லதா மங்கேஷ்கரின் சொல்ல மறந்த காதல் கதை..!அவர் யாரை காதலித்தார் தெரியுமா ?

இந்தியாவிலேயே புகழ் பெற்ற பாடகியான லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் சிலநாட்களுக்கு முன் காலமானார். 92 வயதான லதா மங்கேஷ்கர் 1942 ஆம் ஆண்டு முதலே சினிமா துறையில் பாடி வருகிறார். கிட்டத்தட்ட 30 ஆயிரம் பாடலுக்கு மேல் பாடியுள்ள லதா தமிழில் மூன்றே மூன்று பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். இருப்பினும் தமிழ் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட பாடகியாகவே அவர்களது மனதில் இடம்பெற்றுள்ளார் லதா. தற்போது அவர் பிரிந்தது அனைத்து சினிமா ரசிகர்களையும், சினிமா துறையை சார்ந்தவர்களையும் வருத்தத்தில் … Read more

‛ராக் வித் ராஜா' – சென்னையில் இளையராஜா இசை நிகழ்ச்சி

தலைமுறை கடந்து வாழும் இசையமைப்பாளர் இளையராஜா இசைக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் ஏராளம். ஏராளமான இசை கச்சேரிகள் நடத்தி உள்ளார். சென்னையை தொடர்ந்து சிங்கப்பூரில் நடக்க இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கொரோனாவால் தடைபட்டது. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின் சென்னையில் மீண்டும் இளையராஜா இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது. மார்ச் மாதம் நடக்க உள்ள அந்த நிகழ்ச்சிக்கு, ராக் வித் ராஜா என தலைப்பு வைத்துள்ளனர். இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

Dhanush:தனுஷின் நிறைவேறாத ஆசை, கடைசி வரைக்கும் நிறைவேறாதோ?

தன்னை, தன் தொழிலை காதலித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பெற்றோர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார் தனுஷ் . திருமணம் நடந்து 18 ஆண்டுகள் கழித்து அவர்கள் பிரிந்துவிட்டார்கள். தனுஷ், ஐஸ்வர்யா பிரிய ‘ஸ்…ஸ்’ தான் காரணமா? திரையுலகில் நடிப்பு ராட்சசன் என்று பெயர் எடுத்தவர் தனுஷ். எந்த ஒரு நடிகருக்கும் ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதே போன்று எந்த ஒரு இயக்குநருக்கும் ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க வேண்டும் என்கிற … Read more

மம்முட்டியின் சிபிஐ-5ஆம் பாகத்தில் இணைந்த கனிகா

மம்முட்டி நடிப்பில் கடந்த முப்பது வருடங்களில் நான்கு பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ஒரு சிபிஐ டைரி குறிப்பு. தற்போது இந்தப்படத்தின் ஐந்தாம் பாகத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கே.மது இயக்கிவரும் இந்தப்படத்தில் கனிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மதுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தி உள்ளார் கனிகா. மஞ்சு வாரியரை போலவே ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய கனிகா, … Read more

டைமிங்கில் தட்டி தூக்கும் தளபதி.இதுதான் விஜய்யின் வெற்றி ரகசியமோ ?

நடிகர் விஜய் ஆரம்பகாலகட்டத்தில் எவ்வளவு விமர்சனங்களை சந்தித்தாரா அந்த அளவிற்கு தற்போது புகழை சந்தித்து வருகிறார். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி தன் அயராத உழைப்பால் இன்று வசூல் சக்ரவர்த்தியாக உருவெடுத்துள்ளார். தன் ஒவ்வொரு படங்களிலும் வசூலில் உச்சத்தை தொடும் விஜய் கடந்த கொரோனா சூழலிலும், திரையரங்கிற்க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட சூழலிலும் மாஸ்டர் படத்தை வெளியிட்டார். 50 % இருக்கைக்கே திரையரங்கில் அனுமதி அளிக்கப்பட்டபோதும் மாஸ்டர் படம் வசூலில் அடித்து நொறுக்கியது. இது … Read more

ஸ்ரீவள்ளியை பாடிய எம்மா ஹீஸ்டர்ஸ்

உலக புகழ்பெற்ற பாடகி எம்மா ஹீஸ்டர்ஸ். டச்சு நாட்டுக்காரர். இவரது பாடல்கள் உலகம் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடலை ஆங்கிலமும், ஹிந்தியும் கலந்து பாடி வீடியோ வெளியிட்டிருக்கிறார். புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஸ்ரீவள்ளி பாடல் உலகம் முழுக்க பரவி உள்ளது. பல முன்னணி பாடகர்கள், பாடகிகள் அதனை பாடி வெளியிட்டிருக்கிறார்கள். இந்த பாடலை தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். … Read more

செம்ம ஹாப்பி மூடில் தலைவர், தளபதி ரசிகர்கள்… நாளைக்கு தரமான சம்பவம் இருக்கு..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் … Read more

நடிகர் மோகன் சர்மாவுக்கு கொலை மிரட்டல் : போலீசில் புகார்

தென்னிந்திய சினிமாவில் குணசித்ர நடிகராக இருப்பவர் மோகன் சர்மா. தமிழில் ஏணிப்படிகள், கண்ணெதிரே தோன்றினாள். அப்பு, பிரண்ட்ஸ், சச்சின், தவம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கிராமம் என்ற மலையாள படத்தையம், நம்ம கிராமம் என்ற தமிழ் படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் கேரள அரசின் விருதை பெற்றது. மோகன் சர்மா நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் கூறியதாவது:ஒரு நாள் நான் வெளியில் … Read more

கர்ப்பிணியை பார்த்து பாடி ஷேமிங் பண்றதெல்லாம் மிருகத்தனம்… கடுமையாக விளாசிய காஜல் அகர்வால்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால் . கடந்த 2020 ஆம் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிட்சுலுவை காதலித்து திருமணம் செய்தார் காஜல் அகர்வால். பிரேம்ஜிக்கு பொண்ணு செட் ஆயிருச்சா? இவரதான் கட்டிக்கப்போறாரா? தீயாய் பரவும் போட்டோஸ்! தற்போது நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக உள்ளார். தற்போது துபாயில் கணவருடன் ஓய்வை கழித்து வரும் காஜல் அகர்வால் தன்னுடைய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார். … Read more

வர்ஷினி அர்ஷா தான் இனி புதிய பூவரசி

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'பூவே உனக்காக'. பல முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்து வந்த இந்த தொடரில் சமீபத்தில் நடிகை சாயா சிங்கும் இணைந்தார். விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த தொடரிலிருந்து கதாநாயகியாக நடித்து வந்த ராதிகா ப்ரீத்தி திடீரென விலகிவிட்டார். இந்நிலையில் இந்த தொடரில் புதிய பூவரசியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. தற்போது ராதிகா ப்ரீத்திக்கு இணையாக வர்ஷினி அர்ஷா என்ற மற்றொரு அழகியை கண்டுபிடித்து பூவரசியாக நடிக்க வைக்கவுள்ளனர். … Read more