Vaadivaasal Update: `மே அல்லது ஜூன் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு' – அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் `விடுதலை பாகம் 2′ திரைப்படம் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு `வாடிவாசல்’ படத்திற்கான வேலைகள் தொடங்கும் என முன்பே இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்டிருந்தார். அப்படத்திற்கான பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் வகையில் தயாரிப்பாளர் தாணு வெற்றிமாறன், சூர்யாவுடனான புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இசைக்கான பணியையும் தொடங்கிவிட்டதாக நேற்றைய தினம் நடைபெற்ற கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்தார். சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள … Read more

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள சுழல் 2 எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Suzhal 2 Web Series Review: புஷ்கர் – காயத்திரி எழுத்தில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ள சுழல் 2 வெப் தொடர் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது.

மோசடி பணத்தில் தொடர்பா? ரூ.60 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கும் நடிகைகள்!

Famous Actresses Linked to Crypto Scam?: ரூ. 60 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகைகளை வைத்து விளம்பரம் செய்ததால், அவர்களுக்கும் தொடர்பா? என போலீசார் விசாரிக்க முடிவு.

அன்று `நாளைய இயக்குநர்' போட்டியாளர்கள்; இன்று சினிமாவில் டாப் இயக்குநர்கள் – யார் யார் தெரியுமா?

`நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி சினிமாவில் களம் காண ஆர்வமுடன் இருக்கும் இயக்குநர்களுக்கு ஒரு வாய்ப்பை தேடிக் கொடுத்திருக்கிறது. அப்படி இந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலர் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல ஹிட் படைப்புகளையும் கொடுத்து வருகிறார்கள். கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் `டிராகன்’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தனது சினிமா கரியருக்கான பயணத்தை நாளைய இயக்குநர் நிகழ்ச்சியிலிருந்துதான் தொடங்கினார். அப்படி நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்று தற்போது … Read more

Maragatha Nanayam 2 : மீண்டும் இணையும் ஆதி – நிக்கி கல்ராணி ஜோடி?

நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி, முணீஷ்காந்த், ஆனந்த் ராஜ், டேனியல் ஆண்டனி, மைம் கோபி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற படம் மரகத நாணயம். 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தமிழ் ஹாரர் காமெடி படங்களில் தனித்துவமாக நின்று, இன்றளவும் ரசிகர்களால் புகழப்பட்டு வருகிறது. மரகத நாணயம் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவன் நேற்றைய தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்திய நடிகர் ஆதி, ஏ.ஆர்.கே … Read more

Kingston: `ஜி.வி.பிரகாஷை நடிக்க வேண்டாம்னு சொன்னேன்; அவர் நடிக்க இதுதான் காரணம்..!' – வெற்றிமாறன்

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஜி.வி, இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் சினிமாவில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவர் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட … Read more

Kingston: `பேச்சுலருக்குப் அப்புறம் 3 படங்கள் நடிச்சேன்; ஆனா ரிலீஸாகலை…' – திவ்யபாரதி

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘கிங்ஸ்டன்’. ஜி.வி.பிரகாஷ் புதிதாகத் தொடங்கியிருக்கும் ‘பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ்’ இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் இதில் நடித்திருக்கிறார்கள். அக்‌ஷன், கடல் அட்வென்ச்சர்கள் நிறைந்த இத்திரைப்படம், வரும் மார்ச் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றிருந்தது. இவ்விழாவிற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஸ்வத் மாரிமுத்து, சுதா கொங்கரா உள்ளிட்ட பலரும் சிறப்பு … Read more

VTV : `இந்தக் கதையை பெரிய ஹீரோவுக்காக 6 நாளில் எழுதி முடித்தேன்' – கௌதம் மேனன் பகிர்வு

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான `விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. ரஜினியின் `சந்திரமுகி’ சாந்தி திரையரங்கில் 800 நாள்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அப்படி ஒரு சாதனையை `விண்ணைத் தாண்டி வருவாயா’ படமும் படைத்தது. ரி-ரிலீஸில் சென்னையின் பிரபல மல்டிபிளக்ஸ் ஒன்றில் 750 நாள்களைக் கடந்தும் ஓடியது. இந்தப் படம் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் … Read more

Shruti Hassan: ஷ்ருதி ஹாசனின் ஹாலிவுட் படம்; மும்பை திரைப்பட விழாவில் இன்று திரையிடல்!

`தி ஐ (The Eye)’ என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் ஸ்ருதி ஹாசன். இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு முன்பே வெளியாகியிருந்தது. இன்று இத்திரைப்படம் மும்பை வென்ச் (WENCH) திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் டிரைலர் ஒன்றினை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். சைக்கலாஜிகல் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் டயானா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இதற்கு முன்பு இத்திரைப்படம் லண்டன் சுயாதீன திரைப்பட விழாவில் கடந்த 2023-ம் ஆண்டு திரையிடப்பட்டது. ஸ்ருதி ஹாசன் … Read more

Dragon: `சொல்லி வச்ச மாதிரி சீறும் டிராகன்!' – `டிராகன்' பட வெற்றியைக் கொண்டாடிய `LIK' குழுவினர்!

`டிராகன்’ திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பு கிடைத்திருக்கிறது. `லவ் டுடே’ படத்திற்குப் பிறகு மீண்டும் `டிராகன்’ திரைப்படத்தின் மூலம் ஒரு சென்சேஷனல் ஹிட் கொடுத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். `டிராகன்’ திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் `லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி’ படமும் கூடிய விரைவில் வெளியாகவிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன், எஸ்.ஜே. சூர்யா, பிரதீப் ரங்கநாதன் உள்பட இப்படத்தின் படக்குழுவினர் அனைவரும் `டிராகன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடியிருக்கிறார்கள். View this post on … Read more