ஐதராபாத்தை இந்தியாவின் சினிமா தலைநகரமாக்க வேண்டும் : ராணா

மலையாளத்தில் பிஜுமேனன், பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'அய்யப்பனும் கோஷியும்' படம் தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரும் பிப்-25ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. சாகார் சந்திரா இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் பவன் கல்யாண் ஜோடியாக நித்யா மேனன் மற்றும் ராணா ஜோடியாக சம்யுக்தா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். சமுத்திரக்கனி ராணாவின் தந்தையாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த … Read more

'டான்' படத்தின் சேட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய பிரபல தொலைக்காட்சி சேனல்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் டான் . இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி வருகிறார். டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன்தான் இந்த படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ப்பா… 5 நாளைக்கு இத்தனை கோடிகளா? பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக சிம்பு வாங்கும் சம்பளம்! மேலும் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, முனிஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். … Read more

அம்மா பயிற்சி… காஜல் அகர்வால் மகிழ்ச்சி

'அம்மா' என்ற வார்த்தையும், அதன் பாசமும் உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பிடித்தமான ஒன்று. சினிமாவில் மிகவும் பிரபலமான இருக்கும் சிலர் கொஞ்சம் தாமதமாகத் திருமணம் செய்து கொள்வார்கள். சிலர் தாமதமாகக் குழந்தை பெற்றுக் கொள்வார்கள், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், 'அம்மா'வாகும் போது அவர்களும் தங்களது 'பிரபலம்' என்ற முகத்திரையை தூரப் போட்டுவிட்டு அந்த மகிழ்வை சராசரி மனிதனாகப் பகிர்ந்து கொள்வார்கள். அப்படித்தான் தனது தாய்மை உணர்வை மகிழ்வுடன் பகிர்ந்துள்ளார் பிரபல நடிகை காஜல் … Read more

இனி இதுபோல் நடக்காது..இதுதான் கடைசி : தனுஷ்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா நடிகர் என்பதை தாண்டி தற்போது உலக சினிமா ரசிகர்களும் அறிந்த நடிகராகிவிட்டார். துள்ளுவதோ இளமை படத்தில் பள்ளி மாணவனாக அறிமுகமான தனுஷ் இன்று ஹாலிவுட் வரை சென்று கலக்குகிறார் என்றால் அதற்கு அவரின் கடின உழைப்பு மட்டுமே காரணம். யார் என்ன விமர்சித்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது தன் வேலை ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் தனுஷ். அதன் காரணமாகத்தான் தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி … Read more

வலிமை கொண்டாட்டத்தில் அரபிக்குத்துக்கு ஆடிய அஜித் ரசிகர்கள்

அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.. படமும் பைக் ரேசிங், அதிரடி சேஸிங் என தங்களை திருப்திப்படுத்தும் விதமாக இருப்பதாக அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்தநிலையில் வலிமை கொண்டாட்டத்தின்போது சமீபத்தில் வெளியான விஜய்யின் அரபிக்குத்து பாடலுக்கும் அஜித் ரசிகர்கள் ஆட்டம் போட்ட வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. வலிமை படத்தின் முதல்நாள் முதல் காட்சியை பார்ப்பதற்காக பொள்ளாச்சி தங்கம் தியேட்டரில் ரசிகர்கள் நேற்று இரவு கூடினார்கள். … Read more

ரசிகர்களால் வம்பில் மாட்டிய அஜித்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் ரிலீசுக்காக வெறித்தனமாக காத்திருந்தனர் ரசிகர்கள். இந்நிலையில் நேற்றைய தினம் வெளியாகியுள்ள ‘வலிமை’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அஜித் ரசிகர்களின் வெறித்தனமான காத்திருப்பிற்கு பின்னர் … Read more

'வலிமை' வாய்ப்பு, டிவி நடிகை சைத்ரா மகிழ்ச்சி

அஜித் நடித்து நேற்று வெளியான 'வலிமை' படத்தில் துணை கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர். அவர்களில் கவனிக்கப்படும் ஒருவராக டிவி நடிகை சைத்ரா ரெட்டி இருந்தார். படம் இணையக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட கதை என்பதால் சைபர் கிரைம் பிரிவு அதிகமாகக் காட்டப்பட்டது. அதில் சைபர் கிரைம் பெண் அதிகாரியாக சைத்ரா நடித்திருந்தார். படத்தைப் பார்த்த பலரும் யார் இவர் எனக் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். மேலதிகாரியான அஜித் சொல்லும் ஆலோசனைகளை உடனடியாகக் கேட்டு துறுதுறுவென நடித்திருந்தார் சைத்ரா. அஜித் படத்தில் … Read more

ரஜினியை நினைத்து கவலைப்படும் ரசிகர்கள்: சீக்கிரமே நல்ல முடிவா எடுங்க தலைவரே..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை … Read more

”விஜய் ஆண்டனி நடிப்பில் நிறையவே தேறிவிட்டார்” – விஜய் மில்டன்

”விஜய் ஆண்டனி நடிப்பில் நிறைய தேறிவிட்டார்” என்று பாராட்டியுள்ளார் இயக்குநர் விஜய் மில்டன். ‘கடுகு’ படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைராகி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். அதேசமயம், விஜய் ஆண்டனியுடன் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தினையும் இயக்கி வருகிறார். சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், விஜய் மில்டன் படம் குறித்து மனம் திறந்துள்ளார். ”நானும் … Read more

நாகசைதன்யா – பூஜா ஹெக்டே கூட்டணியில் உருவாகும் தெலுங்கு மாநாடு?

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான மாநாடு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கதாநாயகனாக சிம்புவுக்கு கைகொடுத்த படமாக மட்டுமல்ல, ஹீரோ சிம்புவா, இல்லை எஸ்ஜே சூர்யாவா என கேட்கும் அளவுக்கு இருவருக்குமே முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் வெங்கட்பிரபு இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமை மற்றும் தெலுங்கு டப்பிங் உரிமை இரண்டையும் நடிகர் ராணாவின் தந்தை தனது சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பாக கைப்பற்றியுள்ளார். அதேசமயம் … Read more