என்னது காந்தி குறுக்க வந்துட்டாரா..அப்போ யாரதான்டா சுடபோனிங்க ? சர்ச்சையில் சிக்கிய கார்த்திக் சுப்புராஜ்..!

தமிழ் சினிமாவில் பிட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கார்த்திக் சுப்புராஜ். அதைத்தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி என படங்களை இயக்கி கவனிக்கப்படும் இயக்குனராக மாறினார். பின்பு பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அதில் வெற்றியும் கண்டு தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் OTT யில் வெளியான மகான் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ், சிம்ரன், … Read more

''ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுவிட்டேன்'' – விஷ்ணுவிஷால் வேதனை

FIR திரைப்படத்தில் நடித்த மூன்று நடிகைகளையும் ஒரே மேடையில் சேர்க்க முடியவில்லை என விஷ்ணு விஷால் வேதனை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விஷயத்தில் தான் தயாரிப்பாளராக தோல்வி அடைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்த எஃப்.ஐ.ஆர் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றியடைந்தது. இந்த நிலையில் செய்தியாளர்களை விஷ்ணு விஷால், இயக்குநர் ஆனந்த், நடிகை ரைசா வில்சன் உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அதில் பேசிய நடிகர் விஷ்ணு, விஷால் எஃப்.ஐ.ஆர் திரைப்படத்தை … Read more

இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் மலையாள படங்களின் ரிலீஸ்

கொரோனாவின் இரண்டு அலைகள் காரணமாக மொத்த திரையுலகிலும் பட தயாரிப்பில், படப்பிடிப்பு நடத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துவிட்டன.. அதிலும் குறிப்பாக மலையாள திரையுலகில் இடியாப்ப சிக்கல்கள் போல, முன்னால் ஆரம்பித்த படப்பிடிப்புகள் தேங்குவதும், பின்னால் ஆரம்பித்த படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆவதும் என திருவிழாவில் கப் அன்ட் சாசர் ராட்டினத்தில் ஏறி அமர்ந்தது போல போல குழம்பி தவிக்கின்றது. இதில் அதிகம் சிக்கிக்கொண்டவை மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் படங்கள் தான். பிரித்விராஜ், ஷாஜி கைலாஷ் கூட்டணியில் … Read more

வெளியானது எதற்கும் துணிந்தவன் டீசர்..!டீசர்ல இத கவனிச்சீங்களா?

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT யில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும் வினய், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படம் உலகம் முழுவதும் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக … Read more

’அகண்டா’ இயக்குநருடன் இணையும் ராம் பொத்தினேனி

நடிகர் ராம் பொத்தினேனியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி ‘தி வாரியர்’ படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். ஆதி வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், ராம் பொத்தினேனியின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை, சமீபத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா’ படத்தின் இயக்குநர் போயபதி சீனு இப்படத்தினை இயக்குகிறார். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தினை … Read more

இங்கிலாந்து அரசின் லார்ட் பட்டம் பெற்ற எடிட்டர்

தமிழ் சினிமாவின் முன்னணி எடிட்டராக இருப்பவர் பிரவீன் கே.எல். சமீபத்தில் இவர் பணியாற்றிய மாநாடு படத்தின் எடிட்டிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆரண்யகாண்டம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சிம்பு நடிக்கும் பத்துல தல படத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் ஒரு சதுரஅடி நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார், இதனால் அந்நாட்டு அரசு இவருக்கு “லார்ட்“ என்று பட்டத்தை கொடுத்துள்ளது. இதனை பிரவீன் தெரிவித்துள்ளார். அவர் வாங்கியுள்ள ஒரு சதுரஅடி நிலத்தில் இவர் … Read more

ராம்சரண் படத்திலும் வாரியிறைக்கும் ஷங்கர்… ஒரு சண்டைக்காட்சிக்கு இத்தனை கோடிகளா?

பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் மெகா பட்ஜெட் படங்களுக்கு பெயர் போனவர். ஜென்டில் மேன் படத்தில் இயக்குநராக அறிமுகமான ஷங்கர், ரஜினி கமல் என உச்ச நடிகர்களை இயக்கியுள்ளார். பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 13 வருடங்கள் பேசாமல் இருந்த இளையராஜா கங்கை அமரன்.. இதுதான் காரணம்! தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரணை இயக்கி வருகிறார். இந்தப் படம் இன்னும் பெயர் வைக்கப்படாததால் ஆர்சி 15 என குறிப்பிடப்பட்டு வருகிறது. ஆக்ஷன் படமான இப்படத்தில் ஒரு … Read more

நான்கே நாளில் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்த ‘அரபிக் குத்து’ பாடல்

’பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. காதலர் தினத்தையொட்டி வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடல் யூடியூபில் 5 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி வெளியானதிலிருந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருவதோடு, வெளியான நான்கே நாட்களில் 50 மில்லியன் வியூஸ் ( 5 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை செய்துள்ளது. பாடல் வெளியானதிலிருந்து, நடிகை சமந்தா உட்பட பல சினிமா பிரபலங்களும் வெளிநாடுகளில் … Read more

அமீரின் படத்தில் சஞ்சிதா செட்டி

9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் படம் “இறைவன் மிகப்பெரியவன்”. இந்த படத்திற்கு வெற்றிமாறன் – தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். இதில் சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகத நிலையில் இப்போது சத்யாவிற்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா செட்டி நடித்து … Read more

விஜய் தற்போது எங்கு சென்றிருக்கிறார் தெரியுமா ? ச்ச வேற லெவல் யா தளபதி..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கிறார். இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு சாதனை படைத்து வருகிறார். இவரின் கால்ஷீட் கிடைக்காத என தவம் தயாரிப்பாகிடைக்கும் ளர்கள் ஏராளம். மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து பாடல் செம வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யின் அசத்தல் நடனம் … Read more