டைட்டானிக் போஸ்டரை உல்டா பண்ணிய விக்னேஷ் சிவன்

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இதனை நயன்தாராவுடன் இணைந்து அவரே தயாரிக்கிறார். நயன்தாரா, விஜய்சேதுபதி, சமந்தா, பிரபு, கலா மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் மார்ச் மாதம் வெளிவருகிறது. இது ஒரு முக்கோண காதல் கதை. அதனை தன் பாணியில் காமெடி ரொமான்ஸ் கலந்து இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். … Read more

அஜித்தை பற்றி அப்படி பேசுனது என்னோட தப்புதான்: குமுறும் இயக்குனர் சுசீந்திரன்..!

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் ‘ வலிமை ‘ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது ‘வலிமை’ படம். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ‘வலிமை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் ‘வலிமை’ … Read more

இசை அமைப்பாளர் ஆனது எப்படி? ஜெய் விளக்கம்

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் வீரபாண்டியபுரம். ஜெய்யுடன் மீனாட்சி கோவிந்தராஜன், சந்த்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு நடிகர் ஜெய் இசை அமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் தான் இசை அமைப்பாளர் ஆனது எப்படி என்பது குறித்து பேசினார். அவர் கூறியதாவது: எனக்கு இசை எங்கிருந்து வந்தது என கேட்டு விடாதீர்கள். 2012 லிருந்தே மியூசிக் கற்றுக்கோண்டேன். ஒரு இசை ஆல்பத்துக்காக … Read more

நயன்தாரா இல்லனா சமந்தா..ரிலீஸ் தேதியுடன் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்..!

நானும் ரவுடி தான் என்ற வெற்றி படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படபிடிப்பெல்லாம் நிறைவு பெற்று இறுதி கட்ட பணிகக்ள் நடந்து வந்த நிலையில் … Read more

“மனதளவில் ரன்பீருடன் திருமணம் ஆகிவிட்டது” – ஆலியா பட்

தனக்கும், ரன்பீர் கபூருக்கும் ஏற்கெனவே மனதளவில் திருமணம் நடந்துவிட்டதாக பாலிவுட் நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷிகபூரின் மகனான ரன்பீர் கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப் உள்ளிட்ட நடிகைகளுடன் காதலில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமான ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் காதலித்து … Read more

உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த நந்திதா

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமானவர் நந்திதா. அதன்பிறகு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, நளனும் நந்தினியும், புலி, இடம் பொருள் ஏவல், அஞ்சல, உள்குத்து, தேவி2, கபடதாரி, நெஞ்சம் மறப்பதில்லை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நந்திதா சமீபகாலமாக சற்று உடல் எடை கூடி காணப்படுகிறார். இது தொடர்பான படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இந்த படங்களை பார்த்த நெட்டிசன்கள் இப்போதுதான் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று ஒரு பக்கம் புகழ்ந்தாலும் ஒரு சிலர் கேலியும் செய்து, இனி அக்கா, … Read more

Rajinikanth: 'தலைவர் 169' கண்டிப்பா ஹிட்டுங்க… ஏன்னா..?

‘ தலைவர் 169 ‘ அறிவிப்பு வெளியானதில் இருந்தே கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக உள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினி யாருடன் இணைய போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இளம் இயக்குனர் நெல்சனை டிக் அடித்துள்ளார் ரஜினிகாந்த் . இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். கடந்த தீபாவளிக்கு வெளியான ‘அண்ணாத்த’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது. ‘அண்ணாத்த’ படத்திற்கு … Read more

”‘ஜெய் பீம்’ ஆஸ்கர் வரை சென்றது போனஸ்தான்” – இயக்குநர் தா.செ ஞானவேல் சிறப்புப் பேட்டி

‘ஜெய்பீம்’  வெளியாகி 100 நாட்களைக் கடந்தாலும் இன்னமும் அப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ரசிகர்கள் மத்தியில் அடங்காமல் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்லாது, வெகுஜன மக்களிடமும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி ஆஸ்கர் தகுதிப் பட்டியலிலும் இடம்பிடித்து உலக சினிமா ரசிகர்களை உற்றுநோக்க வைத்தது. ஜெய் பீமை  உலகமெங்கும் ஒலிக்கச்செய்த இயக்குநர் தா.செ. ஞானவேலிடம் பேசினோம், ’ஜெய் பீம்’ வெளியாகி 100 நாட்கள் கடந்தப் பின்னும் இன்னும் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறதே… இந்த 100 நாட்களை எப்படிக் கடந்தீர்கள்? “’ஜெய் பீம்’ … Read more

ஜீ தமிழில் காதலர் தினம் கொண்டாட்டம்

இன்னும் சில நாட்களில் காதலர் தினம் வரவுள்ள நிலையில் எங்கும் காதல் பற்றிய பேச்சே உள்ளது. நேயர்களின் மனதை புரிந்து கொண்ட ஜீ தமிழ் தொலைக்காட்சி இரண்டு இன்ப அதிர்ச்சிகளை தர உள்ளது. முதலாவதாக வரும் பிப்ரவரி 13ல் 1:30 மணிக்கு, 'காதல் சங்கமம்' – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ளது. இந்த 2 மணிநேர சிறப்பு நிகழச்சியில் செம்பருத்தி, சத்யா மற்றும் நினைத்தாலே இனிக்கும் ஆகிய தொடர்களை சேர்ந்த ஜோடிகளின் காதல் கதைகள் காட்டப்படவுள்ளன. … Read more

அந்த ஒரு நிமிஷம் நான் பட்ட வேதனை இருக்கே : ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் உலகம் அறிந்த ஒரு நடிகர். தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இவ்வளவு ஏன் ஜப்பானில் கூட இவருக்கு ரசிகர் மன்றம் உண்டு. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ரஜினிக்கு தற்போது சற்று சோதனைக்காலம் என்றுதான் சொல்லவேண்டும். சமீபத்தில் நடித்த படங்கள் சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றிபெறாத நிலையில் தன் அடுத்த படத்தில் விட்டதை பிடிக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி. இந்நிலையில் நேற்று தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அதிகாரபூர்வமாக … Read more