"`முகவரி' படத்தோட கிளைமாக்ஸை தியேட்டர் ஆபரேட்டர்கள் மாத்திட்டாங்க!"- ரகசியம் உடைக்கும் வி.இசட்.துரை

அஜித்தின் திரைப்பயணத்தில் ‘முகவரி’ முக்கியமான படம். ஜோதிகா, ரகுவரன், கே.விஸ்வநாத், சித்தாரா, விவேக் என பர்ஃபாமென்ஸில் பிச்சு உதறுபவர்களுடன் அஜித்தும் அசத்தியிருப்பார். பாலகுமாரனின் வசனம், பி.சி.ஶ்ரீராமின் ஒளிப்பதிவு, தேவாவின் இசை என பல மேஜிக்குகள் இந்தப் படத்தில் உண்டு. 22 ஆண்டுகள் காணும் ‘முகவரி’க்காக அதன் இயக்குநர் வி.இசட்.துரையிடம் பேசினேன். “இந்தப் படத்தை இத்தனை வருஷத்துக்கு பிறகும் கொண்டாடுவாங்கன்னு நினைச்சதில்ல. அப்ப எனக்கு 22 வயசுதான். யார்கிட்டேயும் ஒர்க் பண்ணினதில்ல. சினிமா அனுபவமும் பக்குவமும் இல்லாத ஒரு … Read more

அவசர எண் விளம்பரத்தில் புது யுக்தி- நடிகர் விஜயின் படங்களை வைத்து தெறிக்கவிட்ட கேரள போலீஸ்

கேரளாவில் அவசர உதவி எண்ணை மக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், அம் மாநில காவல்துறை, நடிகர் விஜயின் படங்களை வைத்து, புது யுக்தியின் மூலம் வித்தியாசமாக விளம்பரம் செய்துள்ளது வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக நாம் பேருந்திலோ, ரயிலிலோ அல்லது சாலைகளிலோ பயணிக்கும்போது, எதிர்பாராதவிதமாக நமக்கு அவசர உதவி தேவைப்படும். நாம் மட்டுமின்றி நமது உறவினர்கள் அல்லது நண்பர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படலாம். அந்தவகையில், அமெரிக்காவில் எல்லா அவசர உதவிக்கும் 911 என்ற எண் இருப்பது போல், … Read more

ராஜா ராணி 2 சீரியலிருந்து விலகிய முக்கிய பிரபலம்

விஜய் டிவியில் எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது ராஜா ராணி 2. சந்தியாவின் கனவை நனவாக்க அவரது அண்ணன் சரவணனை உதவ சொல்லி சந்தியாவின் தந்தை கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து அண்ணன் தங்கை செண்டிமெண்ட் ட்ராக் புதிதாக வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவரது அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சால்சா மணி சீரியலை விட்டு திடீரென விலகியுள்ளார். சால்சா மணி எதற்காக சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்து எந்தவொரு தகவலும் இல்லை. … Read more

ஸ்ரீதேவி நினைவு தினம்: அன்று இரவு துபாயில் நடந்தது என்ன? | Photo Story

ஸ்ரீதேவி இந்தியாவின் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2018, பிப்ரவரி 24, துபாயில் அவர் இறந்ததாகச் செய்திகள் வெளியாகின. ஸ்ரீதேவி தன் குடும்பத்துடன்… ஸ்ரீதேவி, கணவர் போனி கபூர், மகள் குஷி மூவரும் பிப்ரவரி 20 துபாயில் நடந்த போனி கபூரின் சகோதரர் மகனும் நடிகருமான மோஹித் மர்வா திருமணத்தில் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவி திருமணம் முடித்து பிப்ரவரி 21 போனி கபூரும் குஷியும் இந்தியா திரும்பி விட … Read more

‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

‘பீப்’ பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்புவுக்கு எதிராக, சென்னை காவல்துறையில் பதிவான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் சிம்பு, பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாகக் கூறி, இணையத்தில் ‘பீப்’ பாடல் ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடலைப் பாடிய சிம்பு மற்றும் அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக, பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் … Read more

விஜய்க்காக 100 மெயில் கணக்குகள் துவங்கிய நடிகை ரோஜாவின் மகன்

90களில் பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆந்திர மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் கவுசிக் தீவிரமான விஜய் ரசிகர். சமீபத்தில் ரோஜா, ஆர்கே செல்வமணி, கவுசிக் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் விஜய் மீதான ஈர்ப்பு எத்தகையது என கேட்டதற்கு அவர் கூறிய பதில் விஜய் ரசிகர்களையே திகைக்க வைப்பதாக இருக்கிறது. … Read more

வலிமை விமர்சனம்: பைக்கர்ஸ் கேங்க் vs நேர்மையான போலீஸ் அதிகாரி… மேக்கிங் செம, ஆனா பேக்கேஜிங்?

சென்னை மாநகரில் செயின் பறிப்புகளும், கொலைகளும், போதை மருந்து ஊடுருவலும் அதிகரிக்கின்றன. மதுரையிலிருந்து மாற்றலாகி வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் அர்ஜுன், தன் புத்திசாலித்தனமான விசாரணையின் மூலம் இதற்குப் பின் இருக்கும் பைக்கர்ஸ் கேங்கைக் கண்டறிகிறார். அதை இயக்கும் தலைவனையும் நெருங்குகிறார். அடுத்தடுத்த சவால்களைக் கடந்து அவர் தன் ‘வலிமை’யால் வில்லனை வென்றாரா என்பதுதான் ‘வலிமை’ படத்தின் கதை. ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் அதே ஃபிட்டான, ஸ்மார்ட்டான இன்னமும் யங்கான ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து … Read more

”யார் வெற்றி பெற்றாலும் நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்” – ஐசரி கணேஷ்

”நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை ’வரவேற்கிறேன் என்றும் யார் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தனது உதவிகள் தொடரும்’ என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். அதுதொடர்பான, விஷால் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ”நடிகர் சங்கத் தேர்தல் … Read more

‛‛எதிர்பார்க்கலேல… நானும் எதிர்பார்க்கல… – கமல் இடத்தை பிடித்த சிம்பு!

பிக்பாஸை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். விக்ரம் பட வேலைகள் முடியாததால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருப்பதால் ரம்யா கிருஷணனால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியாது என்பது பலரின் கருத்து. இதனால் நடிகர் … Read more

பைக் வேகத்தில் பாதியாவது திரைக்கதைக்கும் வேண்டாமா? – 'வலிமை' திரைப்பார்வை

நீண்ட பெரும் எதிர்பார்ப்புகளை அடுத்து இன்று திரைக்கு வந்திருக்கிறது வலிமை. அஜித், எச்.விநோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்த சினிமா உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம். நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக வருகிறார் அஜித். சாத்தானின் அடிமைகள் என்ற குழு போதைப் பொருள் விற்பனை, நகைபறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடு படுகின்றன. டெக்னாலஜி உதவியுடன் அவர்கள் செய்யும் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் … Read more