நடிகர் ஆர்யாவின் ‛கேப்டன்' படப்பிடிப்பு நிறைவு

'டெடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஆர்யாவும், இயக்குநர், தயாரிப்பாளர் சக்தி சவுந்தர் ராஜனும், 'கேப்டன்' என்னும் அதிரடி சயின்ஸ்பிக்சன் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தை திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீபிள் உடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கி, தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் முக்கிய காட்சிகளை வடஇந்தியாவின் அடர்ந்த காடுகளில் படமாக்கிய படக்குழு, அதை தொடர்ந்து குளு மணாலியில் இறுதி கட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர். … Read more

Ajith:இது அஜித்துக்கு முதல்முறை: வலிமை தயாரிப்பாளர் போனி கபூர்

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படம் பிப்ரவரி 24ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் வலிமை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்திருக்கிறார். படம் குறித்து போனி கபூர் கூறியதாவது, ஓடிடி மூலம் நிறைய பேரை படம் சென்றடையும். ஆனால் வலிமை போன்ற படம் பெரிய திரைக்காக எடுக்கப்பட்டது. நான் பெரிய திரைக்காக படம் தயாரிக்க விரும்புபவன். என் மனைவி ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு படங்கள் மூலம் தன் … Read more

எந்த அரசியலை பேச போகிறது 'பப்ளிக்' திரைப்படம்

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் 'பப்ளிக்'. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்து வருவதுடன் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முதலாவது ஸ்னீக்பீக்கில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை நையாண்டி தனமாக சொல்லும் காட்சிகளும், 2வது ஸ்னீக்பீக்கில் அரசியல் தலைவர்களின் வேடமிட்டவர்கள், அரசியல் சொல்லி தருவது போலவும் காட்சி இடம்பெற்றிருந்தது. அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள 3வது ஸ்னீக்பீக்கில் இன்றைய அரசியல் … Read more

தனுஷை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு: வைரல் போட்டோ

சுமார் 10 ஆண்டுகள் கழித்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . நானே வருவேன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் செட்டில் தன் தம்பியுடன் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு நானே வருவேன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார் செல்வராகவன். அந்த புகைப்படத்தில் தனுஷ் முகத்தில் ஒருவித கவலை இருந்தாலும் சந்தோஷமும் இருக்கிறது. எனக்கு தெரிந்தது எல்லாம் சினிமா மட்டுமே. சினிமாவை தாண்டி … Read more

நடிப்பதால் குழந்தைகளை பழக விடமாட்டார்கள் – நித்யா ரவீந்திரன்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் நடிகை நித்யா ரவீந்திரன். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் சினிமாவில் நடித்த காரணத்தால் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில மோசமான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'எல்லா குழந்தைகளும் பள்ளி முடிந்து விளையாட செல்வார்கள். நான் நாடகம் நடிக்க சென்று விடுவேன். நான் நடிக்கிறேன் என்ற காரணத்தால் நான் பொய் பேசுவேன் என சொல்லி என்னிடம் வீட்டு குழந்தைகளை பழக … Read more

Dhansuh:தனுஷ், ஐஸ்வர்யா பற்றி அப்பா கஸ்தூரி ராஜா சொன்னது நிஜமா?

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். பிள்ளைகள் வளர்ந்துவிட்ட நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் பிரிந்துவிட்டார்கள். ஜனவரி 17ம் தேதி பிரிவு குறித்து இருவரும் சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினி பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம். என்னை தேடி வந்த ‘முசாபிர்’, இந்த கனெக்ஷன் தப்பாகாது: ஐஸ்வர்யா முன்னதாக அறிவிப்பு வெளியான கையோடு தனுஷின் … Read more

லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட் விடுவிக்கப்பட்ட விவகாரம் – சுசி கணேசன் வழக்கு தள்ளுபடி

கவிஞர் லீனா மணிமேகலையின் பாஸ்போர்ட்டை விடுவிக்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, இயக்குநர் சுசி கணேசனுக்கு அனுமதி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. தன் மீது பாலியல் புகார் கூறிய லீனா மணிமேகலைக்கு எதிராக இயக்குநர் சுசிகணேசன் தொடர்ந்த வழக்கில், அவரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. ஆராய்ச்சி பணிக்காக பாஸ்போர்ட் வழங்கக்கோரி லீனா மணிமேகலை தொடர்ந்த மற்றொரு வழக்கில், பாஸ்போர்ட்டை விடுவிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய … Read more

அன்பே ஆருயிரே, சில்லுனு ஒரு காதல், வேதாளம் – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – தலைவாமதியம் 03:00 – சகலகலா வல்லவன் (2015)மாலை 06:30 … Read more

என்னை தேடி வந்த 'முசாபிர்', இந்த கனெக்ஷன் தப்பாகாது: ஐஸ்வர்யா

காதல் கணவரான தனுஷை பிரிந்த கையோடு காதல் பாடலை இயக்க ஹைதராபாத்தில் தங்கினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அந்த காதல் பாடல் வீடியோவுக்கு முசாபிர் என்று பெயர் வைத்துள்ளனர். காதலர் தின ஸ்பெஷலாக முசாபிர் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் முசாபிர் குறித்து ஐஸ்வர்யா கூறியதாவது, முசாபிர் தான் என்னை தேடி வந்தது என்பேன். இந்த கனெக்ஷன் கண்டிப்பாக தவறாக போகாது என்று உடனே உணர்ந்தேன். தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு: வெளியான ‘திடுக்’ தகவல் முசாபிரின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ப்ரேர்னா … Read more

'கைதி' ரீமேக், 'கைதி 2' விற்கு தடையில்லை: நீதிமன்றம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜூன் தாஸ் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் கைதி. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. இதன் கதை என்னுடையது என கேரளாவில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கைதி படத்தை பிறமொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் தடை கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை ரத்து செய்து மனுவை … Read more