ஓகே சொன்ன சமந்தாவின் மாஜி கணவர்: எதற்கு, யாருக்காகனு தெரியுமா?

தெலுங்கு நடிகரான நாக சைதன்யா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ஆமீர் கானின் லால் சிங் சட்டா படம் மூலம் தான் பாலிவுட் சென்றிருக்கிறார் நாக சைதன்யா. ஆமீர் கானின் நண்பராக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் விஜய் சேதுபதியை தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அதன் பிறகு விஜய் சேதுபதி விலகவே அந்த வாய்ப்பு நாக சைதன்யாவுக்கு கிடைத்தது. ஃபாரஸ்ட் கம்ப் ஹாலிவுட் படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த லால் சிங் சட்டா என்பது குறிப்பிடத்தக்கது. லால் … Read more

தெலுங்கில் பாடகியான அதிதி

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. டாக்டருக்கு படித்த இவர் தற்போது நடிப்பின் மீது கொண்ட காதலால் நடிகை ஆகிவிட்டார். விருமன் படத்தில் கார்த்திக் ஜோடியாக அறிமுகமாகி உள்ள அதிதி அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க இருக்கிறார். விருமன் வெளியீட்டுக்கு பிறகு இந்த படங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது. அதிதி முறைப்படி நடனமும், சங்கீதமும் படித்தவர். எதிர்காலத்தில் சிறந்த பாடகியாகும் திட்டத்திலும் இருக்கிறார். இந்த நிலையில் இசை அமைப்பாளர் தமன், அதிதியை பாடகியாக்கி இருக்கிறார். தமனை பாய்ஸ் … Read more

லிப்டில் சிக்கிக்கொண்ட ‘குக் வித் கோமாளி’ புகழ்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ் . தனது காமெடியான பேச்சு மற்றும் செயல்களால் பலரது உள்ளங்களில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில், திருச்சி தென்னுார் சாலையில் புதியதாக கட்டப்பட்ட பிரியாணி உணவகம் திறப்பு விழாவிற்கு புகழ் சிறப்பு விருந்தினராக சென்றிருந்தார். மூன்றாவது தளத்தில் அமைந்திருந்த ஹோட்டலை திறந்து வைத்த அவர் அதன் பின்னர் தரை தளத்தில் இருந்த நகைக்கடைக்கு செல்ல திட்டமிட்டார். லிப்ட் மூலமாக புகழை அழைத்து செல்ல … Read more

பீஸ்ட் மோட்: இன்று வெளியாகப்போகும் அப்டேட் இதுதான்!

விஜய்யின் ‘பீஸ்ட்’ புரோமோஷன்ஸ் டேக் ஆஃப் ஆகிவிட்டது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே முதன்முறையாக இணையும் படம் ‘பீஸ்ட்’. இதன் ரிலீஸ் வருகிற ஏப்ரல் 14ம் தேதி என்கிறார்கள். இந்நிலையில் இன்று படத்தின் அப்டேட் லோடிங் என அறிவித்திருக்கிறர்கள். இன்று மாலை படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு. இந்த அப்டேட் குறித்தும் படத்தின் இதர தகவல் குறித்தும் படத்தின் தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தோம் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் … Read more

குணமடைந்தார் சிரஞ்சீவி: காட்பாதர் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது

தெலுங்கு நடிகர் சிரஞ்சிவிக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி அறிவித்துவிட்டு தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டார். இதனால் அவர் நடித்து வந்த காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது பூரண நலமடைந்துள்ள சிரஞ்சீவி நேற்று ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கிய காட்பாதர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மோகன்ராஜா இயக்குகிறார். இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து … Read more

அண்ணாமலையாரை தரிசித்த அருண் விஜய்: இப்படி வேண்ட பெரிய மனசு வேணும்

படத்திற்குப் படம் தனது தனித்துவமான நடிப்பாலும் தன்னார்வ தொண்டு செயல்களினாலும் பல ரசிகர்களின் அன்பைப் பெற்றவர் நடிகர் அருண் விஜய் . தனது நடிப்பில் உருவான ‘சினம்’, ‘அக்னிசிறகுகள்’, ‘அருண்விஜய்யின் ‘பார்டர்’, ‘ யானை ’, ‘ஓ மை டாக்’ படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருவதைத் தொடர்ந்து நேற்று (6/02/2022) திருவண்ணாமலை கோயிலில் அண்ணாமலையாரை தரிசித்தார். இறைவனின் அருளோடு அனைத்து படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என … Read more

பலாத்கார வீடியோ வெளியானதாக தகவல் : சுப்ரீம் கோர்ட், பிரதமருக்கு நடிகை கடிதம்

கடந்த 2017ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை திலீப் பார்த்து ரசித்ததாக கூறப்பட்டது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி விட்டதாக … Read more

Dhanush:ஐஸ்வர்யா வேண்டாம், அதே சமயம்…: தனுஷ் அதிரடி

தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். யாத்ரா, லிங்கா என்று இரண்டு வளர்ந்த மகன்கள் இருக்கிறார்கள். மகன்கள் வளர்ந்த பிறகு பிரிந்துவிடலாம் என்று பேசி வைத்து காத்திருந்தார்களாம். இதை அவர்களின் நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்தனர். ஐஸ்வர்யாவை பிரிந்தாலும் அவரை முறைப்படி விவாகரத்து செய்யும் ஐடியா தனுஷுக்கு இல்லையாம். அப்படி விவாகரத்து செய்யாமல் வாழ்ந்தால் ஏதாவது பிரச்சனை வருமா என்று வழக்கறிஞர்களிடம் கேட்டறிந்தாராம். இதற்கிடையே தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து … Read more

`இதுதான் இந்தியா' – வைரலாகும் ஷாருக் கான் புகைப்படம்; பின்னணி இதுதான்!

லதா மங்கேஷ்கர், இந்தியாவின் நைட்டிங்கேல், பிரபல பாடகி தன்னுடைய 92 வயதில் நேற்று பிப்ரவரி 6, காலை 8:12 மணிக்கு மறைந்தார். அவரது மறைவோட்டி இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க உள்ளதாக மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி மகாராஷ்ட்ராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்திருந்தனர். சச்சின் டெண்டுல்கர், ஜாவேத் அக்தர், அனுபம் கெர், இயக்குநர் சஞ்சய் … Read more

லதா மங்கேஸ்கருக்காக வெங்கட்பிரபு எடுத்த முடிவு

மாநாடு வெற்றிப்படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு தான் இயக்கும் 10வது படத்திற்கு ‛மன்மத லீலை' எனப் பெயரிட்டுள்ளார். நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் மற்றும் சம்யுக்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இன்று (பிப்.,6) இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என வெங்கட்பிரபு அறிவித்தார். இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு காரணமாக கிளிம்ப்ஸ் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளனர்.