Beast: பட ரிலீசுக்கு முன்னாடியே இப்படியாகி போச்சே: கதறும் தளபதி ரசிகர்கள்..!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ பீஸ்ட் ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கடந்த காதலர் தினத்தன்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். … Read more

‘ஜோசப்’ ரீமேக்: ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’ஜோசப்’ படத்தினை ஆர்.கே சுரேஷ் நடிப்பில் ரீமேக் செய்துள்ளார், இப்படத்தின் தயாரிப்பாளர் பாலா. தன்னிடமிருந்து பிரிந்து சென்ற தனது முன்னாள் மனைவி விபத்தில் இறந்துவிட, ‘அது விபத்தல்ல திட்டமிட்டக் கொலை’ என்பதை கண்டுபிடிக்கும் மிரட்டலான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் மிரட்டியிருப்பார். மலையாளத்தில் பாராட்டுகளும் வெற்றியையும் … Read more

பூஜையுடன் தொடங்கிய புத்தம் புதிய

விஜய் டிவியின் சீரியல்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் கூட்டம் உண்டு. கமர்ஷியல் கண்டண்ட் இருந்தாலுமே கதை சொல்லும் விதம் குவாலிட்டியாக இருப்பதால், பேமிலி ஆடியன்ஸ் தாண்டி, பல இளைஞர்கள் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் விஜய் டிவி புதிய சீரியலின் படப்பிடிப்பை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 'சிப்பிக்குள் முத்து' என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் யார் நடிக்கிறார்? கதைக்களம் என்ன என்பது குறித்த தகவல்களை விஜய் டிவி சீக்ரெட்டாக வைத்துள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் வெளியான … Read more

நிறுத்துங்க… நான் சொல்றேன்: ஆர்டர் போடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். … Read more

"`சகோதரி சிந்துஜா'னு உதயநிதி ட்வீட் போட்டிருந்தார். அண்ணனா கடைசி வரைக்கும் இருந்தார்!"- அருண்ராஜா

“‘கனா’ ரிலீஸுக்குப் பிறகு அடுத்த படத்திற்காக ஸ்க்ரிப்ட் வொர்க் போயிட்டு இருந்தது. அப்போ, போனிகபூர் ஆபிஸ்ல இருந்து போன் வந்தது. ஒரு மீட்டிங் வெச்சாங்க. அப்போ, ‘ரீமேக் பண்ண ஐடியா இருக்கானு’ கேட்டாங்க. அப்போ ‘ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக் பண்ண முடியுமானு பேச்சு வந்தது. இந்தில இந்தப் படம் பார்த்துட்டு நிறைய பேசியிருக்கேன். நிறைய வைப் கிரியேட் பண்ணுன படம். பிலிம் மேக்கிங் மற்றும் சோசியல் சார்ந்த விஷயங்களைப் பேசுனதுலயும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ எல்லோருக்கும் பிடிச்ச படம். … Read more

ஒரே நாளில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படங்களில் ட்ரெய்லர் ஒரே நாளில் வெளியாகின்றன. ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், வரும் மார்ச் 2 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. அதேசமயம், … Read more

மன்மதலீலை வெளியீட்டு தேதி அறிவிப்பு

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் மன்மதலீலை. சமீபத்தில்தான் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதற்குள் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டார்கள். வருகிற ஏப்ரல் 1ம் படம் வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது தெரியுமா?. மாநாடு படத்திற்கு முன்பே மன்மதலீலை படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பை முடித்திருந்தார் வெங்கட்பிரபு. இந்த படம் அடல்ட் கண்டன்ட் படமாக ஓடிடி வெளியீட்டுக்காக தயாரானது. … Read more

Dhanush:ஐஸ்வர்யாவுடன் சேர்ந்தாலும் தனுஷுக்கு 'அது' மட்டும் நடக்காது போல

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகன்களுக்காக மீண்டும் சேரப் போகிறார்களாம். தன் தலைவர் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார் தனுஷ் . தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு … Read more

தபு, பூமிகா முதல் லைலா வரை… தமிழில் மீண்டும் களமிறங்கும் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நாயகிகள்!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான நாயகிகள் சிலர் தற்போது மீண்டும் தமிழுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகைகள் பூமிகா, மாளவிகா, லைலா, மதுபாலா, தபு உள்பட பலரும் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு விசிட் அடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் இங்கே பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர்கள் அதன்பின் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று போய்விட, நடிப்பில் இருந்தே முற்றிலும் ஒதுங்கினார்கள். முழுநேர இல்லத்தரசியாகவும் இன்ஸ்டாவில் புகைப்படங்களைத் தெளித்து வந்தார்கள். தபு உள்ளிட்ட சிலர் மட்டும் பாலிவுட்டில் நிறைய படங்கள் … Read more

வசூலில் தெறிக்கவிடும் ‘வலிமை’: நான்கே நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

அஜித்தின் ‘வலிமை’ வெளியான நான்கே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ கடந்த 24 ஆம் தேதி வெளியானதிலிருந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை ’வலிமை’ முறியடித்துள்ளது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36,14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளில் ரூ.24.62 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.20.46 கோடியும், நான்காம் … Read more