சோகத்தை மறக்க ரஜினி போட்டுள்ள புதிய திட்டம்: மரண வெயிட்டிங்கில் ரசிகர்கள்..!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் ‘அண்ணாத்த’. இந்தப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இவர்களுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. பலவித நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி ‘அண்ணாத்த’ படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் இயக்குனர் சிவா வீட்டிற்கே சர்ப்ரைஸ் விசிட் … Read more

கவர்ச்சி ரூட்டில் இறங்கிய மீராஜாஸ்மின்

தமிழில் தான் அறிமுகமான ரன் படத்திலேயே ரசிகர்கள் மனதில் ஓடிப்பிடித்து கபடி ஆடியவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதைத்தொடர்ந்து சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் ஒருகட்டத்தில் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு கொஞ்ச காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக மகள் என்கிற படத்தில் டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் சோசியல் … Read more

தனுஷ் சும்மாவே அப்படித் தான், இப்போ சொல்லவா வேண்டும்: நண்பர்கள்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டனர். ஜனவரி 17ம் தேதி இரவு தங்கள் பிரிவு குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். மகன்கள் யாத்ரா, லிங்காவுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று ரஜினி தொடர்ந்து கூறி வருகிறாராம். தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க தொடர் முயற்சி நடந்து வருகிறது. இதற்கிடையே மீண்டும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழும் எண்ணம் இல்லை என்கிறாராம் தனுஷ். இந்நிலையில் தனுஷ் பற்றி நட்பு வட்டாரத்தில் கூறப்படுவதாவது, தனுஷ் … Read more

என்4 : சின்னத்திரை நடிகைகளின் பெரிய திரை

தர்மராஜ் பிலிம்ஸ் மற்றும் பியாட் தி லிமிட் கிரியேஷன் இணைந்து தயாரிக்கும் படம் என்4. லோகேஷ் குமார் இயக்குகிறார். திவ்யங்க் ஒளிப்பதிவு செய்கிறார், பாலசுப்பிரமணியன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் சுந்தரி தொடரில் நடிக்கும் கேப்ரில்லாவும், பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் வினுஷா தேவியும் கதை நாயகிகளாக நடிக்கிறார்கள். இருவருமே டிக்டாக் புகழ் மூலம் சின்னத்திரைக்கு வந்து அதன் வழியாக இப்போது பெரிய திரைக்கு வந்திருக்கிறார்கள். இவர்களுடன் மைக்கேல் தங்கதுரை, அபிஷேக் சங்கர், அனுபமா குமார், வடிவுக்கரசி, … Read more

அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..!

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான படம் ‘ புஷ்பா ‘. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இரண்டு பாகங்களாக தயாரித்துள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. ‘புஷ்பா’ படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டிருந்தது. இந்தப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்திருந்தார். … Read more

கடற்கரையில் தேவதை போல் போஸ் கொடுத்த லாஸ்லியா!

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார் லாஸ்லியா மரியநேசன். ஆரம்பத்தில் அப்பாவி பெண்ணாக இருந்த லாஸ்லியா தற்போது மிகவும் மாடலாகி விட்டார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காக ரசிகர்கள் தவமாய் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில், கடற்கரை மணலில் வெள்ளை உடையில் கையில் பெரிய ரோஜாவுடன் காத்திருக்கும் அழகிய தேவதையாக நிற்கும் லாஸ்லியாவின் புதிய புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா தனது திரைப்பயணத்தை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்தார். அதன் பின் தமிழ்நாட்டில் பிக்பாஸ் … Read more

மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணையும் எஸ் .ஜே .சூர்யா…! என்னபடம் தெரியுமா…?

நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது அடுத்த படத்தில் மெகா சூப்பர் ஸ்டார் ஒருவருடன் இணைந்து நடிக்க போகிறாராம்.அந்த மெகா ஸ்டாருக்கு ஏற்றது போல் டைட்டிலையும் தயார் செய்து விட்டார்களாம். இதை ரசிகர்கள் ஆச்சரியமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1980 களின் கடைசியில் துவங்கி பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. அஜித் நடித்த ஆசை படத்தில் ஆட்டோ டிரைவர் ரோலில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, அடுத்த 4 ஆண்டுகளில் அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கினார். மிகப் … Read more

ஷங்கர், ராம்சரண் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு

ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் 'ஆர்சி 15', அதாவது ராம்சரணின் 15வது படத்திற்கான படப்பிடிப்பு மீண்டும் நாளை பிப்ரவரி 8 முதல் ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் ஆரம்பமாக உள்ளது. அங்கும், அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் படத்தின் முக்கியமான சில காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். ஷங்கர் முதன் முதலாக இயக்கும் நேரடி தெலுங்குப் படம் இது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தை மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிட … Read more

பிரபல இயக்குனரிடம் அடி வாங்கினேன்: பிரியாமணி கூறிய அதிர்ச்சி தகவல்…!

பாரதிராஜா இயக்கிய ’ கண்களால் கைது செய் ’ என்ற தமிழ் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதன் பின்னர் ஒருசில தமிழ் நடித்து வந்த நடிகை பிரியாமணி , தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி. 2006 ஆம் ஆண்டு இயக்குனர் அமீரின் ‘பருத்திவீரன்’ படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்றார் … Read more

தமிழ் சீரியலில் கனிகா

பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமான கனிகா, அதன் பிறகு தமிழ், மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் வாய்ப்பு குறைந்ததும் சின்னத்திரை பக்கம் வந்தார். தொகுப்பாளினியாக இருந்தவர் திருவிளையாடல் என்ற தொடரில் நடித்தார். அதன்பிறகு மலையாளத்தின் பக்கம் சென்றார். அங்கு படங்களிலும், தொடர்களிலும் நடித்தார். தற்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்நீச்சல் என்கிற தொடரில் நடிக்கிறார். ஒரு காலத்தில் பெண்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்ட கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இந்த தொடரை இயக்குகிறார். குடும்பத்துக்காக … Read more