தனுஷுக்கு ஆதரவாக களமிறங்கும் சிம்பு: இதென்னய்யா மெஹா ட்விஸ்ட்..!

தனுஷ் நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக உள்ள படம் ‘ மாறன் ‘. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப்படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார் தனுஷ். அண்மையில் வெளியான ‘மாறன்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாறன். கார்த்திக் நரேன் இயக்கிய இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அதனை … Read more

'வலிமை' வசூலில் சாதனை – மகிழ்ச்சியில் இயக்குநரை சந்தித்த விநியோகஸ்தர்

அஜித்தின் ‘வலிமை’ வசூலைக் குவித்துக்கொண்டு வருவதால் படத்தின் விநியோகஸ்தர் கலைமகன் இயக்குநர் ஹெச்.வினோத்தை சந்தித்து நன்றி தெரிவித்திருக்கிறார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ கடந்த 24 ஆம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. வெளியான முதல் நாளிலேயே ரூ.36,14 கோடி ரூபாய்யும், இரண்டாவது நாளான நேற்று ரூ.24.62 கோடி ரூபாய்யும் வசூலித்து, மொத்தம் ரூ.60.79 கோடி ரூபாய்யை தமிழகத்தில் மட்டுமே வசூலித்துள்ளது என்று சொல்லப்படுகிறது. அதனை நிரூபிக்கும் விதமாய் ‘வலிமை’ ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய் ஓடிக்கொண்டிருக்கிறது. … Read more

பெண்களை தவறாக பயன்படுத்தும் இயக்குனர்கள்: பூனம் கவுர்

தென்னிந்திய நடிகையான பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, வெடி, பயணம், உன்னைப்போல் ஒருவன், 6 மெழுகுவர்த்திகள், என்வழி தனிவழி, அச்சாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பூனம் கவுர், ராம்கோபால் வர்மா இயக்கதில் அட்டாக் என்ற படத்தில் நடித்தார். மீ டூ புகார்கள் பிரபலமாக இருந்த நேரத்தில் ராம்கோபால் வர்மா தன்னை பாலியில் ரீதியாக துன்புறுத்தியாக புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது அவர் தகூறியிருப்பதாவது: இந்த இருவருமே … Read more

ரசிகர்களை நண்பர்களாக நடத்தும் விஜய்..என்ன மனுஷன் யா….!

கடந்த வருடம் அக்டோபர் 29 ஆம் தேதி கன்னடத்தின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. நடிகர் விஜய் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கடந்த வருடம் அக்டோபர் 29 ஆம் தேதி கன்னடத்தின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மரணம் திரையுலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. சீக்ரெட் … Read more

புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்திய விஜய்! | Video

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் எதிர்பாராத மரணம் ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகையும் சினிமா ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்குக் கன்னடத் திரையுலகம் மட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். நிறைய பேர் நேரிலேயே சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது ரசிகர்கள் பலரும் கூடி அழுதது ஒட்டுமொத்த இந்தியாவையுமே உலுக்கியது. தற்போது அவரது நடிப்பில் உருவாகிவந்த படங்களின் பணிகளை அவரது மூத்த சகோதரர் சிவராஜ்குமார் பார்த்து … Read more

கவனம் ஈர்த்த வெங்கட் பிரபு – அசோக் செல்வனின் ‘மன்மத லீலை’- ரிலீஸ் தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகும் இப்படம் குறித்து, “மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்குப் பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் … Read more

தமிழ் சினிமாவில் வலிமையாக காலூன்ற முயற்சிக்கும் ஹூமா குரேஷி

பாலிவுட் நடிகையான ஹூமா குரே, அங்கு இரண்டாவது வரிசை நடிகைதான். ரஜினி நடித்த காலா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இரண்டு படத்திலுமே அவர் ஹீரோயின் என்று சொல்லிக் கொள்ள முடியாத கேரக்டர். காலாவின் ரஜினியின் முன்னாள் காதலியாக வந்து செல்வார். வலிமையில் அஜீத்தின் சக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இரண்டிலுமே அவருக்கு விரல் விட்டு எண்ணக்கூடிய காட்சிகள் தான். என்றாலும் ஹீமா தமிழ்சினிமாவில் வலிமையாக காலூன்ற முயற்சிக்கிறார். தமிழ் சினிமாவுக்கென்று … Read more

பிக்பாஸிலிருந்து விலகிய கையோடு கமல் செய்த காரியம்: வேற லெவல் ஆண்டவரே..!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘ விக்ரம் ‘ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ் . கடந்த ஆண்டு துவங்கிய இதன் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் ‘விக்ரம்’ படம் குறித்த முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி , நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பகத் பாசில் … Read more

"நான் நடிகன் ஆவேன்னு நினைச்சதில்ல!"- மனம் திறக்கும் மனோஜ் பாரதிராஜா

இயக்குநர்களின் வாரிசுகளில் மனோஜ் பாரதிராஜா முக்கியமானவர். பாரதிராஜாவின் மகன் என்றாலும், மணிரத்னத்திடம் வித்தை கற்றவர். ஹீரோ, பாடகர், இசையமைப்பாளர், இப்போது நடிப்பு கற்றுக்கொடுக்கும் மாஸ்டர் என பன்முகம் காட்டுகிறார். ‘ஈஸ்வரன்’, ‘மாநாடு’ படங்களுக்கு பிறகு ‘விருமன்’ உள்பட பல படங்களில் நடித்து வரும் மனோஜிடம் பேசினோம். மனோஜ் பாரதிராஜா “விகடன் பத்திரிகைகள்ல என்னோட பேட்டிகள் நிறைய வந்திருக்கு. ஆனா, முதன்முறையா விகடன் அலுவலகத்துக்கு வந்திருக்கேன். ஆபீஸ் செட்அப்பே செமையா இருக்கு…” என முகம் மலர்கிறார். “சினிமாவும், இசையும்தான் … Read more

’கோப்ரா’ ரிலீஸ் தேதி எப்போது?: ரசிகரின் கேள்விக்கு அப்டேட் கொடுத்த இயக்குநர்

’கோப்ரா’ படத்தினை வெளியிட திட்டமிடும் தேதியை அறிவித்திருக்கிறார், அப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த … Read more