'அரபிக் குத்து' பாடலுக்கு மனைவியுடன் சேர்ந்து நடனமாடி 'தெறி'க்கவிடும் அட்லீ!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘அரபிக் குத்து’ பாடல் அண்மையில் வெளியாகி இருந்தது.  View this post on Instagram A post shared by Atlee (@atlee47)  யூட்யூப் தளத்தில் மட்டுமே 6.6 கோடி வியூஸ்களை இந்த பாடல் பெற்றுள்ளது. … Read more

விமல் – விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விலங்கு' வெப் சீரியஸ் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் சரவணசக்தி இயக்கிவரும் புதிய படத்தில் விமலுடன் விஜய் சேதுபதி இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்காக வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றுள்ளது.

ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி…கடைசில இப்படி ஆகிட்டே..!

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கின்றார். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி படம் நடிப்பாரா மாட்டாரா என்ற கவலை ரசிகர்களின் மத்தியில் இருந்து வந்தது. அதனை போக்கும் வகையில் ரஜினி சமீபத்தில் தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டார். கலக்கலான ப்ரோமோவில் ரஜினி செம ஸ்டைலிஷாக இருந்தார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தைப்பற்றிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியானது. ரஜினியின் பெயரை … Read more

”இதனால்தான் இயக்குனர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறேன்” : கே.பாக்யராஜ் போட்டி

வரும் 27ம் தேதி நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு பாக்யராஜ். செயலாளர் பதவிக்கு பார்த்திபன். பொருளாளர் பதவிக்கு வெங்கட் பிரபு என மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இயக்குனர் சங்க தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை விருகம்பாக்கத்தில் இயக்குனர் பாக்யராஜ் வெளியிட்டார்.  பின்னர் மேடையில் பேசிய அவர், “தற்போது உள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை சந்திப்பதே மிக சவாலான ஒன்றாக இருக்கிறது. தொலைபேசியில் கூட அணுக முடியவில்லை. … Read more

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் ரஜினி?

ரஜினிகாந்தின் 169வது படத்தை நெல்சன் இயக்கப்போவதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது . இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மதத்திற்கு பிறகு துவங்க இருக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 170வது படத்தை வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் மற்றும் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்க உள்ளதாகவும் , இப்படத்தை கனா, நெஞ்சுக்கு நீதி படங்களின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்கப்போவதாக கூறப்படுகிறது.

ரஜினியின் பெயரை சொல்லி இதெல்லாம் செய்தாரா கஸ்தூரி ராஜா ? திடுக்கிடும் தகவல்கள்..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2004 ஆம் ஆண்டு திருமணம் ஆனா இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். எதோ சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் பிரிவிற்கு காரணமாக பல பேர் பல காரணங்கள் கூறி வருகின்றனர். அதில் எது உண்மை எது பொய் என்றே … Read more

“பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்”- கனத்த இதயத்துடன் காரணத்தை அறிவித்த கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக சமூக வலைதளம் மூலமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த நிகழ்ச்சி முதன்முறையாக தமிழில் ஓடிடியில் டிஜிட்டல் அவதாரம் எடுத்தபோது, அந்த மாற்றத்தை வரவேற்று முன்னெடுக்கும் பெருமை எனக்கு கிடைத்தது. புதிய புதிய தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும், மக்களை மகிழ்விக்கக் கிடைக்கும் எந்தச் சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது எனும் என் உத்வேகத்திற்குப் பிக்பாஸ் அல்டிமேட் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. அவ்வகையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் புரட்சிகரமான … Read more

இளையராஜா எழுதிய பாடலை பாடிய யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் 1,417வது படமாக உருவாகி வரும் “நினைவெல்லாம் நீயடா” படத்தை ஆதிராஜன் எழுதி இயக்கி வருகிறார். பிரஜன், மனிஷா யாதவ், சினாமிகா, யுவலட்சுமி, மனோபாலா, ரோகித், ஆர்.வி உதயகுமார், பி.எல.தேனப்பன், மதுமிதா உட்பட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பள்ளிப் பருவக் காதலை மையக்கருவாக வைத்து உருவாகி வரும் இந்த படத்திற்காக இளையராஜா 5 பாடல்களை உருவாக்கியுள்ளார். பழநிபாரதி ஒரு பாடலும், சினேகன் 3 பாடலையும் எழுத, இளையராஜாவும் ஒரு … Read more

'நோ' சொன்ன ரஜினி: கடும் அதிருப்தியில் தனுஷ்

தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த் . இந்நிலையில் தலைவர் 170 படத்தை பால்கி இயக்குவார் என்று கூறப்பட்டது. தனுஷை வைத்து இந்தியில் ஷமிதாப் படத்தை இயக்கியவர் பால்கி. தனுஷ் மூலம் தான் ரஜினியிடம் கதை சொன்னாராம். ஆனால் பால்கியின் இயக்கத்தில் நடிக்க ரஜினிக்கு விருப்பம் இல்லையாம். இதையடுத்து பால்கிக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம் ரஜினி. தான் பரிந்துரை செய்த இயக்குநரை ரஜினி நிராகரித்தது தனுஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். தலைவர் 170 படத்தை … Read more

விரைவில் இரண்டாவது பாகம்: இளையராஜாவின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகம்!

`HOW TO NAME IT’ இசைத் தொகுப்பின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார். கடந்த 1986ஆம் ஆண்டு வெளியான HOW TO NAME IT இசைத் தொகுப்பு, இந்திய – மேற்கத்திய முதல் FUSION ஆல்பமாகும். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவருமான தியாகராஜ சுவாமிகள் மற்றும் ஜெர்மன் இசை மேதை ஜே.எஸ்.பாக்கிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட HOW TO NAME IT ஆல்பம் 48 நிமிடங்கள் ஓடக்கூடியதாகும். HOW TO … Read more