தனுஷ் வழியில் நிம்மதி தேடும் ஐஸ்வர்யா: எப்படியோ நல்லது நடந்தா சந்தோஷம்தான்..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். … Read more

ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வனின் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’

நடிகர் அசோக் செல்வனின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி கவனம் ஈர்த்தது ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படத்தினை விஷால் வெங்கட் இயக்க ‘ஜெய் பீம்’ மணிகண்டன் வசனம் எழுதியிருந்தார். அஷோக் செல்வன், நாசர் மகன் அபி ஹாசன், நாசர்,கே.எஸ் ரவிக்குமார், மணிகண்டன், ரித்விகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த இப்படத்தின் … Read more

சிறந்த படம்: புஷ்பாவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது

அரசு அல்லாத தனி அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த திரை கலைஞர்களுக்கு தாதா சாஹேப் பெயரில் விருது வழங்கி வருகிறது. 2021ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (21ம் தேதி) மும்பையில் நடந்தது. இதில் கடந்த ஆண்டின் சிறந்த படமாக புஷ்பாவுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக 83 படத்தில் கபில்தேவாக நடித்த ரன்வீர் சிங், நடிகையாக மிமி படத்தில் நடித்த கீர்த்தி சனோன், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது ஷெர்ஷா … Read more

காந்தாரி காந்தாரி …! பிருந்தா இயக்கத்தில் பின்னியெடுத்த கீர்த்திசுரேஷ்…!

கீர்த்தி சுரேஷின் முதல் ஆல்பம் வீடியோவான இந்தப் பாடலுக்கு பவன் சிஹெச் இசையமைத்திருக்கிறார். சுடாலா அசோக் தேஜா எழுதியிருக்கும் இந்தப்பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் பிருந்தா நடன இயக்கம் செய்திருக்கிறார். இந்தப் பாடலை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் , “ உங்களுக்கு பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார். முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் வெளியாகியிருக்கும் இந்தப்பாடலில், கீர்த்தி சுரேஷின் நடனம் கவனம் பெற்றிருக்கிறது.இந்தப்பாடலை தற்போது வரை 10 லட்சத்திற்கும் … Read more

டோலிவுட்டின் நியூ க்ரஷ் இவர்தான்..! யார் இந்த ஶ்ரீலீலா ?

ஹீரோயின்களை அழகுப் பதுமைகளாக காட்டுவதில் டோலிவுட் கில்லி. அந்த நாயகிகளுக்கு படத்தில் முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ அவர்கள் ஃப்ரேமில் ஜொலிப்பார்கள். பாடல் காட்சிகளில் மேக்கப், வித்தியாசமான டிசைன்களில் காஸ்ட்யூம் எனப் பல புரட்சிகளை உருவாக்குவர். அப்படி ஒரு ஹீரோயின் டோலிவுட்டின் க்ரஷ் மெட்டீரியலாக மாறிவிட்டால் போதும், அடுத்த ஆறேழு வருடங்களுக்கு செம பிஸியாகிவிடுவார்கள். அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, எந்த மொழி படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் சரி, அரியணை ஏற்றுவது என்னவோ தெலுங்கு சினிமாதான். … Read more

'மூன்றாம் பிறை’ வெளியாகி 40 ஆண்டுகள்: இளையராஜாவை சந்தித்த தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன்

கமல்ஹாசனின் ‘மூன்றாம் பிறை’ திரைப்படம் வெளியானதையொட்டி அதன் தயாரிப்பாளர் டி.ஜி தியாகராஜன் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார். 80ஸ் கிட்ஸ்… 90ஸ் கிட்ஸ்… மட்டுமல்ல 2கே கிட்ஸ் என மூன்று தலைமுறைகள் கடந்தாலும் தமிழ் சினிமாவின் கடக்க முடியாத திரைப்படம் ‘மூன்றாம் பிறை’. கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்த இப்படத்தினை இயக்கி அக்காலத்திலேயே சினிமா ரசிகர்களின் இதயத்தில் ’மகேந்திர பாகுபலியாய்’ சிம்மாசனமிட்டு அமர்ந்தார் பாலு மகேந்திரா. ’விவேகம்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்டப் படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் சத்யஜோதி … Read more

விஜய் கார் இன்சூரன்ஸ் செய்யப்பட்டது : ஆதாரம் வெளியானது

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தனது சிகப்பு நிற மாருதி செலிரியோ காரில் வந்தார். அந்த காரின் பதிவு எண்களை வைத்து சிலர் அந்தக் காருக்கான இன்ஷூரன்ஸ் 2020ம் ஆண்டே காலாவதி ஆகிவிட்டது எனவும், 2021-ஆம் ஆண்டுக்கான ஓர் அபராதத் தொகை நிலுவையில் இருப்பது எனவும் சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டனர். இதுகுறித்து விஜய் தரப்பு அந்த காருக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆதாரத்துடன் தகவல் … Read more

கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் மொத்தத்தையும் காட்டிய பூனம் பஜ்வா…! குளுகுளு த்ரோ பேக் புகைப்படம் வைரல்…!

இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வருகிறார் கவர்ச்சி நாயகியாக திரைப்படங்களிலும் சமூக வலைதளங்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பூனம் பஜ்வா இப்போது பாண்டிச்சேரியில் பாவாடை சட்டையில் எடுத்த த்ரோபேக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் … Read more

"என் படங்கள் குறித்து மீம்ஸ் போட்டு தேவையில்லாத நாடகம் ஆக்கிவிட்டார்கள்!"- விஜய் சேதுபதி

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியைச் சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலிலிருந்து சில துளிகள். உங்களை யாரும் நிராகரித்ததுண்டா? விஜய் சேதுபதி “அதெல்லாம் பண்ணியிருக்கிறார்கள். அது இல்லாமல் எப்படி. ஆனால், என்னிடம் கடினமாக நடந்துகொண்டு பின்னர் என் … Read more

'அரபிக் குத்து' பாடலுக்கு ஆட்டம்போட்ட ஜெய் – அம்ரிதா

நடிகர் ஜெய் மற்றும் அம்ரிதா இருவரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் வெளியான அரபிக் குத்து பாடல் 70 மில்லியன் பார்வைகளை தாண்டி யு-டுயூப்பில் டிரெண்டிகில் இருக்கிறது . சமந்தா, அனிருத், யாஷிகா போன்ற பல பிரபலங்கள் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் சுந்தர் சி … Read more