தனுஷ் கூட நடிக்கணும்னா அதையும் விட்டுக்கொடுக்க நான் தயார்.!பகிர் கிளப்பிய முன்னணி நடிகை..!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர். பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் தனுஷ் பன்முகத்திறன் கொண்டவராகவும் திகழ்கிறார். நடிப்பு, பாடல், தயாரிப்பு, இயக்கம் என அனைத்திலும் கலக்கிவரும் தனுஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. இதையடுத்து தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடிக்க … Read more

‘லத்தி’ சண்டைக் காட்சி படப்பிடிப்பில் விஷாலுக்கு எலும்பு முறிவு – வீடியோ வெளியீடு

‘லத்தி’ படப்பிடிப்பின்போது நடிகர் விஷாலுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியாக இருந்த ‘வீரமே வாகை சூடும்’ படம், கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு நடிகர் விஷால், அறிமுக இயக்குநர் ஏ.வினோத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும்‘லத்தி’படத்தின் 3-வது கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றார். ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த படப்பில் … Read more

மகான் பார்த்துவிட்டு கார்த்தி சுப்பராஜை பாராட்டிய ரஜினி

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா நடித்துள்ள படம் மகான். இந்த படம் நான்கு காலகட்டங்களை கொண்ட கதைகளில் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் நேற்று முன்தினம் இரவு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த படத்தை பார்த்துவிட்டு தன்னை போனில் அழைத்து பாராட்டியதாக தெரிவித்து இருக்கிறார் கார்த்தி சுப்பராஜ். அதில், எக்ஸலண்ட் மூவி, … Read more

தனுஷ், ஐஸ்வர்யா எடுத்துள்ள புதிய முடிவு: குடும்பத்தினர் நிம்மதி..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ் , ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. … Read more

‘டைனோசர்களும், மனிதர்களும் ஒன்னா வாழமுடியாது’- ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெய்லர்

டைனோசர்களை மையமாக வைத்து வெளிவரும் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ பட வரிசையில், அடுத்ததாக ‘ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்’ ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1990-கள் முதல் வெளிவரும் ‘ஜூராசிக்’ பட சீரிஸ்க்காகவே தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உண்டு. முதன்முதலாக ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்,  இயக்கி, கடந்த 1993-ம் ஆண்டு வெளியான ‘ஜுராசிக் பார்க்’ திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த படமாக இன்றளவும் இருந்து வருகிறது.  … Read more

கண்மணியா… கதிஜாவா…. ‛காத்துவாக்குல ரெண்டு காதல்' டீசர் வெளியீடு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‛காத்துவாக்குல ரெண்டு காதல்'. இதனை நயன்தாராவுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை. முக்கோண காதல் கதையில் தயாராகி உள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கண்மணி எனும் நயன்தாரா, கதிஜா எனும் சமந்தா ஆகிய இரண்டு பேரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுக்கு இடையேயான பயணத்தை உணர்வுகளுடன் காமெடி, … Read more

இதெல்லாம் தலைவரால் மட்டும்தான் பண்ண முடியும்: மாஸ் காட்டும் ரஜினி ரசிகர்கள்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ஆனாலும் ரஜினி ரசிகர்களுக்கு இந்தப்படம் பலத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை … Read more

காற்றுக்கென்ன வேலி மாறன் கொடுத்த கடைசி பரிசு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கு கென்ன வேலி தொடரில், ப்ரியங்கா குமார், சுவாமிநாதன் அனந்தராமன், ஜோதி ராய், அக்ஷிதா அசோக் ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த ஒருவருட காலத்தில் அதிகமான நடிகர்கள் ஒரு தொடரை விட்டு வெளியேறியுள்ளனர் என்றால் அது காற்றுக்கென்ன வேலி தான். ஹீரோயின் ப்ரியங்கா குமாரும், வில்லி அக்ஷிதா அசோக் மட்டும் தான் இதுவரை மாறவில்லை. பல முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் வெளியேறி வருவதுடன், சில காதாபாத்திரங்கள் முடித்தும் வைக்கப்படுகின்றன. அந்த வகையில் … Read more

நல்ல வேளை, விருப்பமில்லாத தனுஷை கட்டாயப்படுத்தினார் அப்பா

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். 2 மகன்களை பற்றி நினைத்துப் பார்க்காமல் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டாயே என மகள் மீது கோபத்தில் இருக்கிறாராம் ரஜினி. அப்பாவின் கோபத்தால் தனுஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துவிட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் என்ன ஆனாலும் சரி இனி ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என்கிறாராம் தனுஷ் . காதல் கொண்டேன் படத்தை பார்க்க வந்த இடத்தில் தான் தனுஷுக்கும், … Read more

ஜிம்மில் தவறி விழுந்தார் : ஜான்வியின் கை எலும்பு முறிந்தது

மறைந்த நடிகை ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரின் மூத்த மகள் ஜான்வி. தாடக் படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள், ரோஹி படங்களில் நடித்தார். தற்போது தோஸ்த்தானா 2, குட்லக் ஜெர்ரி, மிலி, மிஸ்டர் அண்ட் மிசஸ் மாஹி படங்களில் நடித்து வருகிறார். ஜான்வி தினமும் காலையில் வீட்டில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அவர் உடற்பயிற்சி செய்தபோது தவறி … Read more