அரசின் கெடுபிடியால் 10 கோடியை இழந்த பீம்லா நாயக்

பவன் கல்யாண், ராணா நடிப்பில் கடந்த வெள்ளியன்று பீம்லா நாயக் திரைப்படம் வெளியானது. மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. சாஹர் சந்திரா இயக்கிய இந்தப்படத்திற்கு திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் திரைக்கதை எழுதியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற இந்தப்படம் ஆந்திராவில் முதல் நாள் வசூலாக 14.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் … Read more

பல நாட்கள் கழித்து ரஜினி செய்துள்ள விஷயம்..! இது எதிர்பார்த்தது தானே ?

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முக்கிய நடிகர்களுள் ஒருவர் ரஜினி. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ரஜினியின் 169 ஆவது படமான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். சமீபத்தில் இந்த அறிவிப்பு கலக்கலான ப்ரோமோவின் மூலம் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் ரஜினியின் கடைசி சில படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதாலும், ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் … Read more

அமீருக்கே எல்லா புகழும்: பருத்தி வீரன் 15வது ஆண்டில் கார்த்தி நெகிழ்ச்சி

அமீருக்கே எல்லா புகழும்: பருத்தி வீரன் 15வது ஆண்டில் கார்த்தி நெகிழ்ச்சி 3/1/2022 11:32:49 AM 2007ம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’. இந்தப் படத்தின் மூலமாக கார்த்தி நாயகனாக அறிமுகமானார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தினை அமீர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ச்சியாகத் தனது அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைத்தார் கார்த்தி. ‘பையா’, ‘நான் மகான் அல்ல’,‘சிறுத்தை’, ‘மெட்ராஸ்’, ‘கொம்பன்’, ‘தீரன்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘கைதி’ என  வெற்றிப் படங்களைக் … Read more

மீண்டும் களமிறங்கிய ரம்யா பாண்டியன்

2015ல் வெளிவந்த 'டம்மி டப்பாசு' படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன் பிறகு வெளிவந்த 'ஜோக்கர்' படம் மூலம் யார் இவர் எனக் கேட்க வைத்தார். அதற்குப் பிறகு அவர் நடித்து 'ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' ஆகிய படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தாலும் முன்னணி நடிகைகள் அளவிற்கு பிரபலம் அடைந்தார். அதற்கு ஒரே காரணம் 2019ல் அவர் சேலை அணிந்து எடுத்து வெளியிட்ட ஒரு போட்டோ ஷுட். சேலையில் இந்த அளவிற்குக் கவர்ச்சி … Read more

மனதிற்குகந்த நண்பர்… முக ஸ்டாலின் பிறந்தநாள்… நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் முதல்வல் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கேப்டனா இது… மனம் வலிக்கிறது… விஜயகாந்தின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்! கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த ஸ்டாலின் இன்று தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கட்சியினரும் தொண்டர்களும் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு … Read more

"இனிவரும் காலங்களில் அடுத்த தலைமுறைக்கு வழிவிடலாம்னு இருக்கேன்!"- ஆர்.கே.செல்வமணி

“மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த விஷயமா இருக்கு. எதிர்த்து நின்னவங்க எல்லாரும் பெரிய திரைப்பிரபலங்கள். சமீபத்தில் வெற்றி பெற்றவங்க. என்னைத் தோல்வி அடைய செய்யணும்னு பெரிய டீம்மோட வொர்க் பண்ணுனாங்க. இது எல்லாத்தையும் எதிர்கொண்டு நான் வெற்றி பெற்றதுக்குக் காரணம் என்னுடைய சங்க உறுப்பினர்கள். இவங்களைத் தவிர யாருமில்ல. நிறைய உதவி செஞ்சாங்க. குறிப்பாக விக்ரமன், உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, சுந்தர் சி, முருகதாஸ், நம்பிராஜ், கே.கண்ணன், ரவிமரியா, ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், ஏ.வெங்கடேஷ், மனோபாலா, சரண், கிளாரா, முத்து … Read more

குஜராத்தி மொழியில் படம் தயாரிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன்

குஜராத்தி மொழியில் படம் தயாரிக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் 3/1/2022 9:56:41 AM நயன்தாராவும், அவரது காதலர் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் சார்பில் ‘நெற்றிக்கண்’, ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ ஆகிய படங்களைத் தயாரித்தார்கள். இப்போது இந்த தயாரிப்பு நிறுவனம், மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரித்திகா சிங் முக்கிய வேடங்களில் நடித்த, தமிழ் திரைப்படமான ஆண்டவன் கட்டளை படத்தை குஜராத்தி மொழியில் தயாரிக்கிறார்கள். இந்த … Read more

பேரு வச்சாலும் – 100 மில்லியனைக் கடந்த முதல் ரீமிக்ஸ் பாடல்

'ரீமிக்ஸ்' பாடல்கள் பற்றி ரசிகர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். இதற்கு முன்பு வெளியாகிய திரைப்படப் பாடல்களை இந்தக் காலத்திற்கேற்றபடி இசையில் சிற்சில மாற்றங்கள் செய்து வெளியிடுவதுதான் ரீமிக்ஸ். இந்த விதத்தில் பல சூப்பர் ஹிட் பாடல்கள், சுமாரான பாடல்கள் சில பல வருடங்களுக்குப் பிறகு ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் பாடல்களுக்குக் கிடைக்காத ஒரு வரவேற்பும், பிரபலமும் 'டிக்கிலோனா' படத்தில் இடம் பெற்ற 'பேரு வச்சாலும்' பாடலுக்குக் கிடைத்துள்ளது. யு டியூபில் வெளியான இந்த வீடியோ பாடல் தற்போது … Read more

விவாகரத்திற்கு பிறகு முதல்முறை சந்தித்துக்கொண்ட தனுஷ் – ஐஸ்வர்யா.. எங்கு தெரியுமா ?

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக கடந்த மாதம் அறிவித்தனர். இந்த செய்திதான் தற்போதுவரை பேசும்பொருளாக உள்ளது. இவர்கள் பிரிவிற்கு பலரிடமிருந்து பல காரணங்கள் வந்துகொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரிவு இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களை மிகவும் பாதித்துள்ளது. இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்களது நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். யுவனிடம் விஜய் சொன்ன அந்த விஷயம்..இதுவரை யுவன் வெளியில் … Read more

அஜித்தின் 'வலிமை' திரைப்பட இயக்குநர் மீது கமிஷ்னர் அலுவலகத்தில் புகார்: என்ன காரணம்?

வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தியதாக இயக்குநர், தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் … Read more