பராசக்தி, தூள், ஓ மை கடவுளே – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,6) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – தூள்மதியம் 03:00 – தர்மபிரபுமாலை 06:30 – தெறிஇரவு … Read more

Pandian Stores: நடுத்தெருவில் நிற்கும் கடை பொருள்.. பிரச்சனைகளுக்கு காரணம் யார்.?: புது ட்விஸ்ட்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் மூர்த்தி தம்பிகளுக்கு தனம் அண்ணியாகவும், அவர்களின் மனைவிகளுக்கு அக்காவாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை வழி நடத்தும் பாசமான மனைவியாக பிரதானமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ். ‘ஆனந்தம்’ படத்தில் சீரியல் வெர்ஷன் என பலராலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் கலாய்க்கப்பட்டு வந்தாலும் பலர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது இந்த சீரியல். குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக … Read more

50 நாட்களில் ரூ.365 கோடி வசூலித்த 'புஷ்பா'

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து டிசம்பர் மாதம் 17ம் தேதி வெளிவந்த படம் 'புஷ்பா'. தெலுங்கில் தயாரான இப்படம் ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ஒரே நாளில் வெளியானது. படம் வெளியாகி 50 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் உலகம் முழுவதிலும் ஐந்து மொழிகளையும் சேர்த்து 365 கோடி வசூலித்துள்ளதாக படத்தைத் தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. … Read more

பூவே உனக்காக சீரியலை விட்டு விலகிய கதாநாயகி

ஹிட் தொடர்களில் ஒன்று 'பூவே உனக்காக'. இதில் அஜய் ரத்தினம், விக்னேஷ், தேவி ப்ரியா உள்ளிட்ட முக்கிய சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கதையின் சுவாரசியத்தை கூட்டும் வகையில் இந்த தொடரில் நடிகை சாயா சிங் சமீபத்தில் இணைந்து நடித்து வருகிறார். வில்லியாக அவர் காட்டும் ஆக்ஷன்கள் டிஆர்பிக்கு உதவுகிறது என்றே சொல்லலாம். தற்போது இந்த தொடர் நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தொடரின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி சீரியலிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். பூவே உனக்காக … Read more

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்' மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் … Read more

இயக்குனருடன் சண்டை போட்டு வாய்ப்பு பெற்ற ஜனனி

எம்.கே.என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் படம் கூர்மன். பிரையன் பி.ஜார்ஜ் இயக்கி உள்ளார். ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன், நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசை அமைத்துள்ளார், சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய நடிகை ஜனனி, இயக்குனரிடம் சண்டைபோட்டு இந்த படத்தின் வாய்ப்பை பெற்றதாக கூறினார். அவர் மேலும் கூறியதாவது: இந்த படத்தின் இயக்குனர் பிரையன் ஜார்ஜை, தெகிடி படத்திலிருந்தே தெரியும், அவரிடம் நீங்கள் … Read more

`தூங்கவனம்', விஸ்வரூபம்'ல டப்பிங் ஆர்டிஸ்ட்; இப்போ, கமல் சாரோட பாராட்டு நெகிழும் மணிகண்டன்!

விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், அபிஹாசன், ரித்விகா, கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நாசர் நடித்திருக்கும் திரைப்படம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. இப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையில் வெளியானது. மாறுப்பட்ட கதையம்சம் கொண்ட இப்படத்தை சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் பார்த்துவிட்டு படக்குழுவைப் பாராட்டினார். அதுகுறித்து நடிகர் மணிகண்டனிடம் பேசினேன். மணிகண்டன் ” ராஜ்கமல் புரொடக்‌ஷன்ஸ்ல இருந்து போன் பண்ணுனாங்க. கமல் சார் பார்க்க விரும்புறதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா போய் பார்த்தோம். இதுக்கு முன்னால் … Read more

இந்தியாவின் முதல் விர்ச்சுவல் திரைப்படத்தில் நடிக்கும் பிரித்விராஜ்

இந்திய சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்களை உருவாக்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் தயாரானது. அதேபோல தற்போது விர்ச்சுவல் முறையில் ஒரு படம் முழுவதும் தயாராக இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக இப்படி விர்ச்சுவல் முறையில் தயாராகும் படத்தில் கதாநாயகனாக பிரித்விராஜ் நடிக்கிறார். மலையாளத்தில் உருவானாலும் பான் இந்தியா படமாக ஹிந்தி மற்றும் மற்ற தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் ஒரே … Read more

என்னை ஹீரோவாக்குனது தனுஷ் சார் தான்: வைரலாகும் சிவகார்த்திகேயனின் வீடியோ..!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினா வெளியாகி அண்மையில் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது. சிவகார்த்திகேயனின் இந்த இமாலய வெற்றியை அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடிய வேளையில், புதிய சர்ச்சை ஒன்றும் உருவெடுத்தது. சிவகார்த்திகேயன் சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்றோடு சினிமாவில் 10 ஆண்டுகள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு … Read more

உண்மையாக காதலித்த ஜாக்குலினை விட்டுவிடுங்கள் : மோசடி மன்னன் வேண்டுகோள்

பல கோடி மோசடியில் ஈடுபட்டு தற்போது சிறையில் இருப்பவர் இடைத்தரகரும் மோசடி மன்னனுமான சுகேஷ் சந்திரசேகர். 21க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளது. இவர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டசுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்களும் வெளியானது. இதனால் மோசடி வழக்கை நடத்தி வரும் அமலாக்கத் துறையினர் ஜாக்குலின் பெர்ணான்டசுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் டில்லி திஹார் சிறையில் இருக்கும் … Read more