ரிலீஸ்க்கு இரண்டே நாட்கள்.. 'கங்குபாய் கத்தியவாடி' பெயரை மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படத்தின் பெயரை மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை அலியா பட் நடித்துள்ள இந்தி திரைப்படமான ‘கங்குபாய் கத்தியவாடி’, நாளை நாடு முழுவதும் வெளியாக உள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்து மும்பையில் அரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மைச் கதையை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தை தடை செய்யக் கோரி கங்குபாயின் மகன் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை விசாரித்த … Read more

என்னை அழ வைத்து ஆறுதல் சொன்னார் லலிதா ; நவ்யா நாயர் நினைவலைகள்

தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மலையாள சீனியர் நடிகை கேபிஏசி லலிதா. 74 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானார். நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருடன் படங்களில் நடித்த அனுபவம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை … Read more

வலிமை: 2 ஆண்டுக்குப்பிறகு ரிலீஸானது; தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு முடிவு காட்டும் விதமாக இன்று வெளியாகி உள்ளது வலிமை திரைப்படம். 2019 ஆகஸ்டில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. அதன் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய H.வினோத் இயக்கத்திலேயே, அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. வலிமை என பெயரிடப்பட்ட படத்திற்கு அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு செய்த அட்ராசிட்டிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. கோவிட் தொற்று பிரச்னையால் படப்பிடிப்பு தள்ளி போன … Read more

’வலிமை’ திரையிட தாமதம் – திரையரங்கக் கண்ணாடியை உடைத்த ரசிகர்கள்

மதுரையில் ’வலிமை’ படத்தை திரையிட தாமதமானதால் திரையரங்கக் கண்ணாடியை உடைத்து அஜித் ரசிகர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நடிகர் அஜித்குமார் நடித்து இரண்டு வருடங்களுக்கு பின்பு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் இன்று வெளியானது. மதுரையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி முதல் ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகமாக திரைப்படத்தை காண திரையரங்குகளுக்கு முன்பு குவிந்தனர். அஜித்குமார் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள், மேளதாளங்கள் மற்றும் வானவேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடி திரைப்படத்தை வரவேற்றனர். இந்நிலையில் … Read more

கிளாப் படத்தில் மாற்றுத் திறனாளியாக நடிக்கும் ஆதி

தி வாரியர் படத்தில் வில்லனாக நடித்து வரும் ஆதி, ஹீரோவாக நடித்திருக்கும் படம் கிளாப். அகன்ஷா சிங், பிரகாஷ்ராஜ், நாசர், கிரிஷ்கா கரூப் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் பிருத்வி ஆதித்யா இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஆதி ஒரு ஓட்டப்பந்தைய வீரராக நடிக்கிறார். ஒலிம்பிக் கனவுடன் ஓடும் அவரை ஊக்கப்படுத்தி தயார் செய்கிறார் பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ். ஆனால் விளையாட்டுத்துறையில் இருக்கும் அரசியலில் சிக்கி அதனால் ஒரு காலை இழக்கிறார். காலை இழந்தாலும் எப்படி தான் … Read more

வலிமை FDFS: படம் பார்த்த பிரபலங்கள் சொல்வதென்ன?

வலிமை திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் முதல் நாள் முதல் காட்சிக்கு சென்று வரும் பிரபலங்கள், தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்கள். அருண் விஜய், யாஷிகா ஆனந்த், இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் காட்சியைப் பார்க்க சென்றிருந்தனர். படத்தில் நடித்திருந்த கார்த்திகேயா, ஹுமா குரைஷி, தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் ரோகினி திரையரங்கத்தில் முதல் காட்சியை ரசிகர்களோடு பார்த்தனர். #ValimaiFDFS mass ♥️ anything for thala pic.twitter.com/XkcPiTGMlD — Yashika … Read more

'வலிமை' முதல் காட்சி தாமதம் – திரையரங்கு கண்ணாடி, மேற்கூரைகளை உடைத்து ரசிகர்கள் ரகளை

திரையரங்கு உள்ளே அனுமதிக்காமல் தாமதப்படுத்தியதாகக் கூறி ஆவேசமடைந்த ரசிகர்கள் கண்ணாடி மற்றும் மேற்கூரைகளை உடைத்தனர். அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள ‘வலிமை’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த வார தொடக்கத்தில் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து திரையங்குகளிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்தன. தமிழகத்தின் பல திரையரங்குகளில் ரசிகர்களுக்காக அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட்டன. இதனையொட்டி ஒவ்வொரு தியேட்டருக்கு முன்பாகவும் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க நடிகர் அஜித் … Read more

போதை பொருள் ஹேங், மிரள வைக்கும் பைக் சாகசம், ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் : வலிமை முதல் பார்வை

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக இணைந்த ‛வலிமை' படம் இன்று(பிப்., 24) உலகம் முழுக்க 4000 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் படம் வருவதால் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். படத்தின் முதல்காட்சிக்கு பின் வலிமை படம் எப்படி இருந்தது என்பதை இங்கு சுருக்கமாக பார்க்கலாம். ஆன்லைன் மூலம் போதை பொருள் கடத்தல் நடக்கிறது. அதை நேர்மையான போலீஸ் அதிகாரியான அஜித் எப்படி தடுக்கிறார். இதன் உடன் தன் குடும்பத்தை … Read more

நம்பர் ஒன் நடிகையாக ஆசைப்படவில்லை : சமந்தா

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த சமந்தா, தற்போது பாலிவுட், ஆங்கில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு அவரது சினிமா மார்க்கெட் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியிருக்கிறது. அதோடு புஷ்பா படத்தில் சிங்கிள் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய சமந்தா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற டீசர்ட் அணிந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தநிலையில் நம்பர் ஒன் நடிகையாகும் ஆசை உள்ளதா? என்று ரசிகர்கள் அவரிடத்தில் கேட்ட கேள்விக்கு, அப்படியொரு ஆசை இல்லை என்று … Read more

முடிவுக்கு வந்த சூப்பர் நிகழ்ச்சி : வின்னர் யார் தெரியுமா?

சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விளையாடி வரும் கலகலப்பான நிகழ்ச்சி 'சூப்பர் டாடி'. ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சியில் ராமர், மதுரை முத்து, வேல்முருகன், வினோத் உள்ளிட்ட பலரும் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு விளையாடி வந்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதிபோட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில், பிரபல நடிகரான கிங் காங் மற்றும் அவரது மகன் துரை முருகன் முதலிடத்தை பிடித்து வின்னர் டைட்டிலை வென்றனர். அவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது. … Read more