ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஆதியின் 'கிளாப்'
பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ஆதி, ஆகன்க்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கிளாப்'. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் … Read more