எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பி.எஸ் – சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்த எடப்பாடி & கோ!

சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஓபிஎஸ்-க்கே தொடரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வராமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கும், உத்தரபிரதேசம் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கும், கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றம் அதன் பிறகு … Read more

சபாநாயகரை சந்தித்த ஓபிஎஸ்… எடப்பாடி தரப்பிற்கு சரியான செக்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் எந்தவித மாற்றமும் சபாநாயகர் அப்பாவு செய்யவில்லை. இது தரப்பிற்கு சாதகமாக முடிந்துள்ளது. இதன் காரணமாக இன்றைய கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் புறக்கணித்து விட்டனர். இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இன்றைய தினம் சட்டப்பேரவை … Read more

தேனி: புதுமண தம்பதி உட்பட 3 பேர் ஆற்றில் மூழ்கி பலி! – விருந்துக்கு வந்த இடத்தில் விபரீதம்

​தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 24). முன்னாள் ராணுவ வீரரின் மகனான இவர் லண்டனில் பணிபுரிந்து வருகிறார்.​ ​இவர் தாய் மாமா தேனியைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக கோயம்புத்தூரைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. மீட்கப்பட்ட உடல்கள் ​திருமணத்தன்று லண்டனில் இருந்த சஞ்சய் தாய்மாமா கல்யாணத்துக்கு வர முடியாத காரணத்தினால் போடியில் உள்ள வீட்டில் விருந்திற்காக இருவரையும் அழைத்துள்ளார்.​ ​இன்று காலை போடி அருகாமையில் உள்ள … Read more

உ.பி | காசியாபாத்தில் டிவி வெடித்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் எல்இடி டிவி வெடித்த காரணத்தால் 16 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் மேலும் இருவர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்பு படையினர் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு செய்துள்ளனர். டிவி வெடித்து சிதறுவதற்கான தீப்பற்றி எரியக் கூடிய பொருட்கள் ஏதும் இல்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த விபத்துக்கு வோல்டேஜ் ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்தால் டிவி … Read more

தமிழக பாஜக தலைமை மாற்றம்? அண்ணாமலை அன்கோ ஷாக்!

கர்நாடக சிங்கம்: என்னதான் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வந்தாலும், மத்தியிலும் அதிகாரத்தில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர முடியவில்லை என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த ஆதங்கம் கட்சி மேலிடத்துக்கு்ம் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த வருத்தத்தை போக்கும் நோக்கில்தான் துடிப்பான ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த, கர்நாடக சிங்கம் என்று பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அண்ணாமலை, தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4  நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (5-ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு … Read more

`வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் தமிழர்கள் இதை மறக்காதீங்க…’-முக்கியமான வழிகாட்டுதல்கள்!

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குறிப்புகள் வெளியிட்டுள்ளனர். அதில் வெளியாகியுள்ள தகவல்களிபடி, “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் இங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வேலைக்கு செல்ல வேண்டும். சில பேர் சுற்றுலா விசாவை வாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்கையில், அங்கு ஆடு மேய்த்தல், ஒட்டகம் மேய்த்தல் போன்ற பணிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கானவே மத்திய அரசின் நிறுவனம் இருக்கிறது. … Read more

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அக்.9-ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு: மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அறிவிப்பு

சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு மட்டுமே  வரும் 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுமுறை குறித்த குழப்பம் நீடித்த நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தசரா பண்டிகை விடுமுறை இன்றுடன் நிறைவு பெற்றது. நாளை முதல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் செயல்படும் என்று கூறியுள்ளார்.

`பணக்காரர்களாக வாழ ஆசை' – 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த இளைஞர்கள் – டெல்லியில் அதிர்ச்சி!

தெற்கு டெல்லியின் லோதி காலனியில் இரண்டு பேர் ஆறு வயது சிறுவனை கழுத்தை அறுத்து, தலையில் தாக்கி `நரபலி’ கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுவன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸ் அதிகாரி இந்த சம்பவம் குறித்து தெரிவித்திருப்பதாவது, “ குற்றம் சாட்டப்பட்ட விஜய் குமார், அமர் குமார் ஆகியோரும், சிறுவனின் பெற்றோரும் கட்டடத் தொழிலாளர்களாக வேலை செய்து … Read more

காஞ்சிபுரம் | காஸ் கிடங்குக்கு சீல் வைப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஸ் கிடங்கு வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறையினர் அந்த காஸ் கிடங்குக்கு நேற்று சீல் வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தேவரியம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு காஸ் கிடங்கில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்தன. இதில் 12 பேர் காயமடைந்தனர். இதில் பீஹாரைச் சேர்ந்த ஆமோத்குமார் என்ற இளைஞர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும் 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு … Read more