17 லட்சத்திற்கு பைக் வாங்கிய வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். சொந்த வாழ்க்கையிலும், இயல்பிலும் மற்ற இயக்குனர்களிடமிருந்து மாறுபட்டவர். ஆங்கில இலக்கியம் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர். இப்போதும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர். இவரது இன்னொரு முகம் அவர் பைக்குகளின் காதலர். வெற்றிமாறனுக்கு எப்போதும் பைக் பயணம் மிகவும் பிடிக்கும். வேலூர் அருகில் உள்ள அவரது சொந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்து செல்வார். தற்போது 17 லட்சம் ரூபாய் மதிப்புகள் பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது அவரது … Read more

ரஜினிக்கு இருக்கும் ஒரே ஆசை இதுதானாம்.. நடந்தா செமயா இருக்குமே.!

நடிகர் ரஜினிகாந்திற்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை கட்டி காத்துவரும் ரஜினியின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார் ரஜினி . சில நேரங்களில் ரஜினி தோல்வி படங்களை கொடுக்கும்போதும் என்றுமே அவரது ரசிகர்கள் அவரை கைவிட்டதே இல்லை. அதன் காரணமாகத்தான் ரஜினியின் படங்கள் விமர்சனங்களில் முன்ன பின்ன இருந்தாலும் வசூலில் சாதனை படைத்து … Read more

விக்ரமின் ’கோப்ரா’: மூன்று வருட படப்பிடிப்பு நிறைவடைந்தது – நெகிழ்ச்சியில் இயக்குநர்

விக்ரமின் ‘கோப்ரா’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அருள்நிதியின் ’டிமாண்டி காலனி’, நயன்தாராவின் ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்துள்ளார் விக்ரம். நாயகியாக ’கேஜிஎஃப்’ ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். ’மாஸ்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துள்ள ’கோப்ரா’ படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு … Read more

இயக்குனரின் உரிமை : சுருளி பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது. காட்டிற்குள் ஒளிந்திருக்கும் கொள்ளையர்களை தேடி போலீசார் செல்வது போல இந்தப்படத்தின் கதை அமைந்திருந்தது. அதேசமயம் இந்த படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் படத்தை … Read more

குருநாதா இதென்ன புது ட்விஸ்ட்: கெளதம் மேனனின் லவ் ஸ்டோரியில் வடிவேலு..?

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. ‘ நாய் சேகர் ரிட்டன்ஸ் ‘ என தலைப்பிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கிறார் வடிவேலு. இந்நிலையில் அண்மையில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. இந்த புகைப்படங்களில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, டாக்டர் பட பிரபலம் … Read more

டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகும் ‘ஹிருதயம்’

மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லாலின் ’ஹிருதயம்’ டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. வினீத் சீனிவாசன் இயக்கத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் – கல்யாணி பிரியதர்ஷன் , தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஹிருதயம்’ கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சென்னையையே ‘ஹிருதயம்’ படத்தின் இதயமாக்கி ’ஹிட்’ அடித்துள்ளார் இயக்குநர் வினீத் சீனிவாசன். தமிழ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடுவதே, இதற்குச் சாட்சி. ஏற்கெனவே, இப்படத்தின் ‘தர்ஷனா’ பாடல் வரவேற்பைப் பெற்ற … Read more

ஷிவானியின் கலக்கல் கிளாமர் போட்டோ

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிக்பாஸ் சீசன்- 4 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பொன்ராம் இயக்கும் படங்களிலும் நாயகியாக நடிக்கிறார். மேலும் சோசியல் மீடியாவில் அதிரடி கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் ஷிவானி, தற்போது கருப்பு நிற புடவை அணிந்து தான் எடுத்துள்ள கலக்கலாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இவை வைரலாகின.

கொஞ்ச நாள் எனக்கு போன் பண்ணாத : பிரபல நடிகையிடம் தனுஷ்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவரும் அறிந்ததே. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பதினெட்டு ஆண்டு சேர்ந்து வாழ்ந்துவிட்டு தற்போது பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தியால் பலரும் அதிர்ந்தனர். மேலும் இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் சிலரோ இஷ்டத்திற்கு ஒரு காரணத்தை சமூகத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் இவர்களை மீண்டும் சேர்த்து வைக்கும் முயற்சியில் ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா ஈடுபட்டு வருகின்றனர். இருபது நிமிடத்தில் அஜித்தின் சாதனையை முறியடித்த விஜய்..! இது … Read more

முதன் முறையாக அப்பாவுடன் இணைந்து நடிக்கும் லட்சுமி மஞ்சு

தெலுங்கில் முன்னணி நடிகர் மோகன்பாபு. இவரது மகன் விஷ்னு மஞ்சு, மகள் லட்சுமி மஞ்சு ஆகியோர் நடித்து வருகிறார்கள். இதில் லட்சுமி மஞ்சு தமிழில் கடல், காற்றின் மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடித்து வருகிறார். தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்த நிலையில் முதன் முறையாக தனது தந்தை மோகன்பாபுவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. இதுகுறித்து லட்சுமி மஞ்சு … Read more

வெளியானது அரபிக் குத்து..ஆனால் ரசிகர்களுக்கு ஒரு வருத்தம்..!

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான படம் பீஸ்ட் . அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து படக்குழுவை அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை விடுத்து வந்தனர். அவர்களை மகிழ்விக்கும் வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அரபிக் குத்து என துவங்கும் அப்பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இப்பாடல் வெளியாகும் என்று … Read more