"நாயகனுக்கோ, நாயகிக்கோ அப்பா ரோலில் நடித்துவிடலாம் என்பதே என் திட்டமாக இருந்தது!"- விஜய் சேதுபதி
ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான விஜய் சேதுபதியை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். உங்கள் சினிமா வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளீர்கள். என்றேனும் ஒருநாள் கதாநாயகன் ஆவேன் என்று நினைத்திருக்கிறீர்களா? … Read more