தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு….
சென்னை: தமிழ்நாட்டில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுதந்திர தினவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டுகிறார். தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டு சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவினர் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தினர். … Read more