குஜராத்தி சினிமாவில் தடம் பதிக்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன்: வெளியான அறிவிப்பு

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இணைந்து குஜராத்தி மொழியில் படமொன்றை தயாரிக்க உள்ளனர். இவர்களின் `ரௌடி பிக்சர்ஸ்’ சார்பில் தமிழில் மட்டுமே படங்கள் தயாராகி வந்த நிலையில், தற்போது அடுத்தகட்டமாக குஜராத்தி திரையுலகிலும் தடம்பதிக்க தயாராகிவிட்டது இந்த ஜோடி! இவர்கள் இருவரின் இணை தயாரிப்பில் `காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் ரிலீஸூக்கு காத்திருக்கிறது. இந்தப் படத்தை தயாரிப்பதுடன் விக்னேஷ் சிவம் இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா இணைந்து தங்களின் `ரவுடி … Read more

'வலிமை' பின்னணி இசை : ஜிப்ரானை வாழ்த்திய யுவன்

வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வலிமை'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன். அவர் இசையமைத்த மூன்று பாடல்கள் மற்றும் விசில் தீம் மியுசிக், தி இன்டன்ஸ் ஆப் பயர் தீம் ஆகியவை யு டியூபில் வெளியிடப்பட்டன. படத்தின் டீசருக்கும் யுவன்தான் இசையமைத்திருந்தார். ஆனால், வலிமை டிரைலர் வெளியான போது அதற்கு இசையமைத்தது யார் என்ற கேள்வி எழுந்தது. படத்திற்குப் பின்னணி இசையை யுவன் அமைக்கவில்லை. இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் அமைத்து வருகிறார் என்ற … Read more

அண்ணாச்சி படம் அங்கதான் நடந்துச்சாம்… சூப்பர் ஷூட்டிங் ஸ்பாட்டாய் இருந்து உருக்குலைந்து போன உக்ரைன்!

உக்ரைன் மீதான ரஷிய தொடுத்துள்ள போர் இன்று ஐந்தாவது நாளாக நீடிக்கிறது. உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை பிடித்ததாக ரஷிய படை அறிவித்தது. ஆனால் உக்ரைன் அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது. ரஜினின்னு பேர் வச்சா படம் ஜெயிச்சுடுமா… ஆடியோ லாஞ்சில் அனலை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்! ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் போரில் இதுவரை இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைன் உருக்குலைந்துள்ளது. … Read more

மூன்று மகள்களுடன் 'வலிமை' படத்தைப் பார்த்த போனி கபூர்! நெட்டிசன்கள் பகிர்ந்த கமென்ட்!

அஜித்குமார், ஹூமா குரைஷி, கார்த்திகேயா ஆகியோரின் நடிப்பில் உருவாக்கிய ‘வலிமை’ படம், பிப்ரவரி 24 திரையரங்குகளில் வெளியானது. குடும்ப ரசிகர்களுக்காக செண்டிமென்ட் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்காக ஆக்ஷன் சீக்வென்ஸ் எனக் கலந்து கட்டி ஹெச்.வினோத் இயக்கிய இந்தப் படத்திற்கு பல்வேறு வகையிலான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. முதல் நாள் முதல் காட்சியைப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஹூமா குரைஷி, கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்தனர். போனி கபூர் மற்றொரு முறை … Read more

வலிமை – 3 நாட்களில் ரூ.100 கோடி வசூல்

அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்க வினோத் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வலிமை'. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் சுமாரான வசூலைக் கூடத் தரவில்லை. அஜித் நடித்த 'வலிமை' படம் வந்தால்தான் தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரவழைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் தியேட்டர்காரர்கள் இருந்தனர். பொங்கலுக்கே வெளிவர வேண்டிய படம் கொரோனா பாதிப்பால் கடந்த வாரம் பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. படம் … Read more

தனுஷ் அதை செய்ய ரஜினி சம்மதிப்பாரா ? கிளம்பியது புது பிரச்சனை..!

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நாயகனாகா அறிமுகமானார். பின்பு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் இரண்டாவது படமாக வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தார் தனுஷ். பலகோடி ரசிகர்கள் தனுஷின் நடிப்பை பார்த்து வியந்து போனார்கள். அந்த நடிப்பில் வியந்தவர்களுள் ஒருவர் தான் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா . தனுஷின் காதல் கொண்டேன் படத்தைப்பார்த்து தனுஷின் மீதே காதல் கொண்டார் ஐஸ்வர்யா. அதன் பின் இருவரும் 2004 ஆம் … Read more

ஆலியாபட்டின் மாஸ்டர் பீஸ் திரைப்படம் : புகழ்ந்த சமந்தா

ஹிந்தியில் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் கங்குபாய் கத்தியவாடி. இந்த படத்தில் ஆலியா பட் கதையின் நாயகியாக நடித்துள்ளா. அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியாகியுள்ளது. திரைக்கு வந்த மூன்று நாட்களில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ள இந்தப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. கங்குபாய் கத்தியவாடி படத்தில் நடித்துள்ள ஆலியாப்பட்டை தொடர்பு கொண்டு அவரது நடிப்பை பாராட்டி இருக்கிறார் சமந்தா. இது குறித்து … Read more

முன்னணி நடிகையுடன் சேர்ந்து சமந்தாவை வெறுப்பேற்றும் நாகசைத்தன்யா..இது எங்க பொய் முடியப்போகுதோ ?

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான ரியல் ஜோடிகளாக வளம் வந்தவர்கள் சமந்தா மற்றும் நாகசைதன்யா. இருவரும் படங்களில் சேர்ந்து நடிக்கும்போது பழக்கம் ஏற்பட்டு பின்பு அந்த பழக்கம் காதலாக மாறியது. பின்பு தங்களது காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல நினைத்த இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு சமந்தா சினிமாவில் நடிக்கமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த செய்திகளை பொய்யாக்கினார் சமந்தா. திருமணத்திற்கு பிறகுதான் சமந்தா மேலும் சுறுசுறுப்பாக பல படங்களில் நடிக்க … Read more

இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், ஆர்.கே. செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம், 389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே. செல்வமணி மீண்டும் இயக்குநர்கள் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அஜித்தின் 61வது படத்தில் இணையும் கவின்

வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் நடித்துள்ள அஜித் குமார் மீண்டும் தனது 61வது படத்திலும் வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். தற்போது வலிமை படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வருகிற மார்ச் மாதம் முதல் அஜித் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. அதற்கான செட் போடும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் … Read more