வசூலில் மாஸ் காட்டும் ‘பொன்னியின் செல்வன்’ – 2 நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் சாதனை

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்க பிரபலங்கள் பலரும் முயன்று முடியாதநிலையில், தமிழ் திரையுலகின் 60 ஆண்டுகால கனவை, இயக்குநர் மணிரத்னம் சாத்தியமாக்கியிருக்கிறார். 5 பாகங்கள் கொண்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை, அதுவும் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி வியப்பில் ஆழ்த்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியான இந்த திரைப்படம், கோலிவுட்டில் புதிய சாதனை … Read more

மோசமாகும் சவுக்கு சங்கர் உடல்நிலை: முதல்வர் ஸ்டாலின் தலையிட கோரிக்கை!

ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகராக, பத்திரிகையாளராக கருத்துகளைத் தெரிவித்து வந்த சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதித்துறையில் ஊழல் நிறைந்து இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட சவுக்கு சங்கர், இது தொடர்பாக சில யூடியூப் சேனல்களுக்கும் பேட்டியும் அளித்திருந்தார். இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும், சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உயர் … Read more

பால் பாயிண்ட் பேனாக்கள் வரவால் சாத்தூரில் ‘சரிந்த’ பேனா நிப்புத் தொழில்: கொடி கட்டி பறந்த தொழில் குற்றுயிராக கிடக்கிறது

சாத்தூர்: சாத்தூரில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பேனா நிப்புத் தொழில், பால் பாயிண்ட் பேனாக்களின் வரவால் தற்போது வாழ்வாதாரத்துக்கு போராடி வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் மானியக் கடன்கள் வழங்கி தொழிலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என உற்பத்தியாளர்களும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் முக்கியத் தொழிலாக சேவு தயாரித்தல், தீப்பெட்டி, பட்டாசுத் தொழில் ஆகியவை உள்ளன. இதுதவிர பேனாவுக்கு நிப்புத் தயாரிக்கும் தொழிலும் ஒரு காலத்தில் கொடி … Read more

பொறியியல் கல்லூரிகளுக்கு 5நாள் விடுமுறை! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை (1ந்தேதி) முதல் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் சொந்த ஊருக்கு சென்று விழாவினை சிறப்பிப்பது வழக்கம். அதையொட்டி,  தமிழகஅரசும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இநத் நிலையில்,  சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் … Read more

தமிழகத்தில் அக்.2க்கு பதிலாக நவ.6-ல் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி

அணிவகுப்பு ஊர்வலத்தை அக்டோபர் 2-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ம் தேதி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ம் தேதிக்குள் அதற்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்ததுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் 30-க்கும் … Read more

சூர்யா முதல் மடோன் அஸ்வின் வரை.. குடியரசுத் தலைவரிடம் தேசிய விருது பெற்ற தமிழ் பிரபலங்கள்!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 68-வது தேசிய விருதுகளுக்கு தேர்வான பிரபலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். ஆண்டுதோறும் இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் அதில் பணிபுரிந்த கலைஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் திரைப்பட விழா இயக்குநரகம் தேசிய விருதினை அறிவிக்கும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக தேசிய விருதுகள் தாமதமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020-ம் ஆண்டு பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களுக்கான 68-வது … Read more

கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்…

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதித்த வழக்கில், 6மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சவுக்கு சங்கர், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில், சவுக்கு சங்கரை தமிழகஅரசு நிரந்தர பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே சங்கர் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய நிலையில், அரசு தகவல்களை கசிய … Read more

12ம்வகுப்பில் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம்! அமைச்சர் பொன்முடி…

சென்னை: துணைத்தேர்வு எழுதி 12ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம் என உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடி கூறினார். மேலும்,  ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்திருக்க வேண்டிய தில்லை என்று தெரிவித்தார். ‘சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  ஓ.சி. பேருந்து கட்டணம் பற்றி விளையாட்டாக பேசியதை இவ்வளவு பெரிதுபடுத்த வேண்டியதில்லை என விளக்கம் கொடுத்ததுடன், 12- ஆம் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாண … Read more

‘அச்ச, அம்மே ’ வாசகங்களோடு நெல்லை அருகே கேரள தொடர்புடைய புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு

நெல்லை: நெல்லை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் கேரள தொடர்புடைய பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பாளையங்கோட்டை  அருகே 480 ஆண்டுகளுக்கு முற்பட்ட முன்னீர்பள்ளம் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக முன்னீர்பள்ளம் கேரள மன்னன் பூதல வீர உன்னி கேரள வர்மன் ஆட்சியின் கீழ் இருந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது.  இந்நிலையில் பாளை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் … Read more

ராமநாதபுரம்: அரசுப் பள்ளியில் வினாத்தாள் லீக்; பெண் தலைமை ஆசிரியை உட்பட மூன்று ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தேர்வு நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினமே அந்த வகுப்புகளின் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. தேர்வுக்கு முன்னரே அறிவியல் வினாத்தாள் வெளியானது குறித்து ஆசிரியர் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. அதனையடுத்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டார். லிக் செய்யப்பட்ட வினாத்தாள் அதன்படி ராமநாதபுரம் மாவட்டக் கல்வி … Read more