2 கோடி வியூஸ், 2 மில்லியன் லைக்ஸ் – யூட்யூப் சமஸ்தானத்தையே அதிர வைத்த 'அரபிக் குத்து'

’பீஸ்ட்’ படத்தின் ’அரபிக் குத்து’ பாடல் யூட்யூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. ’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடலின் இசை இளைஞர்களின் ஹார்ட் … Read more

'கலாவதி' சாதனையை ஒரே நாளில் காலாவதி ஆக்கிய 'அரபிக்குத்து'

தென்னிந்திய அளவில் புதிய சாதனை என மகேஷ் பாபுவின் 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலின் சாதனையை ஒரு நாள் கூட கொண்டாடவிடவில்லை 'அரபிக்குத்து'. கடந்த சில நாட்களாகவே விஜய் ரசிகர்களுக்கும், மகேஷ்பாபு ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் சண்டை நடந்து வந்தது. விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிளான 'அரபிக்குத்து' பாடலும், மகேஷ்பாபுவின் தெலுங்குப் படமான 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் முதல் சிங்கிளான 'கலாவதி' பாடலும் நேற்று பிப்ரவரி 14 அன்று … Read more

காதலர் தினம் அதுவுமா Don’t fall in love சொன்ன சினேகா …! பிரசன்னாவுடம் ஏற்ப்பட்ட மனக்கசப்பு…?

காதலர் தினத்தன்று நடிகை சினேகா பதிவிட்ட போஸ்ட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. எதற்காக இவர் இப்படி ஒரு அட்வைஸ் கொடுக்கிறார்…இவருக்கு என்னவாயிற்று என அனைவரும் கேட்க துவங்கி விட்டனர்.தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என பெயர் வாங்கியவர் சினேகா. இவருக்கு, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்த போது நடிகர் பிரசன்னா மீது காதல் ஏற்பட்டது. கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடி, பிறகு கல்யாணம் செய்து கொண்டது.கோலிவுட்டின் அழகான நட்சத்திர … Read more

"அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்புகிறேன்": தீபிகா படுகோனே

நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே. தீபிகா படுகோனே நடிப்பில் கடந்த 11 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘கெஹ்ரையான்’ வெளியாகி கவலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மேலும், ஹிரித்திக் ரோஷனுடன் ‘பைட்டர்’, ஷாருக்கானுடன் ‘பதான்’ உள்ளிட்டப் படங்களிலும் நடித்து வருகிறார். ‘கெஹ்ரையான்’ வெளியீட்டையொட்டி சமீபத்திய பேட்டி ஒன்றில், ’எந்த நடிகருடன் நடிக்க விருப்பம்?’ என்று தீபிகா படுகோனேவிடம் கேட்கப்பட்டக் கேள்விக்கு” நடிகர் அல்லு அர்ஜுனுடன் நடிக்க விரும்புகிறேன். … Read more

17 லட்சத்திற்கு பைக் வாங்கிய வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். சொந்த வாழ்க்கையிலும், இயல்பிலும் மற்ற இயக்குனர்களிடமிருந்து மாறுபட்டவர். ஆங்கில இலக்கியம் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர். இப்போதும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர். இவரது இன்னொரு முகம் அவர் பைக்குகளின் காதலர். வெற்றிமாறனுக்கு எப்போதும் பைக் பயணம் மிகவும் பிடிக்கும். வேலூர் அருகில் உள்ள அவரது சொந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்து செல்வார். தற்போது 17 லட்சம் ரூபாய் மதிப்புகள் பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது அவரது … Read more

ரஜினிக்கு இருக்கும் ஒரே ஆசை இதுதானாம்.. நடந்தா செமயா இருக்குமே.!

நடிகர் ரஜினிகாந்திற்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை கட்டி காத்துவரும் ரஜினியின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் ரஜினி . சில நேரங்களில் ரஜினி தோல்வி படங்களை கொடுக்கும்போதும் என்றுமே அவரது ரசிகர்கள் அவரை கைவிட்டதே இல்லை. அதன் காரணமாகத்தான் ரஜினியின் படங்கள் விமர்சனங்களில் முன்ன பின்ன இருந்தாலும் வசூலில் சாதனை படைத்து … Read more

விக்ரமின் ’கோப்ரா’: மூன்று வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது – நெகிழ்ச்சியில் இயக்குநர்

விக்ரமின் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

இயக்குனரின் உரிமை : சுருளி பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது. காட்டிற்குள் ஒளிந்திருக்கும் கொள்ளையர்களை தேடி போலீசார் செல்வது போல இந்தப்படத்தின் கதை அமைந்திருந்தது. அதேசமயம் இந்த படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் படத்தை … Read more

குருநாதா இதென்ன புது ட்விஸ்ட்: கெளதம் மேனனின் லவ் ஸ்டோரியில் வடிவேலு..?

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. ‘ நாய் சேகர் ரிட்டன்ஸ் ‘ என தலைப்பிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இந்நிலையில் அண்மையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த புகைப்படங்களில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் … Read more

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘ஹிருதயம்’

மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லாலின் ’ஹிருதயம்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் – கல்யாணி பிரியதர்ஷன் , தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹிருதயம்’ கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சென்னையையே ‘ஹிருதயம்’ படத்தின் இதயமாக்கி ’ஹிட்’ அடித்துள்ளார் இயக்குநர் வினீத் சீனிவாசன். தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுவதே, இதற்குச் சாட்சி. ஏற்கெனவே, இப்படத்தின் ‘தர்ஷனா’ பாடல் வரவேற்பைப் பெற்ற … Read more