குஜராத்தி மொழியில் ரீமேக்காகும் ஆண்டவன் கட்டளை

விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஆண்டவன் கட்டளை. காக்காமுட்டை மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் யோகிபாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் இந்த படம் குஜராத்தி மொழியில் தற்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதை ரீமேக் செய்து தயாரிக்கப் போகிறவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி … Read more

அன்று மாமா ரஜினி செய்தார், இன்று மாப்ள தனுஷ் செய்கிறார்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் பிரிந்து வாழ்கிறார்கள். அவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தார் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ரசிகர்களும் விரும்புகிறார்கள். இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா என்ன போஸ்ட் போட்டாலும், அண்ணி தயவு செய்து அண்ணனுடன் சேர்ந்து வாழுங்கள் என்று தனுஷ் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரப் போகிறார்களாம். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்திருக்கிறார்களாம். முன்னதாக ரஜினிக்கும், … Read more

முதல் நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர் – ஹூமா குரோஷி பகிர்ந்த நெகிழ்ச்சிப் பதிவு

முதல் நாளில் வலிமை படத்தை 5 முறை பார்த்த ரசிகர் ஒருவர் பற்றி அப்படத்தின் ஹீரோயின் ஹூமா குரோஷி ட்விட்டரில் நெகிழ்ச்சியாக பகிர்ந்திருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36.14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளில் ரூ.24.62 கோடி ரூபாயும் தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாய் ‘வலிமை’ ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், … Read more

மோகன்லாலை போலவே தான் அஜித்தும் ; சிலாகிக்கும் வலிமை நடிகர்

சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்திராத பல புதிய முகங்களை பார்க்க முடிந்தது. இந்த படத்தின் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய வெளிச்சமும் கிடைத்துள்ளது. ஒருபக்கம் அஜித்துக்கு தம்பியாக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜ் ஐயப்பா என்பவர் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். அதேபோல அஜித்துக்கு எதிராக வில்லன்களுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த மலையாள நடிகர் தினேஷ் பிரபாகர் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்று … Read more

என்னம்மா ஐஸ்வர்யா இப்படி பண்ணிட்டீங்களேமா: ரசிகர்கள் அதிர்ச்சி

தனுஷை பிரிந்த பிறகு வேலையில் பிசியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் . முசாபிர் எனும் காதல் பாடல் வீடியோவை இயக்குவதுடன், தயாரிக்கவும் செய்கிறார். முசாபிரை இயக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இரண்டு வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு வீடியோக்களிலுமே தன் பெயருக்கு பின்னால் அப்பா ரஜினிகாந்தின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார் ஐஸ்வர்யா. தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் செயல் … Read more

“இது உங்கள் மாஸ்டர் பீஸ்; சொல்ல வார்த்தையில்லை” – ஆலியா பட்டை புகழ்ந்து தள்ளிய சமந்தா!

‘இது உங்கள் மாஸ்டர் பீஸ் திரைப்படம்’ என  ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஆலியா பட்டை புகழ்ந்துள்ளார் நடிகை சமந்தா ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படைப்பு ‘கங்குபாய் கத்தியவாடி’. இந்தப் படத்தில் கங்குபாய் கதாபாத்திரத்தில் நடிகை ஆலியா பட் நடித்துள்ளார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. கொரோனா காணமாக … Read more

பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் நோ எவிக்ஷனா?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை விட்டு கமல் வெளியேறிய பின் நடிகம் சிம்பு தொகுப்பாளராக களமிறங்குகிறார். அவரது வருகை தமிழ் பிக்பாஸ் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வார எவிக்ஷனில் ஸ்ருதி அல்லது சினேகன் வெளியேறலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இந்த வாரம் எவிக்ஷன் நடக்குமா? என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அதற்கு காரணம் ஹவுஸ்மேட்டில் ஒருவரான வனிதா, ஏற்கனவே எவிக்ஷன் இல்லாமல் வெளியேறிவிட்டார். … Read more

புது காதல்: ஆசி கேட்கும் ஐஸ்வர்யா ரஜினி

காதல் கணவரான தனுஷை பிரிந்து வாழும் இந்த சங்கடமான நேரத்தில் புது முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அதாவது படங்களை மட்டுமே இயக்கி வந்த அவர் முதல் முறையாக காதல் பாடல் வீடியோவை இயக்கிக் கொண்டிருக்கிறார். Dhanush:’அந்த’ ஒத்த பாயிண்ட்டை வச்சு தனுஷ், ஐஸ்வர்யாவை மடக்கிய ரஜினி முசாபிர் எனும் அந்த காதல் பாடலின் கதை ஐஸ்வர்யாவின் நிஜ கதையோடு ஒத்துப் போகும். தென்னிந்திய திரையுலகை சேர்ந்த சூப்பர் ஸ்டாரின் மகளுக்கும், மும்பையை சேர்ந்த பையனுக்கும் இடையேயான … Read more

“இது பீஸ்ட் மோட்” – 12 நாட்களில் புதிய மைல்கல்லை எட்டிய அரபிக் குத்து பாடல்!

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் கடந்த 14-ஆம் தேதி வெளியாகி இருந்தது.   View this post on Instagram A post shared by Sun Pictures (@sunpictures) பாடல் வெளியாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் யூடியூப் தளத்தில் சுமார் … Read more

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி

கன்னட திரையுலகில் புனித் ராஜ்குமார் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு பெற்ற நடிகர். 46 வயதேயான இவர், கடந்த அக்டோபர் மாதம் 29-ம் தேதி திடீர் மாரடைப்பால் திடீரென காலமானார். அவரது உடலுக்கு தற்போது ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஏற்கனவே தமிழ் பிரபலங்கள் சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று(பிப்., 26) நடிகர் விஜய் பெங்களூரில் உள்ள புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். … Read more