'வசீகரர்' கௌதம் வாசுதேவ் மேனன் படங்களின் சுவாரஸ்யமான தகவல்கள்! Special Photo Album #HappyBirthdayGVM

கௌதம் மேனன் கௌதம் வாசுதேவ் மேனன் பிப்ரவரி 25, 1973இல் பாலக்காட்டில் பிறந்தார். அப்பா மலையாளி. அம்மா தமிழர். வளர்ந்தது சென்னை அண்ணா நகர். மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்து விட்டு ட்ரெயின் ஏறி புதுக்கோட்டை மூகாம்பிகை கல்லூரியில் மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்தார். நாயகன், Dead poet society போன்ற படங்களில் ஈர்க்கப்பட்டு பெற்றோரிடம் தன் இயக்குனராகும் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். அம்மா இவருக்கு சப்போர்ட். முதலில் சில விளம்பரங்களை இயக்கி விட்டு ராஜிவ் … Read more

வலிமை படம் பைரசி தளத்தில் லீக்

'வலிமை' படத்தின் பைரசி பிரிண்ட் முழு படமுமும் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கியுள்ள 'வலிமை' இன்று காலை திரையரங்குகளில் வெளியானது . ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் வெளியாகிய சில மணி நேரத்தில் இப்படத்தின் பைரஸி பிரிண்ட் முழு படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. சில இணையதள பக்கங்களிலும் , டெலிகிராம் பக்கங்களிலும் பதிவிட்டுள்ளார் . இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர் .

'நெஞ்சுக்கு நீதி' ரிலீஸ் எப்போது ? – புதிய தகவல்

ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆனா 'ஆர்டிகிள் 15' திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றி இப்படத்தை தயாரித்து வருகிறார். தமிழில் 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். உதயநிதி கதாநாயக நடிக்க இவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். திப்பு நினன் தாமஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இப்படத்தின் முன்னோட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் … Read more

சின்னத்திரைக்கு வந்த அடுத்த நடிகர் சிம்பு

ஒரு காலத்தில் டிவியில் நடிப்பவர்களை சினிமாவில் நடிக்க வைக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் மிகவும் தயங்குவார்கள். அதனால், டிவியில் அறிமுகமான பல நடிகர்கள், நடிகைகள் நல்ல திறமையிருந்தும் சினிமாவில் அறிமுகமாக முடியாமல் தவித்து வந்தார்கள். காலம் மாறுவது போல் அதுவும் மாறியது. பெரிய திரையான சினிமாவிலிருந்து சின்னத் திரையான சினிமாவுக்கு சில முன்னணி நடிகர்களே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கச் சென்றதன் பலனாக டிவியிலிருந்தும் சினிமாவுக்கு வர ஆரம்பித்தார்கள். சரத்குமார், சூர்யா, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, ஆர்யா, கமல்ஹாசன், விஷால், விஜய் … Read more

ஹிந்தி விக்ரம் வேதா – சைப் லுக் வெளியீடு

தமிழில் வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகி வருகிறது. புஷ்கர் – காயத்ரியே ஹிந்தியில் இயக்குகின்றனர். இதில் விஜய் சேதுபதி நடித்த தாதா வேடத்தில் ஹிருத்திக் ரோஷனும், மாதவன் நடித்த போலீஸ் வேடத்தில் சைப் அலிகானும் நடிக்கின்றனர். தற்போது சைப்பின் லுக்கை வெளிப்படுத்தும் விதமாக அவரது போட்டோவை வெளியிட்டுள்ளனர்.

சாய் தன்ஷிகாவின் ஷிகாரு பட டிரைலர் வெளியானது

இருட்டு, லாபம் படங்களை அடுத்து தமிழில் யோகிதா என்ற படத்தில் நடித்து வரும் சாய் தன்ஷிகா, தெலுங்கில் ஹரி கொலைகானி இயக்கத்தில் ஷிகாரு என்ற படத்திலும் நடித்து ள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் அபிநவ் மெடி செட்டி, தேஜ், அன்னபூர்ணா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சேகர் சந்திரா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் வி.வி.விநாயக் வெளியிட்டுள்ளார். டிரைலர் தொடங்கி இறுதி வரை நகைச்சுவைக் காட்சிகளாக நிறைந்துள்ளது. சாய் … Read more

ஸ்ருதிஹாசனுடன் திருமணம் எப்போது? காதலர் சாந்தனு சொன்ன பதில்

தெலுங்கில் பிரபாஸ் உடன் சலார் என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன், அதையடுத்து பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். மும்பையில் வசித்து வரும் ஸ்ருதி, டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். அவர்களின் காதல் திருமணத்தில் முடியும் என்கிற தகவலும் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசனுடன் திருமணம் குறித்து சாந்தனுவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் ஒரு பதில் கொடுத்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஸ்ருதிஹாசன் … Read more

பிரணிதாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய கோல்டன் விசா!

தமிழ் சினிமா நடிகர்களில் பார்த்திபன், சிம்பு, திரிஷா, ராய் லட்சுமி போன்றவர்களுக்கு ஐக்கிய அமீரகம் விசா வழங்கி இருக்கிறது. அதேபோல் மலையாள சினிமாவைச் சார்ந்த மோகன்லால், மம்முட்டி, பிரித்திவிராஜ், துல்கர் சல்மான், மீரா ஜாஸ்மின், அமலாபால் போன்ற நடிகர்களுக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கன்னட நடிகையான பிரணிதாவுக்கும் ஐக்கிய அமீரகம் விசா வழங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். இந்த பிரணிதா தமிழில் உதயன், சகுனி, மாசு என்ற மாசிலாமணி, ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் … Read more

சென்னையில் புது வீட்டில் குடியேறிய இயக்குனர் மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் மாரிசெல்வராஜ். அடுத்தபடியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, பகத் பாசில், வடிவேலு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் ஒரு இன்னொரு படத்தையும் இயக்குகிறார் மாரிசெல்வராஜ். இந்நிலையில் நேற்று மாரி செல்வராஜ் சென்னை அம்பத்தூரில் கட்டி வந்த புதிய வீட்டில் குடியேறியிருக்கிறார். அவரது புதிய வீட்டிற்கு இயக்குனர்கள் ராம், பா.ரஞ்சித், … Read more

சென்னையில் வலிமை படம் பார்த்த ஹூமா குரேஷி, கார்த்திகேயா, போனி கபூர்

வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்கள். போனி கபூர் படத்தை தயாரித்திருக்கிறார். இன்று திரைக்கு வந்துள்ள வலிமை படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அதோடு இதுவரை வெளியான அஜித் படங்களின் வசூலை இந்த வலிமை படம் முறியடித்து விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.இந்த நிலையில் இன்று காலை வலிமை படத்தின் முதல் … Read more