தெலுங்கில் ஹீரோவாகும் அகிலன்

விஜய் டிவியின் டாப் சீரியலான பாரதி கண்ணம்மாவில் ஹீரோ பாரதியின் தம்பி அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் அகிலன். அகிலன், சீரியலில் நடித்துக் கொண்டே தனது சினிமா கனவையும் துரத்த ஆரம்பித்தார். அவரது முயற்சிக்கு வெற்றிக் கிடைக்கும் வகையில், விஷால், பிரபுதேவா என முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க வரிசையாக கமிட்டானார். இதனால் அவர் தொடரை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் தெலுங்கு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த தகவலை வெளியிட்டுள்ள அவர், தயாரிப்பாளர் … Read more

கடைசி நேரத்துல இப்படியா ஆகணும்: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விஷ்ணு விஷால்..!

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள படம் ‘ எப்.ஐ.ஆர் ‘. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்த மனு ஆனந்த் என்பவர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் மற்றும் டீசர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் நடிகை மஞ்சிமா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இயக்குனர் வாசுதேவ் மேனன், நடிகை ரைசா வில்சன் , ரேபா மோனிகா உள்ளிட்டோர் … Read more

'நான் தான் ராணி' – மகேஸ்வரி

சின்னத்திரை ரசிகர்களுக்கு மகேஸ்வரி பற்றிய அறிமுக தேவையில்லை. வீஜேவான இவர் தொடர்ந்து சின்னத்திரையில் ஹீரோயினாகவும் தற்போது சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இவரது சொந்த வாழ்க்கையை பொறுத்தமட்டில் கணவருடன் விவாகரத்து பெற்று மகன் மற்றும் அம்மாவுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த கசப்பான அனுபவங்களை ஒதுக்கி வைத்துவிட்டு கேரியரில் கவனம் செலுத்தி வரும் மகேஸ்வரி இன்று இளைஞர்களின் கனவு கன்னி பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவரது ஹாட் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் கருப்பு சோபாவில் … Read more

வாணி போஜன் நம்பிக்கையில் மண்ணள்ளி போட்ட 'மகான்' படக்குழு: ரசிகர்கள் அதிர்ச்சி..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘ மகான் ‘ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவு பெற்றது. இந்தப்படத்தில் தனது மகன் துருவ்வுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ள ‘மகான்’ படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 60 வது படமான மகானில் முதன்முறையாக மகன் துருவ்வுடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள … Read more

ரேஞ்சருக்காக உருவாகும் கிராபிக்ஸ் புலி

பர்மா, ராஜா ரங்குஸ்கி, ஜாக்சன் துரை படங்களுக்கு பிறகு தரணிதரன் இயக்கும் படம் ரேன்ஞ்சர். சிபிராஜ், ரம்யா நம்பீசன், காளி வெங்கட், மதுஷாலினி நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் காட்டிலாகா அதிகாரியாக நடித்திருக்கிறார் சிபிராஜ் . புலிவேட்டையை கதை களமாக கொண்ட படம். தற்போது கிராபிக்சில் புலியை உருவாக்கி அதை படத்தின் காட்சிகளோடு இணைக்கும் பணி நடந்து வருகிறது. படத்தில் புலி ஒரு கேரக்டராகவே வருகிறது. … Read more

தலைவர் 169 இந்த படத்தின் ரீமேக்கா ? வெளியான சூப்பர் தகவல்..!

நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக பல பிரச்சனைகளால் சோர்ந்திருந்தார். இனி அவர் படங்கள் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்தது. கடைசியாக வெளியான சில படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அதையெல்லாம் பொய்யாகும் வகையில் ரஜினி தற்போது தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார். ரஜினியின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி என இவர்களில் ஒருவர் இயக்குவார் என்று எதிர்பாத்திருந்த ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் … Read more

‘தமிழ் படமா? ஹாலிவுட் ரொமான்ஸா?’: கவனம் ஈர்க்கும் வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ கிளிம்ப்ஸ்

காதலர் தினத்தையொட்டி இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மதலீலை’ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமானது. இதனைத்தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் ‘மன்மதலீலை’ படத்தினை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகும் இப்படம் குறித்து, “மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்குப் பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட … Read more

‛சத்தியமா எனக்கு கல்யாணம் இல்லை' – நம்புங்க என்கிறார் பிரேம்ஜி

இசை அமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி. காமெடியனாக நடித்து வரும் பிரேம்ஜி சில படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு இசையும் அமைத்தும் உள்ளார். இவர் திருமணம் செய்ய மாட்டேன் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆனால் அவரும் பாடகி வினய்தாவும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வைத்து இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் தகவல் வந்தது. ஆனால் இதனை பிரேம்ஜி மறுத்துள்ளார். இதுப்பற்றி அவரிடம் கேட்டபோது அவர் … Read more

செல்வராகவனால் வெளிவரும் தனுஷின் இன்னொரு முகம்… இதென்னப்பா புது ட்விஸ்ட்…!

கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வந்தார் தனுஷ் . இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. இதனிடையில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘ நானே வருவேன் ‘ படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ்.. இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். புதுப்பேட்டை படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் இணைய … Read more

எஃப்ஐஆர் திரைப்படத்தை தடை செய்யக்கோரி புகார்

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர். திரைப்படம் தமிழகத்தில் நாளை திரையரங்குகளில் வெளிவர உள்ள நிலையில், இந்த திரைப்படத்தை உடனடியாக தடை செய்யக்கோரி இந்திய தேசிய லீக் கட்சி தலைவர் தடா ரஹீம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தடா ரஹீம், “எப்.ஐ.ஆர் திரைப்பட ட்ரெய்லரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்போல் சித்தரித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால், இத்திரைப்படத்தை உடனடியாக தமிழகத்தில் தடை செய்ய வேண்டும். ஏற்கெனவே, எப்.ஐ.ஆர். திரைப்படம் … Read more