காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திக்விஜய் சிங் போட்டி…

டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த அசோக் கெலாட், போட்டியிடவில்லை என்று தெரிவித் துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மனு வாங்கியுள்ளார். அவர் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  தலைவர் பதவிக்கு ஒருவருக்கு மேல் தலைவர் போட்டியிட்டால்  மட்டுமே தேர்தல் நடைபெறும் என்றும்,   காலை … Read more

திருமண ஆசை காட்டி ரூ. 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த வழக்கில் இளம் மருத்துவரின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: திருமண ஆசை காட்டி ரூ. 50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்த வழக்கில் இளம் மருத்துவரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாவாலுரை சேர்ந்த தினேஷ் கார்த்திக், பெண் மருத்துவர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு | “சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவு” – சீமான்

சென்னை: “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச் சரியாக முடிவெடுத்த … Read more

புளோரிடாவை தாக்கிய சூறாவளி | வீதிக்கு வந்த சுறா; காற்றின் வேகத்தில் சிக்கிய செய்தியாளர் – வீடியோ

புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் புதன்கிழமை அன்று இயன் என்ற சூறாவளி கரையைக் கடந்தது. அப்போது மோசமான சேதம் அங்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால் சுறாக்கள் சில கடலில் இருந்து வீதிகளுக்கு அடித்து வரப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை தொகுத்து செய்தியாக வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளர் ஒருவர் காற்றின் வேகத்தில் சிக்கி சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டார். இந்த சூறாவளி அமெரிக்காவை தாக்கிய மிகவும் மோசமான சூறாவளிகளில் ஒன்று என சொல்லப்படுகிறது. இந்த சூறாவளி கரையை கடந்தபோது பதிவான … Read more

RSS பேரணிக்கு தமிழ்நாடு காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 471 திருக்கோவில்களில் கையடக்க கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூசைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்க கணினி வாயிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு.. தமிழக காவல்துறை அதிரடி..!

சட்டம் – ஒழுங்கு பிரச்சனை காரணமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பு மற்றும் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ம் தேதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு மற்றும் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து கடந்த 22-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நிகழும் சட்டம் – ஒழுங்கும் பிரச்சனை காரணமாக மத … Read more

குடியரசு தின விழா: அலங்கார ஊர்தி மாதிரிகளை அனுப்ப மத்திய அரசு உத்தரவு!

2023 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்கான அலங்கார ஊர்திகளின் மாதிரிகளை வரும் 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தன்று தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பும், ராணுவத்தின் இசைக் குழுக்களும் மிகவும் புகழ் பெற்றவை. முப்படைகளின் அணிவகுப்பும், பல்வேறு … Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை! 5ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அறிவிப்பு…

டெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு தொடரப்பட்ட மனுமீது அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது, பணமதிப்பு அறிவிக்கப்பட்டு,  5ஆண்டுகளை கடந்து 6வது ஆண்டு தொடங்க உள்ள நிலையில்,  இன்று இந்த அறிவிப்பை உச்சநீதி மன்றம் வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில், இன்று முதல் அரசியல் சாசன பெஞ்ச் நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதன்படி, ஈடபிள்யூஎஸ் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான சவால்கள், தாவூதி போஹ்ரா சமூகத்தில் மதமாற்றம் செய்யும் … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெறக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி மறுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அணிவகுப்பு ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28-ம் … Read more

அச்சுறுத்தும் புதிய வகை டைப்பஸ் காய்ச்சல்!!

‘திருச்சியில் ‘டைப்பஸ்’ என்கிற புதுவகை காய்ச்சல் பரவி வருவதாகவும், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்றும் திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு எச்சரித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் என தினமும் 70 பேர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். அனைவரும் வெளிப்புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதே நேரத்தில் 50 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் ‘டைப்பஸ்’ நோயின் அறிகுறிகளைக் கொண்ட, 73 பேருக்கு எலிசா சோதனை … Read more