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனையொட்டி, புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக துல்கர் சல்மான் மனம் திறந்துள்ளார். ஹே சினாமிகா படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? “’ஹே சினாமிகா’ ஒரு காதல் படம். பொதுவாக, படங்களில் காதலன், காதலி கடைசியில் ஒன்று சேர்ந்து திருமணத்துடன் படம் நிறைவடையும். ஆனால், ’ஹே சினாமிகா’வில் திருமணத்தில்தான் படமே தொடங்குகிறது. அதன்பிறகு, இருவருக்கும் நடைபெறும் சின்ன சின்ன பிரச்சனைகள், … Read more

2022ன் முதல் பிளாக்பஸ்டர் 'வலிமை', தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி

2022ம் ஆண்டு கொரோனா ஒமிக்ரான் அலை தாக்கத்துடன்தான் ஆரம்பமானது. டிசம்பர் மாதத்திலேயே ஒமிக்ரான் பரவல் பற்றிய எச்சரிக்கை விடப்பட்டு ஜனவரி மாதத்தில் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கையுடன் செயல்பட வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. இந்தியா முழுவதும் இந்நிலை பல மாநிலங்களில் இருக்க பொங்கலுக்கு வெளிவர வேண்டிய பல படங்களின் வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள். அவற்றில் அஜித் நடித்த 'வலிமை' படமும் ஒன்று. ஜனவரி 7ம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் வெளியீட்டையும் தள்ளி வைப்பதாக … Read more

ரஜினியிடம் அழுது மன்னிப்பு கேட்ட லதா? கதைல புது ட்விஸ்ட்..!

நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் விவாகரத்து ரஜினியினை மிகவும் பாதித்துள்ளது. ஏற்கனவே சமீபத்திய படங்கள் சரியாக போகாததாலும், உடல்நிலையும் சற்று சரியில்லாத நேரத்திலும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அவரை மேலும் பாதித்தது. தற்போது சற்று தேறிவரும் ரஜினி தனது அடுத்த படவேலைகளில் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். என்னதான் இருந்தாலும் தனது மகளின் மீதும் தனுஷின் மீதும் உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி. விவாகரத்திற்கு பிறகு முதல்முறை சந்தித்துக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா.. எங்கு தெரியுமா ? … Read more

காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை தந்த ஏழிசை மன்னர் எம்.கே.டி. பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்த்திரையுலகின் எவர் க்ரீன் சூப்பர் ஸ்டார், ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் 112 ஆவது பிறந்த நாளான இன்று அவரது நினைவலைகளில் சற்று நீராடலாம். மன்மத லீலையை வென்றார் உண்டோ, இப்படி காலத்தால் அழியாத பாடல்களையும், வருடக்கணக்கில் திரையரங்கில் ஓடிய காவிய படங்களிலும் நடித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.டி. 7 வயதிலேயே நாடகக்குழுவில் இணைந்து கலக்கியவர். எளிய குடும்பத்தில் பொற்கொல்லரின் மகனாக பிறந்தாலும், தமது கலைத்திறனால் கோலோச்சியவர். தமிழ்த்திரையுலகில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முதல் நாயகன். மாயவரம் … Read more