கதாநாயகனா கதையின் நாயகனா… கார்த்தியின் நாயக பிம்பம் எத்தகையது? | 15 years of Karthi
நூறாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாகவும், திரைப்பட உருவாக்க ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திரையரங்கத்தின் திரைகள் ஆயிரக்கணக்கான படங்களை, நூற்றுக்கணக்கான நடிகர்களைக் கடந்து ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. சில படைப்புகளும், சில நடிகர்களும் திரையோடில்லாமல், மக்களின் வாழ்வோடும் கலந்திடும் விந்தை அவ்வப்போது நிகழ்கிறது. வழமையான கதைகள், ஒன்றாத காட்சியமைப்புகள் என படைப்புலகமும் மக்களும் சோர்வாகும்போது கலை மீதான நம்பிக்கையைத் தளரவிடாதிருக்க ஒரு படைப்பு வெளியாகும். அந்தப் படைப்பு ஒட்டுமொத்த படைப்பாளிகளுக்கும் நம்பிக்கைத் தரக்கூடியதாக அமைந்துநிற்கும். 2007 அப்படியானதொரு … Read more