அட போங்கப்பா.. இதே வேலையா போச்சு: மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட போனி கபூர் பட அப்டேட்..!

அருண்ராஜா காமராஜ் நடிகர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பன்முகம் கொண்டவர். இவர் கனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரின் நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்திருந்தார். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் வெளியான இந்த படம் பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருந்தது. வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற இந்தப்படத்தை தொடர்ந்து அருண்ராஜா காமராஜின் இரண்டாவது படம் குறித்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். அதன்படி, ஹிந்தியில் ஹிட்டடித்த ‘ஆர்டிகள் … Read more

லதா மங்கேஷ்கர் தமிழில் பாடிய பாடல்கள்

இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் உடல்நலக் குறைவால் காலமானார். 1942ம் ஆண்டு தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஆரம்பித்த லதா கடந்த 60 வருடங்களில் இந்திய மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பல கதாநாயகிகளுக்குப் பாடியள்ளார். தனித்துவமான அவரது குரல் சமீப கால கதாநாயகிகளுக்கும் கூட பொருத்தமாக இருந்து ரசிகர்களை ரசிக்க வைத்தது. தமிழில் இவரது குரலில் படங்களில் இடம்பெற்று, வெளியான பாடல்களில் மூன்றே மூன்று … Read more

லதா மங்கேஷ்கரின் மறைவு இந்த உலகிற்கே மாபெரும் இழப்பு: இளையராஜா

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்த லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் இசைஞானி இளையராஜா . லதா மங்கேஷ்கர் பற்றி பலரும் அறியாத விஷயத்தை சொன்ன சின்மயி … Read more

இந்திய இசைக்குயில் மவுனம் ஆனது: லதா மங்கேஷ்கர் காலமானார்

மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்னர் டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் நேற்று … Read more

Dhanush வக்கீல்களுடன் தனுஷ் ஆலோசனை: உச்சக்கட்ட பரபரப்பு

தனுஷ் தன் காதல் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிந்துவிட்டார். பிரிவு குறித்து ஜனவரி 17ம் தேதி இருவரும் தனித்தனியே அறிவிப்பு வெளியிட்டனர். பிரிவு குறித்து அறிவித்தாலும் முறைப்படி விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. அவர்கள் சட்டப்படி விவாகரத்து பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கறிஞர்களை சந்தித்து பேசியிருக்கிறார் தனுஷ் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அவர் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தவில்லையாம். ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யாமலேயே வாழ்ந்தால் என்ன ஆகும் என்று … Read more

நேரு சிந்திய கண்ணீர்; பாடகிகளுக்காக கலகக்குரல்; லதா மங்கேஷ்கர் பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்!

லதா மங்கேஷ்கர் பிறந்தது மத்திய பிரதேசம் இந்தூரில். 1929 செப்டம்பர் 28. வீட்டின் முதல் பிள்ளை. அப்பா தீனாந்த் மங்கேஷ்கர், நாடகம் மற்றும் இசை கலைஞர். அம்மா ஷிவந்தி, குஜராத்தி. லதா அவர்களின் பெயரிலுள்ள மங்கேஷ்கர் அப்பாவிடம் இருந்து வந்தது. கோவாவில் உள்ள சொந்த ஊரான மங்கேஷி என்பதைக் குறிக்கிறது. லதாவுக்கு முதலில் வைத்த பெயர் ஹேமா. லதா என்கிற பெயர் அப்பாவின் நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர். லதாவுக்கு பாடல்கள் பயிற்சியானது முதலில் குஜராத்தி … Read more

நானி படத்துக்கு 7 ரிலீஸ் தேதிகள்

விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் தற்போது நானி நடித்துள்ள படம் அன்டே சுந்தரானிக்கி. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்திருக்கும் நடிகை நஸ்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி உள்ள நிலையில் இந்த படத்திற்காக 7 ரிலீஸ் தேதிகளை தேர்வு செய்து வைத்துள்ளதாக பட நிறுவனமும், கதாநாயகன் நானியும் கூறியுள்ளனர். அந்த விதமாக ஏப்ரல் 29 முதல் ஜூன் 27 வரையிலான 7 வாரங்களில் மற்ற … Read more

ஐஸ்வர்யா என்னலாம் செஞ்சார்னு தெரியுமா?: தனுஷ் சொன்னதை கேட்டு அழுத பெற்றோர்

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி அறிவிப்பு வெளியிட்டனர். அவர்கள் பிரிந்து வாழ்ந்தாலும், அவர்களை சேர்த்து வைக்க இரு குடும்பத்தாரும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். நீ ஐஸ்வர்யாவுடன் தான் சேர்ந்து வாழ வேண்டும் என்று அப்பாவும், அம்மாவும் தனுஷிடம் கூறினார்களாம். அப்பா, என் திருமண வாழ்க்கையில் நடந்தது என்னவென்றே உங்களுக்கு தெரியாது. ஐஸ்வர்யா என்னவெல்லாம் செய்தார் தெரியுமா என்று தன் மனதில் இருந்ததை எல்லாம் அரை மணிநேரம் கொட்டித் தீர்த்தாராம் தனுஷ் … Read more

சிபிஐ ஐந்தாம் பாகத்தில் வில்லனாக கன்னட நடிகர்

மம்முட்டி நடிப்பில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படம் அடுத்தடுத்து அதன் நான்கு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக கன்னட நடிகர் ஹரிஷ் ராஜ் என்பவர் நடித்து வருகிறார். கன்னடத்தில் ஹீரோவாகவும் … Read more

இப்படி நடந்துக்கிட்டா எனக்கு கோபம் வராதா ? :ஐஸ்வர்யா

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சமீபத்தில் தங்கள் பிரிவை அறிவித்தனர். இவர்கள் பிரிவுக்கு பல தரப்பிலிருந்து பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த பிரிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இதனால் ரஜினி மிகவும் சோகத்தில் இருக்கின்றார். தன் பிள்ளைகளின் நலனை உணராமல் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார் ரஜினி. தற்போது தன் இல்லத்தில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருக்கின்றார் ரஜினி. இவரின் கோபத்தை தணிக்க லதா தன் மகள் … Read more