‘பீப்’ பாடல் விவகாரத்தில் சிம்புவுக்கு எதிரான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

‘பீப்’ பாடல் விவகாரத்தில், நடிகர் சிம்புவுக்கு எதிராக, சென்னை காவல்துறையில் பதிவான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நடிகர் சிம்பு, பெண்களை பற்றி ஆபாசமாக பாடியதாகக் கூறி, இணையத்தில் ‘பீப்’ பாடல் ஒன்று வெளியானது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பாடலைப் பாடிய சிம்பு மற்றும் அந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு எதிராக, பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து சிம்பு, அனிருத்துக்கு எதிராக போலீசில் புகார் … Read more

விஜய்க்காக 100 மெயில் கணக்குகள் துவங்கிய நடிகை ரோஜாவின் மகன்

90களில் பரபரப்பான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஆந்திர மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார். இவரது மகன் கவுசிக் தீவிரமான விஜய் ரசிகர். சமீபத்தில் ரோஜா, ஆர்கே செல்வமணி, கவுசிக் ஆகியோர் கலந்துகொண்ட ஒரு ரியாலிட்டி ஷோவில் விஜய் மீதான ஈர்ப்பு எத்தகையது என கேட்டதற்கு அவர் கூறிய பதில் விஜய் ரசிகர்களையே திகைக்க வைப்பதாக இருக்கிறது. … Read more

வலிமை விமர்சனம்: பைக்கர்ஸ் கேங்க் vs நேர்மையான போலீஸ் அதிகாரி… மேக்கிங் செம, ஆனா பேக்கேஜிங்?

சென்னை மாநகரில் செயின் பறிப்புகளும், கொலைகளும், போதை மருந்து ஊடுருவலும் அதிகரிக்கின்றன. மதுரையிலிருந்து மாற்றலாகி வரும் அசிஸ்டென்ட் கமிஷனர் அர்ஜுன், தன் புத்திசாலித்தனமான விசாரணையின் மூலம் இதற்குப் பின் இருக்கும் பைக்கர்ஸ் கேங்கைக் கண்டறிகிறார். அதை இயக்கும் தலைவனையும் நெருங்குகிறார். அடுத்தடுத்த சவால்களைக் கடந்து அவர் தன் ‘வலிமை’யால் வில்லனை வென்றாரா என்பதுதான் ‘வலிமை’ படத்தின் கதை. ‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு, மீண்டும் அதே ஃபிட்டான, ஸ்மார்ட்டான இன்னமும் யங்கான ஒரு போலீஸ் அதிகாரியாக வந்து … Read more

”யார் வெற்றி பெற்றாலும் நடிகர் சங்க கட்டடத்தைக் கட்டி முடிக்க வேண்டும்” – ஐசரி கணேஷ்

”நடிகர் சங்கத் தேர்தல் செல்லும். மறுதேர்தல் தேவையில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை ’வரவேற்கிறேன் என்றும் யார் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தனது உதவிகள் தொடரும்’ என்றும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தலைமையிலான அணியும் போட்டியிட்டனர். அதுதொடர்பான, விஷால் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் ”நடிகர் சங்கத் தேர்தல் … Read more

‛‛எதிர்பார்க்கலேல… நானும் எதிர்பார்க்கல… – கமல் இடத்தை பிடித்த சிம்பு!

பிக்பாஸை தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். விக்ரம் பட வேலைகள் முடியாததால் இந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில் அவருக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருப்பதால் ரம்யா கிருஷணனால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல முடியாது என்பது பலரின் கருத்து. இதனால் நடிகர் … Read more

பைக் வேகத்தில் பாதியாவது திரைக்கதைக்கும் வேண்டாமா? – 'வலிமை' திரைப்பார்வை

நீண்ட பெரும் எதிர்பார்ப்புகளை அடுத்து இன்று திரைக்கு வந்திருக்கிறது வலிமை. அஜித், எச்.விநோத் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பிறகு பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய இந்த சினிமா உண்மையில் தமிழ் சினிமா ரசிகர்களை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம். நேர்மையான காவல்துறை அதிகாரி அர்ஜுனாக வருகிறார் அஜித். சாத்தானின் அடிமைகள் என்ற குழு போதைப் பொருள் விற்பனை, நகைபறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடு படுகின்றன. டெக்னாலஜி உதவியுடன் அவர்கள் செய்யும் குற்றங்களை கண்டுபிடிக்க முடியாமல் திணரும் … Read more

உருவம் காட்டாமல் குரலாக நடித்த கேபிஏசி லலிதா

மலையாள திரையுலகின் சீனியர் நடிகையான கேபிஏசி லலிதாவின் மறைவு மலையாள திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் லலிதாவுடனான தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபல எழுத்தாளரும், இயக்குனருமான அடூர் கோபாலகிருஷ்ணன் கேபிஏசி லலிதா குறித்து தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். அடூர் கோபாலகிருஷ்ணன் டைரக்சனில் சுயம்வரம், மதிலுகள், நாலு பெண்கள், கொடியேற்றம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் மதிலுகள் படம் மட்டும் லலிதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு … Read more

ரிலீஸ்க்கு இரண்டே நாட்கள்.. 'கங்குபாய் கத்தியவாடி' பெயரை மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை

‘கங்குபாய் கத்தியவாடி’ திரைப்படத்தின் பெயரை மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை அலியா பட் நடித்துள்ள இந்தி திரைப்படமான ‘கங்குபாய் கத்தியவாடி’, நாளை நாடு முழுவதும் வெளியாக உள்ளது. பாலியல் தொழிலாளியாக இருந்து மும்பையில் அரசியல்வாதியான கங்குபாய் கத்தியவாடியின் உண்மைச் கதையை அடிப்படையாக வைத்து, இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘கங்குபாய் கத்தியவாடி’ படத்தை தடை செய்யக் கோரி கங்குபாயின் மகன் உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இம்மனுவை விசாரித்த … Read more

என்னை அழ வைத்து ஆறுதல் சொன்னார் லலிதா ; நவ்யா நாயர் நினைவலைகள்

தமிழில் காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மலையாள சீனியர் நடிகை கேபிஏசி லலிதா. 74 வயதான இவர் உடல் நலக்குறைவால் காலமானார். நேற்று மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருடன் படங்களில் நடித்த அனுபவம் குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது நினைவலைகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் மாயக் கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை … Read more

வலிமை: 2 ஆண்டுக்குப்பிறகு ரிலீஸானது; தியேட்டரில் குவிந்த ரசிகர்கள்!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்கு முடிவு காட்டும் விதமாக இன்று வெளியாகி உள்ளது வலிமை திரைப்படம். 2019 ஆகஸ்டில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் வெளியானது. அதன் பிறகு நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய H.வினோத் இயக்கத்திலேயே, அஜித் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. வலிமை என பெயரிடப்பட்ட படத்திற்கு அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு செய்த அட்ராசிட்டிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. கோவிட் தொற்று பிரச்னையால் படப்பிடிப்பு தள்ளி போன … Read more