ஜெயம் ரவியின் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

திரைப்பட விநியோகத்தில் வெற்றிக்கொடி நாட்டிய ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட், இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன் ஆகிய ஹிட் படங்களை தயாரித்ததன் மூலம் திரைப்படத் தயாரிப்பிலும் தடம் பதித்தது. படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு… கேரளாவில் சிகிச்சை… தீயாய் பரவும் வீடியோ! இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இடியட், சாணி காயிதம் படங்கள் வெளியீட்டுக்கு தயராகி வருகின்றன. இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் ஸ்கிரீன் சீன், அவற்றில் முதல் … Read more

FIR விமர்சனம்: கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லர்தான்… ஆனால், படம் பேசும் அரசியல் சரியா?!

இந்தியாவில் இருக்கக்கூடிய பொதுபுத்தியின் காரணமாக IITயில் கோல்டு மெடலிஸ்ட்டாக இருந்தாலும் இர்ஃபானுக்கு அவர் படிப்புக்கான வேலை இன்னும் கிடைக்க மறுக்கிறது. இன்னொரு பக்கம் ISIS தீவிரவாதிகளின் முக்கியத் தலைவரான அபு பக்கர் அப்துல்லா ஒரு தமிழர் என்பதும், அவர்களின் அடுத்த இலக்கு தமிழ்நாடு என்பது NIAவுக்குத் தெரிய வருகிறது. இர்ஃபானின் மதமும், அவர் பேசிய விதமும், காவல்துறைக்கு சந்தேகத்தைக் கிளப்ப அவரைத் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு சிறைப்பிடிக்கப்படுகிறார். அடுத்த என்ன நடக்கிறது, தமிழகம் தப்பித்ததா, உண்மையில் … Read more

‘சாத்தானே இங்க இருக்குடா ’ – ‘காமன் மேன்’ பட கிளிம்ப்ஸில் உறைய வைக்கும் விக்ராந்த்

இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் நடிப்பில் தயாராகி வரும் ‘காமன் மேன்’ படத்தில், நடிகர் விக்ராந்த் சாத்தானாக மிரட்டியுள்ள கிளிப்ம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் ‘காமன் மேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்தில் சசிகுமார், திரைப்பட சவுண்ட் இன்ஜினீயராக நடிக்கிறார். கன்னட திரையுலக நடிகை ஹரிப்பிரியா மற்றும் … Read more

தமிழில் வெளிவரும் மஹாவீர்யார்

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் எழுதிய கதையை தழுவி உருவாகும் படம் மஹாவீர்யார். நிவின் பாலி நடித்து அவரது நண்பர் சம்னாசுடன் இணைந்து தயாரிக்கிறார். அப்ரித் ஷைனி இயக்கும் இப்படத்தில் ஆஷிப் அலி, லால், லாலு அலெக்ஸ், சித்திக், ஷான்வி ஶ்ரீவஸ்தாவா, விஜய் மேனன், மேஜர் ரவி, மல்லிகா சுகுமாரன், கிருஷ்ண பிரசாத், சுராஜ் ஷி குரூப். சுதீர் கரமனா, பத்மராஜன் ரதீஷ், சுதீர் பரவூர், கலாபவன் பிரஜோத், பிரமோத் வெலியனாடு உள்பட பலர் நடித்துள்ளனர். சந்துரு … Read more

உங்க கணவர் என்ன பன்றாரு தெரியுமா…? நாகசைதன்யா ஐஸ்வர்யாவிடம் பேச்சு…!

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் 17ந் தேதி ஆந்திராவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தனிதனி அறையில் இருந்து கொண்டு நள்ளிரவில் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். ஆந்திராவில் இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு காரணம் தனுஷால் மனைவியை விட்டு பிரிந்து மன உளைச்சலுக்கு ஆளான ஆந்திராவைச் சேர்ந்த பிரபல சினிமா குடும்பத்தைச்சேர்ந்த அந்த நடிகர் ஐஸ்வர்யாவை சந்தித்த பின்பு தான் என தகவல் வெளியாகியுள்ளது. சினிமா படப்பிடிப்பு வேலையாகஆந்திராவில்தங்கி பணியாற்றி … Read more

"உதயநிதி பேர மிஸ்யூஸ் பண்ணக்கூடாதுன்னு நான் க்ளியரா இருக்கேன்" – விஷ்ணு விஷால் பேட்டி

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘எஃப்.ஐ.ஆர்’ வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வெற்றி கண்ட உற்சாகத்தில் இருக்கும் விஷ்ணு விஷால், புதிய தலைமுறை டிஜிட்டலுக்காகப் பிரத்யேகமாகப் பேசினார். கேள்வி : நடிப்பதோடு தயாரிப்பாளராகவும் இந்தக் கதையை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்? பதில் : ”இயக்குநர் மனு ஆனந்த் கெளதம் மேனனிடம் பணிபுரிந்தவர். நண்பர் மூலம் அறிமுகமாகி என்னிடம் கதை சொன்னார். அவர் முதலில் சொன்னக் கதையை நான் தவிர்த்துவிட்டேன். ஆனால், அவர் கதை சொல்லும் விதம் பிடித்திருந்ததால், ’வேறு … Read more

டாட்டூ தெரிய ஹாட் போட்டோ வெளியிட்ட ஸ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் மாதவன் -விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பிறகு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலும், மாதவனுடன் மாறா படத்திலும் நடித்தார். அதோடு தெலுங்கில் அவர் நடித்த ஜெர்சி படம் ஹிட் அடித்ததால் தற்போது அங்கு பிசியான நடிகையாகிவிட்டார். மேலும் தமிழைவிட தெலுங்கில் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் சோசியல் மீடியாவில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தனது நெஞ்சில் டாட்டூ … Read more

தனுஷ் கூட நடிக்கணும்னா அதையும் விட்டுக்கொடுக்க நான் தயார்.!பகிர் கிளப்பிய முன்னணி நடிகை..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர். பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ் பன்முகத்திறன் கொண்டவராகவும் திகழ்கிறார். நடிப்பு, பாடல், தயாரிப்பு, இயக்கம் என அனைத்திலும் கலக்கிவரும் தனுஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்க … Read more

‘லத்தி’ சண்டைக் காட்சி படப்பிடிப்பில் விஷாலுக்கு எலும்பு முறிவு – வீடியோ வெளியீடு

‘லத்தி’ படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருந்த ‘வீரமே வாகை சூடும்’ படம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்‘லத்தி’படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பில் … Read more

மகான் பார்த்துவிட்டு கார்த்தி சுப்பராஜை பாராட்டிய ரஜினி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடித்துள்ள படம் மகான். இந்த படம் நான்கு காலகட்டங்களை கொண்ட கதைகளில் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் நேற்று முன்தினம் இரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்து இருக்கிறார் கார்த்தி சுப்பராஜ். அதில், எக்ஸலண்ட் மூவி, … Read more