சாய்னா நேவால் விவகாரம்: காவல்நிலையத்தில் ஆஜராகி மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் ஜனவரி 5-ல் பஞ்சாப் மாநிலம் சென்றபோது அவருக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக அவர் அங்கிருந்து திரும்பினார். இது குறித்துப் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். இந்தப் பாதுகாப்பு குறைபாட்டைக் கண்டித்து பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார். அவரது கண்டனத்தை விமர்சிக்கும் வகையில் சித்தார்த் ட்வீட் ஒன்று செய்திருந்தார். சித்தார்த்தின் இந்த ட்வீட் தரக்குறைவானது என்று பெரும் சர்ச்சைக் கிளம்பியது. … Read more

ஸ்ரீப்ரியா மகளுக்கு நாளை திருமணம்: லண்டன் வங்கி அதிகாரியை மணக்கிறார்

80களில் கனவு கன்னியாக இருந்தவர் ஸ்ரீப்ரியா. ரஜினியுடன் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகை லதாவின் சகோதரர் ராஜ்குமார் சேதுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது மகள் சினேகா. லண்டனின் சட்டம் படித்து அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சினேகா. தற்போது சினேகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. மணமகன் அன்மோல் சர்மா. லண்டனில் இரட்டை எம்பிஏ படித்துள்ள இவர் லண்டனில் உள்ள பாங்க் ஆப் இங்கிலாந்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். சினேகாவுக்கும், அன்மோல் … Read more

வெறித்தனம் கன்பார்ம்.. 'பீஸ்ட்' ரிலீஸ் தேதி குறிச்சாச்சு: கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ பீஸ்ட் ’ படத்தில் நடித்து வந்தார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் … Read more

"சினிமா, அரசியல் இரண்டுமே வணிகம்தான்!"- இயக்குநர் அமீர்

ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட பேராசிரியை, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். ‘கதைப்போமா with பர்வீன் சுல்தானா’ என்ற பெயரிலான அந்த நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான அமீரை சந்தித்து அண்மையில் உரையாடினார். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள். உங்களின் குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? “பொதுவாக என் குடும்பத்தை பற்றி வெளியே பேசுவதில்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டோ விமர்சனமோ அவர்களின் மீது … Read more

விஷ்ணு விஷால் தந்தை மீது சூரி பணமோசடி புகார்: மத்திய குற்றப்பிரிவு விசாரிக்க கோர்ட் உத்தரவு

நடிகர் விஷ்ணு விஷாலும், சூரியும் சில படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த நிலையில் சென்னை சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கித் தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் ஏடிஜிபியுமான ரமேஷ் குடவாலா, மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் என்பவரும் பணமோசடி செய்து விட்டதாக சூரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா முன்னாள் போலீஸ் உயர் அதிகாரி என்பதால் போலீசார் ஒரு தலைபட்சமாக நடந்த கொள்வதாகவும், அதனால் வழக்க சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் … Read more

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்… ஐசியூவில் மீண்டும் வெண்டிலேட்டர் சிகிச்சை!

பிரபல பாடகியான லதா மங்கேஷ்கருக்கு கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டார், மேலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் வெண்டிலேட்டரும் நீக்கப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். அதுக்காகதான் வெய்ட்டிங்… நயன் போட்டோவை … Read more

விஜய்யின் சொகுசுக்கார் வழக்கு: "எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்!"- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் 2005-ம் ஆண்டில் பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரக கார் வாங்கியிருந்தார். 63 லட்சம் மதிப்புள்ள இந்தக் கார் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. விஜய் இந்த காருக்கான சுங்கவரியை முறையாகச் செலுத்தி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்திருந்தார். இந்நிலையில் மாநில நுழைவு வரியைத் தமிழக அரசு வசூலிப்பதற்கான அதிகாரம் உள்ளது, எனவே விஜய் இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 காருக்கான மாநில நுழைவு வரியைத் தமிழ்நாடு … Read more

சீன பெருஞ்சுவரில் ஒலிம்பிக் சுடர் ஏந்தி ஓடிய ஜாக்கிசான்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 20ம்தேதி வரை நடக்கிறது. இதற்கான ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் பெய்ஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. புகழ்பெற்ற சீன அரண்மனை, சீனப் பெருஞ்சுவர் உள்ளிட்ட சீனாவின் முக்கிய அடையாளங்களைக் கடந்து இந்த தீபம் கொண்டு செல்லப்பட்டது. ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தின் இரண்டாம் நாளான நேற்று நடிகர் ஜாக்கிசான் ஒலிம்பிக் தீபத்தை கையில் ஏந்தி சீனப் பெருஞ்சுவரில் தீப தொடர் ஓட்டத்தை … Read more

விவாகரத்து பயம்… ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நடிகையின் பெயருக்கு மாற்றிய பிரபலம்!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ்குந்த்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆபாச படங்களை தயாரித்து விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆபாச படங்களை தயாரித்து மொபைல் ஆப் மூலம் பதிவேற்றி கோடிக் கணக்கில் அவர் சம்பாதித்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இன்னும் அடங்காத தனுஷ்… இருக்குற பிரச்சனை பத்தாதா? கடும் கோபத்தில் ஐஸ்வர்யா! சில மாதங்கள் சிறை வாசத்தை அனுபவித்த ராஜ்குந்த்ரா பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ராஜ் குந்த்ரா மீது ஷெர்லின் சோப்ரா … Read more

திருச்சி – ஊறும் வரலாறு – 29: கரகரப்பாய் ஒரு கலகக் குரல் – நடிகவேள் எம்.ஆர்.ராதா!

பலேபாண்டியா படத்தில் “மாமா மாப்ளே” பாட்டில் முதல்வரியை இப்படித்தான் தொடங்குவார் சிவாஜி, “நீயே என்றும் உனக்கு நிகரானவன்…” இது காட்சிக்கான பாட்டு மட்டுமல்ல. நடிகர் திலகம் சிவாஜி, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்குச் சொன்ன பாராட்டுப் பத்திரமாகும். நடிகவேள் ராதா காலமானபிறகு நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் சிவாஜி சொன்னார், ”ஒரு ஃப்ரேமில் என் முகமும் அண்ணன் ராதாவின் முகமும் அருகருகே வந்தால், நான் ரொம்ப ஜாக்கிரதையாக இருப்பேன். ஒரு நொடியில் சின்ன அசைவில் நம்மை காலி செய்துவிடுவார்.” … Read more