பிரதமர் மோடியுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் நேரில் சந்திப்பு

புதுடெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை பிரதமர் மோடி நேற்று (செவ்வாய் கிழமை) மாலை சந்தித்து பேசினார். இந்த உயர்மட்ட கூட்டத்தில் பல முக்கிய விசயங்கள் … Read more

சாரதா தேவி திருக்கோயில்,, ரேஸ் கோர்ஸ்,, கோயம்புத்தூர்.

சாரதா தேவி திருக்கோயில்,, ரேஸ் கோர்ஸ்,, கோயம்புத்தூர். தல சிறப்பு : சிருங்கேரி மடத்தில் உள்ள சாரதாம்பாள் கோயிலில் நடக்கும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொது தகவல் : சாரதா தேவி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் சன்னதியின் தெற்குப் பக்கத்தில் பால கணபதி, வடக்குப் பக்கத்தில் பாலமுருகன் சன்னதி உள்ளன. விநாயகர் சன்னதியின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி ஆதி சங்கரரின் சன்னதி அமைந்துள்ளது. தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகிறது. … Read more

மே 1- ந்தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் மாற்றம்

திருப்பதி, பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு வரும் மே 1-ந் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என தெறிக்கப்பட்டுள்ளது. எனவே நேரில் வரும் விஐபி பக்தர்களுக்கு வழக்கம் போல் விஐபி பிரேக் தரிசனம் அமல்படுத்தப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவுறுத்துள்ளது. இந்த விஐபி பிரேக் தரிசனத்தை வெள்ளோட்டமாக மே 1-ந்தேதி முதல் … Read more

முப்படைத் தளபதிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

டெல்லி: பஹல்காம்  பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இன்று டெல்லியில்,  முப்படைத் தளபதி களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பிரதமர் மோடி தலைமையில் நாளை கேபினட் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், இந்தியா பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகளை … Read more

அணு ஆயுதம் கொண்டு பாகிஸ்தான் தாக்கினால்… பரூக் அப்துல்லா பதில்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு மந்திரி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தலைமை தளபதி, முப்படைகளின் தளபதிகள் ஆகியோருடனான பிரதமர் மோடியின் சந்திப்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு … Read more

கர்நாடகா: உள்ளூர் கிரிக்கெட்டின்போது 'பாகிஸ்தான் வாழ்க' கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொலை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் நேற்று முன் தினம் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், ஆட்டத்தின்போது மதியம் 3 மணியளவில் ஒரு நபர் ‘பாகிஸ்தான் வாழ்க’ என கோஷம் எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். … Read more

DC vs KKR: 4 in 1-ஆக மாயம் செய்த நரைன்; டெல்லியின் வெற்றியைப் பறித்த அந்த ஒரு மொமென்ட்

நடப்பு ஐபிஎல் சீசனில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி முதல் எல்.எஸ்.ஜி வரையில் டாப் 6 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கின்றன. கடைசி 4 இடங்களில் அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை ஆகியவை ஒவ்வொரு ஆட்டத்தையும் வாழ்வா சாவா என ஆடும் நிலையில் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு போட்டியாகத்தான், டெல்லியை அதன் சொந்த மைதானத்தில் இன்று (ஏப்ரல் 29) எதிர்கொண்டது கொல்கத்தா. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல், இந்த சீசனில் பெரும்பாலான கேப்டன்கள் … Read more

கனடா தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் உட்பட மூன்று தமிழர்கள் வெற்றி

2025 கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆறு தமிழ் வேட்பாளர்களில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் உள்ளிட்ட மூன்று தமிழர்கள் வெற்றிபெற்றுள்ளனர். இந்தத் தேர்தலில் விபரல் கட்சியின் சார்பில் மூவரும், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் இருவரும், பசுமை கட்சியின் சார்பில் ஒருவரும் என மொத்தம் ஆறு தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களில் விபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் Oakville கிழக்கு தொகுதியிலும், Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் ஹரி ஆனந்தசங்கரி, Pickering–Brooklin தொகுதியில் ஜுனிதா … Read more

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமனம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கன்னாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியிருந்தது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் (பி.ஆர்.கவாய்) பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை … Read more

கேரளா: 5 வயது சிறுமியைக் கடித்த தெரு நாய்; தடுப்பூசி போடப்பட்டும் மரணமடைந்த சோகம்; என்ன நடந்தது?

கேரள மாநிலம் மலப்புரம் பெருவள்ளூரைச் சேர்ந்தவர் சல்மான் பாரிஸ். இவரது மகள் ஸியா பாரிஸ். 5 வயது ஆன ஸியா பாரிஸ் கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க நடந்து சென்றுள்ளார். அப்போது ஸியா பாரிஸைத் தெருநாய் ஒன்று ஆக்ரோஷமாகக் கடித்தது. அப்போது அவரைக் காப்பாற்ற வந்த சுமார் 6 பேரையும் அதே தெருநாய் கடித்தது. நாய் கடித்ததில் சிறுமி ஸியா பாரிஸுக்குத் தலை, முகம், உதடு, கை, கால் … Read more